பிரேமம் இயக்குநரின் ‘கோல்ட்‘ டீசர் அவுட்.. கூலா பாப் கார்ன் சாப்பிடும் நயன்தாரா !
கேரளா : இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் பிருத்விராஜ் சுகுமாரன், நயன்தாரா நடிக்கும் 'கோல்டு' படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.
ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்த இத்திரைப்படம் விரைவில் திரையரங்கில் வெளியாக உள்ளது.
இத்திரைப்படத்தில் பிருத்விராஜின் அம்மா மல்லிகா சுகுமாரன், பிருத்விராஜின் அம்மாவாக நடித்துள்ளார்.

இத்திரைப்படத்தில்,
பிரேமம், நேரம் ஆகிய படங்கள் மூலம் புகழ் பெற்ற இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் ஏழு வருட இடைவெளிக்குப் பிறகு 'கோல்ட்' படத்தை இயக்கி உள்ளார். இத்திரைப்படத்தில் மலையாள நடிகர் பிருத்விராஜ் ஜோஷ் என்ற கதாபாத்திரத்திலும், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா சுமங்கலி உன்னிகிருஷ்ணன் கேரக்டரிலும் நடித்துள்ளனர்.

கோல்ட்
கோல்ட் டீசரை, மாஜிக் ஃப்ரேம்ஸ் என்ற யூட்யூப் சேனல் வெளியிட்டுள்ளது. இதில் தவறு செய்பவர்களை துணிச்சலுடன் தட்டி கேட்கும் இளைஞனாக பிருத்விராஜ் வருகிறார். மேலும், நயன்தாரா சோபாவில் கூலாக அமர்ந்து கொண்டு பாப் கார்ன் சாப்பிடுவதைப் போல டீசர் வெளியாகி உள்ளது. தற்போது வெளியான இந்த டீசர் இணையத்தில் வைரலாகி உள்ளது.

பல முன்னணி நடிகர்கள்
கோல்ட் படத்தை பிருத்விராஜின் சொந்த தயாரிப்பு நிறுவனமான பிருத்விராஜ் புரொடக்ஷன்ஸ் மற்றும் மேஜிக் பிரேம்ஸ் இணைந்து தயாரித்துள்ளது. இப்படத்தில் அஜ்மல் அமீர், செம்பன் வினோத் மல்லிகா சுகுமாரன், ஷம்மி திலகன், வினய் கோட்டை, புபுராஜ், லாலு அலெக்ஸ், சைஜு குருப் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
பிஸியாக
பிரித்விராஜ் டிஜோ ஜோஸ் ஆண்டனியின் ஜன கன மன படத்தின் வெளியீட்டிற்காக காத்திருக்கிறார், நயன்தாரா விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி உள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் ஏப்ரல் 28 ஆம் தேதி திரையில் வெளியாக உள்ளது. அதேபோல அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் பாட் படத்திலும் ஃபஹத் ஃபாசிலுக்கு ஜோடியாக நயன்தாரா ஒப்பந்தமாகி உள்ளார். கடந்த செப்டம்பரில் படத்தின் அறிவிப்பு வெளியான நிலையில், அதன்பிறகு பாட் திரைப்படம் பற்றி எந்த தகவலும் இல்லை.


Click it and Unblock the Notifications











