முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் இத்தனை கோடியா? இந்தியாவில் அசுர வேட்டை ஆடும் காட்ஸில்லா vs கிங்காங்!
சென்னை: இயக்குநர் ஆடம் விங்கார்ட் இயக்கத்தில் வெளியாகி உள்ள காட்ஸில்லா vs கிங்காங் திரைப்படம் உலகளவில் மிகப்பெரிய பாக்ஸ் ஆஃபிஸ் வெற்றியை பதிவு செய்துள்ளது.
இந்தியாவில் இந்த திரைப்படம் முதல் நாளிலேயே பல கோடிகளை வசூல் செய்து புதிய சாதனையை படைத்துள்ளது.
கொரோனா கலவரத்துக்கு பிறகு வெளியான ஹாலிவுட் படங்களிலேயே அதிக வசூலை இந்த படம் தான் ஈட்டி உள்ளதாம்.

காட்ஸில்லா vs கிங்காங்
இயக்குநர் ஆடம் விங்கார்ட் இயக்கத்தில் அலெக்ஸாண்டர் ஸ்கார்ஸ்கார்ட், மில்லி பாபி பிரவுன், ரெபெக்கா ஹால் உள்ளிட்ட ஹாலிவுட் பிரபலங்கள் நடிப்பில் இந்த படம் வெளியாகி உள்ளது. தனியாக காட்ஸில்லா படத்திற்கும், கிங்கான் படத்திற்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ள நிலையில், இரண்டு ராட்சத மிருகங்களும் சண்டை போடும் பிரம்மாண்டமாக படமாக இந்த படம் உருவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

லாக்டவுனுக்கு பின்
கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா வைரஸ் பரவல் உலகம் முழுவதும் மிகப்பெரிய பாதிப்பை உண்டாக்கியது. தியேட்டர்கள் எல்லாம் காலவரையின்றி மூடப்பட்டன. இந்நிலையில், நேற்று வெளியாகி உள்ள இந்த படம் உலகம் முழுவதும் வசூல் வேட்டை ஆடியுள்ளதாக பாக்ஸ் ஆஃபிஸ் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

6 கோடி ரூபாய்
மார்ச் 24ம் தேதி இந்தியாவில் வெளியான காட்ஸில்லா vs கிங்காங் திரைப்படம் முதல் நாளில் மட்டுமே 6.4 கோடி ரூபாய் வசூலித்து பிரம்மாண்ட சாதனை படைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த வார முடிவில் 15 முதல் 20 கோடி வசூலை இந்தியாவிலேயே இந்த படம் வசூலிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தைரியமாக இறங்குவார்கள்
காட்ஸில்லா vs கிங்காங் திரைப்படம் இந்தியாவில் இப்படி ஒரு வசூலை குவித்துள்ள நிலையில், தொடர்ந்து ஏகப்பட்ட ஹாலிவு திரைப்படங்களும் விரைவிலேயே வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா பரவல் காரணமாக ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ள ஜேம்ஸ் பாண்ட் திரைப்படம், ஃபாஸ்ட் 9 திரைப்படம் உள்ளிட்ட பல ஹாலிவுட் படங்களை இனி தைரியமாக திரையிடுவார்கள் என தெரிகிறது.


Click it and Unblock the Notifications











