கார் விபத்து.. 18 வயதில் பரிதாபமாக பறிபோன ‘காட்ஜில்லா வெர்சஸ் காங்’ நடிகை கெய்லி ஹோட்டில்

லாஸ் ஏஞ்சல்ஸ்: 'காட்ஜில்லா வெர்சஸ் காங்' திரைப்படத்தில் 'ஜியா' என்ற காதுகேளாத பெண்ணாக நடித்து, சினிமா ரசிகர்களின் இதயத்தில் இடம் பிடித்த, ஹாலிவுட் நடிகை நடிகை கெய்லி ஹோட்டில் கார் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். 18 வயதிலேயே கோர விபத்தில் சிக்கி உயிரிழந்தது பலரை சோகத்தை ஆழ்த்தி உள்ளது.

மேரிலேண்ட் மாகாணத்தில் உள்ள ஐஜாம்ஸ்வில் பகுதியில் செவ்வாய்க்கிழமை ஜூலை 21ந் தேதி அதிகாலை 2:52 கார் பயணம் செய்து கொண்டு இருந்த போது, கார் கட்டுப்பாட்டை இழந்து சுவற்றின் மீது அதிவேகமாக மோதியதே இந்த விபத்திற்கு காரணம் எனக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த கெய்லி ஹோட்டில்
உடனடியாக மீட்கப்ப்டடு மருத்துவமனையில் அனுமதித்த போதிலும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

Hollywood death News

கெய்லி ஹோட்டில்: காதுகேளாத குடும்பப் பின்னணியில் இருந்து வந்த கெய்லி ஹோட்டில், 2017 ஆம் ஆண்டு வெளியான ஒரு தொலைக்காட்சி விளம்பரத்தின் மூலம் பிரபலமானார். அந்த விளம்பரத்தில் சைகை மொழியில் அவர் வெளிப்படுத்திய உணர்ச்சியை கண்டு வியந்த தயாரிப்பாளர்கள், 'காட்ஜில்லா வெர்சஸ் காங்' படத்தில் கெய்லியை அறிமுகப்படுத்தினார்கள். அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, 2024 ஆம் ஆண்டு வெளியான 'Godzilla x Kong: The New Empire' படத்திலும் நடித்தார். 'காங்' மிருகத்திடம் சைகை மொழியில் பேசி, அன்பு காட்டி அவர் செய்த மாயாஜாலக் காட்சிகள் ரசிகர்களை கவர்ந்தது.

கோர விபத்து: 18 வயதிலேயே கெய்லி ஹோட்டில் கார் விபத்தில் சிக்கி உயிரிழந்தது பலரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. கெய்லி பயின்ற காதுகேளாதோர் ஆசிரியர்களும், மாணவர்களும் கெய்லின் மறைவு ஈடுசெய்யமுடியாது இழப்பு என கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்துள்ளனர். கெய்லியின் தந்தை ஜோஷுவா ஹாட்டில், தனது மகளின் பிரிவைத் தாங்க முடியாமல், சைகை மொழியிலேயே ஃபேஸ்புக்கில் "நான் போகவே கூடாது என்று நினைத்த ஒரு பயணத்தை இப்போது மேற்கொள்கிறேன்" என கண்ணீர் மல்க வீடியோ பதிவிட்டுள்ளார். பலரின் கவனத்தை ஈர்த்த ஒரு இளம் நட்சத்திரம் திடீரென சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தது ஹாலிவுட் வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X