Godzilla x Kong: The new empire: காட்ஸில்லா x காங்: ஓர் புதிய சாம்ராஜ்யம்.. மிரட்டலான 2வது ட்ரெயிலர்

சென்னை: ஹாலிவுட் படங்களுக்கு சர்வதேச அளவில் ஏராளமான ரசிகர்கள் காணப்படுகின்றனர். ஹாலிவுட் படங்களில் காணப்படும் பிரம்மாண்டம், அதிகமான பொருட்செலவு ஆகியவை இதற்கு முக்கியமான காரணங்களாக காணப்படுகின்றன. அந்த வகையில் சர்வதேச அளவில் ஏராளமான ரசிகர்களை கவர்ந்த திரைப்படங்கள் காட்ஜில்லா மற்றும் கிங்காங். இந்த படங்களின் கேரக்டர்களை இணைத்து காட்ஸில்லா அண்ட் காங் : ஓர் புதிய சாம்ராஜ்ஜியம் என்ற புதிய திரைப்படம் வரும் மார்ச் மாதத்தில் ரிலீசாகவுள்ளது. முன்னதாக காட்ஸில்லா அண்ட் காங் எனற பெயரில் இந்தப் படத்தின் முந்தைய பாகம் கடந்த 2021ம் ஆண்டில் வெளியானது.

பூமிக்கு எப்போதெல்லாம் ஆபத்து அதிகமாக வருகிறதோ அப்போதெல்லாம் இவர்கள் இருவரும் இணைந்து வந்து பூமியை காப்பாற்றுவதாக இந்த படத்தின் கதைக்களம் காணப்படுகிறது, அந்த வகையில் தற்போது அந்த வரிசையில் அடுத்ததாக விரைவில் திரைக்கு வர உள்ள படம் காட்ஸில்லா அண்ட் காங் : ஓர் புதிய சாம்ராஜ்யம். இந்த படத்தின் ட்ரெய்லர் முன்னதாக கடந்த ஆண்டில் வெளியான நிலையில் தற்போது இதன் இரண்டாவது ட்ரைலரை பட குழுவினர் வெளியிட்டுள்ளனர். 1000 கோடி ரூபாய் பட்ஜெட்டில் மிரட்டலான வகையில் இந்தப் படம் உருவாகியுள்ளது. தற்போது வெளியாகியுள்ள ட்ரெயிலரும் இதற்கு சாட்சியாக உள்ளது.

Godzilla x Kong :The new empire movie 2nd trailer released

காட்ஸில்லா அண்ட் காங் படம்: ஹாலிவுட் படங்கள்: ஹாலிவுட் படங்கள் என்றாலே சர்வதேச அளவில் ஏராளமான ரசிகர்கள் அதற்கு உள்ளனர். அதிலும் பிரம்மாண்டமாக சில கேரக்டர்களை வைத்து எடுக்கப்படும் படங்கள் ரசிகர்களை அதிக அளவில் கவர்ந்து வருகின்றன. அந்த வகையில் காட்ஸில்லா மற்றும் கிங்காங் கேரக்டர்களை வைத்து முன்னதாக படங்கள் வெளியாகி அதிரடி சரவெடியாக ரசிகர்களை கவர்ந்துள்ளன. இதனிடையே இந்த இரு கேரக்டர்களையும் இணைந்து காட்ஸில்லா அண்ட் காங் என முன்னதாக படங்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இதன் அடுத்தக்கட்டமாக தற்போது காட்ஸில்லா அண்ட் காங் : ஓர் புதிய சாம்ராஜ்யம் என்ற படம் வரும் மார்ச் மாதத்தில் வெளியாகவுள்ளது.

காட்ஸில்லா அண்ட் காங்: ஓர் புதிய சாம்ராஜ்யம்: பூமிக்கு எப்போதெல்லாம் ஆபத்து வருகிறதோ அப்போதெல்லாம் காட்ஸில்லா மற்றும் கிங்காங் இணைந்து செயல்பட்டு அந்த ஆபத்திலிருந்து பூமியையும் மக்களையும் காப்பாற்றுவதாக இந்த படங்களின் கதைக்களங்கள் காணப்படுகின்றன. முன்னதாக இந்த வரிசையில் வந்த படங்களில் காட்ஸில்லா மற்றும் காங் இருவரும் அடித்துக் கொள்வதாகவும் கிளைமாக்சில் பூமியின் ஆபத்தை உணர்ந்து இருவரும் இணைந்து வில்லனுக்கு எதிராக சண்டை போடுவதாகவும் காணப்படும். அதேபோல பிரச்சினைகள் முடிவடைந்த பின்னர் இருவரும் தங்களுடைய இருப்பிடங்களுக்கு சென்று விடுவதாகும் காட்டப்பட்டு வந்தது.

2வது ட்ரெயிலர்: தற்போது கார் கிங் என்ற வில்லன் மூலம் வரும் பிரச்சனையை இவர்கள் இருவரும் தீர்த்து வைப்பதாக காட்ஸில்லா அண்ட் காங் : ஓர் புதிய சாம்ராஜ்யம் படத்தின் கதைக்களம் அமைந்துள்ளது. இந்த படத்தின் முதல் ட்ரைலர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களை மிரட்டியது. இந்நிலையில் தற்போது படத்தின் இரண்டாவது ட்ரெய்லர் வெளியாகி உள்ளது. இந்த படத்தை ஆடம் வின்கார்டு இயக்கியுள்ளார். படத்தில் கேலி ஹாட்டல், ரிபெக்கா ஹால், மில்லி பாபி பிரௌன் ஆகியோர் நடித்துள்ளனர். ஆங்கிலத்தில் உருவாகியுள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாக உள்ளது.

பிரம்மாண்டத்தின் உச்சம்: ஆயிரம் கோடி ரூபாய் செலவில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்த படத்தின் டிரைலர் ரசிகர்களை மிரட்டியுள்ளது. முன்னதாக வெளியான முதல் ட்ரெய்லரும் ரசிகர்களை சிறப்பாக என்டர்டைன் செய்த நிலையில் தற்போது இரண்டாவது ட்ரெய்லர் வெளியாகி உள்ளது. இந்த சீரிசின் முந்தைய படம் காட்ஸில்லா அண்ட் காங், கடந்த 2021ம் ஆண்டில் வெளியானது. இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள படத்திற்கு காட்ஸில்லா அண்ட் காங் : தி நியூ எம்பயர் என்று பெயரிடப்பட்டுள்ளது. படம் மார்ச் 15ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் உலகம் முடிவடையும் அச்சுறுத்தலை காட்ஜில்லா மற்றும் கிங்காங் இருவரும் இணைந்து எதிர்கொள்வதாகவும் இதையொட்டிய அவர்களின் செயல்களும் கதைக்களமாக கொள்ளப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X