twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    காட்மேன்.. சர்ச்சைக்குரிய வசனம் நீக்கம்..வெளியானது புது டீசர்!

    |

    சென்னை : பிராமணர்களின் சமூகத்தை மையமாக கொண்டு வெளியிடப்பட்ட காட்மேன் வெப்சீரியஸின் டீசரை அதன் அபிசியல் பக்கத்திலிருந்து நீக்கியது ஜீ5 நிறுவனம்.

    Recommended Video

    Godman Web Series கிளப்பிய சர்ச்சை | மதத்தை அவமதிக்கிறதா?

    பல்வேறு தரப்பிலிருந்து எழுந்த கடும் எதிர்ப்பை தொடர்ந்து சர்ச்சைக்குரிய வசனங்களை கொண்ட காட்மேன் டீசரை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக புதிய டீசரை வெளியிட்டுள்ளனர்.

    இந்த வெப்சீரியஸ் வருகிற ஜூன் 12ம் தேதி ஜீ5-ல் வெளியிடப்படுகிறது என அந்நிறுவனம் ஏற்கனவே தெரிவித்திருந்தது. இந்நிலையில் பல பிரச்சனைகளை சந்தித்துவிட்டது காட்மேன்.

    'அந்த' இடத்தில் பட்டாம்பூச்சி டாட்டூ.. ஒரு பக்கத்தை கழட்டி காட்டி மிரள விட்ட நடிகை!'அந்த' இடத்தில் பட்டாம்பூச்சி டாட்டூ.. ஒரு பக்கத்தை கழட்டி காட்டி மிரள விட்ட நடிகை!

    சர்ச்சை வசனங்கள்

    சர்ச்சை வசனங்கள்

    என்னை சுத்தி இருக்குற எல்லா பிராமணர்களும் அயோக்கியனுங்களா இருக்கானுங்க. இந்த உலகத்துக்கு ஒரு பிராமணன் எப்படி இருக்கனும்னு காட்ட போறேன். பிராமணாள் மட்டும் தான் வேதம் படிக்கணும்னு எந்த சாஸ்த்திரத்துல சொல்லி இருக்கு எனவும், ஜெயபிரகாஷ் டேனியல் பாலாஜியிடம் "நீ வேதம் படிக்கணும் அய்யனார்" என்றும் "இந்த உலகத்துக்கு ஒரு பிராமணன் எப்படி இருக்கனும்னு காட்ட போறேன்" போன்ற சர்ச்சைக்குரிய வசங்களுடன் சில நாட்களுக்கு முன் வெளியானது காட்மேன் டீசர்.

    நோ டயலாக்ஸ்

    நோ டயலாக்ஸ்

    இவ்வாறு பலரும் இந்த டீசரில் வரும் சர்ச்சைக்குரிய வசனங்களால் பலர் தங்களின் எதிர்ப்பை முகநூல், வாட்சப், ட்விட்டர் என அனைத்து சமூகவலைத்தளங்களிலும் காட்டி வந்தனர். இதனால் அந்நிறுவனம் சர்ச்சைக்குரிய வசனங்கள் அடங்கிய அந்த டீசரை நீக்கிவிட்டு இப்போது புதிய டீசரை பதிவேற்றம் செய்துள்ளது. டைலாக்ஸ் வெச்சாதானடா பிரச்சனை பண்ணுவீங்க என்ற தோரணையில் எந்த ஒரு வசனமும் இல்லாமல் வெறும் காட்சிகளை மட்டும் வைத்து வெளியிட்டுள்ளது . மேலும் பழைய டீசரில் இருந்த சில காட்சிகளை வெட்டிவிட்டு மீதமுள்ளவற்றை வைத்து புதிய டீசராக வெளியிட்டுள்ளனர்.

    கொச்சை படுத்தும்

    கொச்சை படுத்தும்

    ஒரு குறிப்பிட்ட சமூகத்தை மட்டும் குறிவைத்து தாக்குவதாக பலர் இந்த டீசர் மீதும், அதை தயாரித்த குழுவின் மீதும் பிராமண சமூகத்தை சேர்ந்த பலரும் இதை எதிர்த்தும் இதை வெளியிட கூடாது என வலியுறுத்தியும் வந்தனர். மேலும் எங்கள் பிராமண சமூகத்தை கொச்சை படுத்தும் வகையில் இதில் உள்ள வசனங்கள் இருக்கிறது இதனால் நாங்கள் மனதளவில் பாதிக்கபட்டுள்ளோம் என பல்வேறு இடங்களில் நீதிமன்றத்தில் சில வழக்குகளையும் தொடுத்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது.

    அனுமதிப்பதில்லை

    அனுமதிப்பதில்லை

    இந்த டீசரை பார்த்த பலரும், இதற்கு முன்னரும் OTTல் வெளியிடப்படும் படங்களுக்கும், வெப் சீரியஸ்களுக்கும் சென்சார் தேவை என பலரும் கேட்டுகொண்டு வருகின்றனர். ஆனால் உண்மையில் இது போன்ற தன்னிச்சையாக செயல்படும் OTT பிளாட்பார்ம் நிறுவனங்கள் சென்சார்களை முடிந்தவரை அனுமதிப்பதில்லை. யூ சர்டிபிக்கேட், ஏ சர்டிபிகேட் என்று பல சென்சார் விதி முறைகள் இருந்தாலும் , வெப் சீரீஸ் என்று வந்து விட்டால் பெரும்பாலும் 18+ போன்ற கன்டென்ட்ஸ் தான் அதிகம் வருகிறது என்பது பலரின் குற்றசாட்டு. இந்த வெப்சீரியஸ் வருகிற ஜூன் 12ம் தேதி ஜீ5ல் வெளியிடப்படுகிறது என்று சொல்லி இருந்த வேளையில் இது போன்ற சர்ச்சைகள் எழுவதையடுத்து சொன்னபடி வெப் சீரியஸ் வெளியிடப்படுமா, இல்லை இதிலுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கிய பின் வெளியிடப்படுமா என்பதை நாம் அனைவரும் பொறுத்திருந்துதான் பார்க்கணும்.

    English summary
    Godman webseries teaser removed from zee5
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X