அன்னையர் தின ஸ்பெஷலாக ரிலீஸாகும் 'கோகுலத்தில் நான்': போஸ்டர், சிங்கிள் இதோ
சென்னை: அன்னையர் தினத்தை முன்னிட்டு கோகுலத்தில் நான் என்ற குறும்படம் வெளியிடப்பட உள்ளது.
வரும் மே மாதம் 12ம் தேதி சர்வதேச அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் அன்னையரை போற்றும் வகையில் கோகுலத்தில் நான் என்ற பெயரில் குறும்படத்தை தயாரித்துள்ளனர்.

சென்னையை சேர்ந்த மருத்துவர் ஜூலியன் தீபக், என்ஜினியர் ஜாக் சுந்தர் மற்றும் வணிகவியல் துறையை சேர்ந்த கமலேஷ் சுப்பிரமணியன் என என்று வெவ்வேறு துறையை சேர்ந்தவர்கள் ஒன்று கூடி குறும்படம் வெளியிட உள்ளனர்.
இந்த குறும்படத்திற்கு மெட்ராஸ், கபாலி போன்ற படங்களுக்கு உதவி ஒளிப்பதிவாளராகவும், செஞ்சிட்டாளே என் காதலே என்ற படத்திற்கு ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றிய மனிஷ் ஒளிப்பதிவாளராக பணி புரிந்துள்ளார்.
கோகுலத்தில் நான் குறும்படத்தை பிரபலங்கள் வெளியிட உள்ளனர். இந்நிலையில் படத்தின் போஸ்டர் மற்றும் பாடல் வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











