மாரடைப்பு.. கோல்மால் பட நடிகை மஞ்சு சிங் காலமானார்.. சோகத்தில் மூழ்கிய திரையுலகம்

மும்பை: பழம்பெரும் பாலிவுட் நடிகை மஞ்சு சிங் மாரடைப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 73.

1979ம் ஆண்டு வெளியான கோல்மால் இந்தி திரைப்படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை மஞ்சு சிங்.

தூர்தர்ஷனில் பிரபல டிவி நடிகையாகவும் நிகழ்ச்சி தயாரிப்பாளராகவும் பல ஆண்டுகள் பணியாற்றி உள்ளார் இவர்.

மஞ்சு சிங்

மஞ்சு சிங்

1948ம் ஆண்டு பிறந்த மஞ்சு சிங் 1979ம் ஆண்டு இயக்குநர் ரிஷிகேஷ் முகர்ஜி இயக்கத்தில் வெளியான கிளாசிக் காமெடி திரைப்படமான கோல்மால் படத்தில் ரத்னா எனும் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார். பாலிவுட் படங்களை தாண்டி தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஏகப்பட்ட ரியாலிட்டி ஷோ மற்றும் தொடர்களில் நடித்து பிரபலமானவர் மஞ்சு சிங்.

குழந்தைகளின் ஃபேவரைட்

குழந்தைகளின் ஃபேவரைட்

தூர்தர்ஷனில் வெளியான Khel Khilone எனும் குழந்தைகளுக்கான ரியாலிட்டி ஷோவை 7 ஆண்டுகள் தொடர்ச்சியாக நடத்தி அசத்தியவர் மஞ்சு சிங். குழந்தைகள் இவரை அன்போடு திதி என்றே அழைப்பார்கள். ஸ்வராஜ், ஷோ டைம் உள்ளிட்ட ஏகப்பட்ட டிவி தொடர்களையும் இவர் தயாரித்து வழங்கி உள்ளார்.

மாரடைப்பு

மாரடைப்பு

தொலைக்காட்சியில் மிகப்பெரிய ஆளுமையாக பல ஆண்டுகள் கோலோச்சிய நடிகை மஞ்சு சிங் கடந்த வியாழக்கிழமை திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக காலமானதாக அவரது மகள் சுபர்ணா மீடியாக்களுக்கு தெரிவித்துள்ளார். ஏப்ரல் 14ம் தேதி காலை 10 மணியளவில் வீட்டிலேயே அவரது உயிர் பிரிந்ததாக தெரிவித்துள்ளார்.

இறுதி சடங்கு

இறுதி சடங்கு

சனிக்கிழமையான நேற்று நடிகை மஞ்சு சிங்கின் இறுதிச் சடங்கை குடும்பத்தினர் நடத்தினர். பாலிவுட் நடிகர்கள், இந்தி டிவி நடிகர்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் மஞ்சு சிங்கின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். விருது பெற்ற எழுத்தாளர் ஸ்வனந்த் கிர்கிரே நடிகையின் மறைவுக்காக நீண்ட இரங்கல் மடல் ஒன்றையும் எழுதி உள்ளார்.

ரசிகர்கள் இரங்கல்

ரசிகர்கள் இரங்கல்

பழம்பெரும் டிவி நடிகையின் மறைவை அறிந்த பாலிவுட் ரசிகர்கள் அவரது மறைவை அறிந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தி உள்ளனர். மகள் சுபர்ணா, ஷாலினி மற்றும் மகன் கெளதம் உடன் மும்பை வீட்டில் வாழ்ந்து வந்த நிலையில், மாரடைப்பு காரணமாக மஞ்சு சிங் காலமானது பாலிவுட் திரையுலகை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X