நல்ல படம் தனக்கு தானே ப்ரமோஷன் பண்ணிக்கும்.. கோல்ட் பட இயக்குநர் சுவாரஸ்யம்!

சென்னை : நேரம், பிரேமம் என வெற்றிப் படங்களை கொடுத்த அல்போன்ஸ் புத்ரன் இயக்கத்தில் இன்னும் சில தினங்களில் கோல்ட் படம் வெளியாகவுள்ளது.

பிரித்விராஜ் மற்றும் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள கோல்ட் படத்திற்கு மிகந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.

முன்னதாக ஓணம் பண்டிகையின்போதே வெளியாகவிருந்த கோல்ட் படம் தவிர்க்க முடியாத காரணங்களால் தற்போது ரிலீஸ் தேதி தள்ளிப் போயுள்ளது.

இயக்குநர் அல்போன்ஸ் புத்ரன்

இயக்குநர் அல்போன்ஸ் புத்ரன்

மலையாளத்தில் நேரம் மற்றும் பிரேமம் என வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குநர் அல்போன்ஸ் புத்ரன். இந்த இரு படங்களுமே தமிழிலும் வெளியாகி ரசிகர்களை வெகுவாக ஈர்த்தவை. பிரேமம் படத்தில் மலர் டீச்சர் கேரக்டர் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. சாய் பல்லவி, அனுபமா, மடோனா ஆகிய நாயகிகளை இந்தப் படம் தென்னிந்திய மொழிப் படங்களுக்கு கொடுத்தது.

 ரிலீஸ் தள்ளிப்போன கோல்ட் படம்

ரிலீஸ் தள்ளிப்போன கோல்ட் படம்

இந்தப் படங்களை தொடர்ந்து 8 ஆண்டுகள் கழித்து தற்போது பிரித்விராஜ், நயன்தாரா லீட் கதாபாத்திரங்களில் நடித்துள்ள கோல்ட் படத்தை இயக்கியுள்ளார் அல்போன்ஸ் புத்ரன். முந்தைய படங்களின் வெற்றி இந்தப் படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக ஓணம் பண்டிகையையொட்டி இந்தப் படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. பின்பு ரிலீஸ் தேதியில் மாற்றம் என அறிவிக்கப்பட்டது.

டிசம்பர் 1ல் ரிலீசாகும் கோல்ட்

டிசம்பர் 1ல் ரிலீசாகும் கோல்ட்

இன்னும் படத்தின் சூட்டிங் நிறைவடையவில்லை என்று அல்போன்ஸ் புத்ரன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்னும் சில தினங்களில் இந்தப் படம் தற்போது ரிலீசாகவுள்ளது. படம் ஓணம் பண்டிகையை தொடர்ந்து அடுத்த வாரத்திலேயே ரிலீசாகவுள்ளதாக அல்போன்ஸ் தெரிவிந்திருந்த நிலையில், படத்தில் இன்னும் வேலைகள் மீதமுள்ளதாகவும் அரைவேக்காட்டு படத்தை ரசிகர்களுக்கு கொடுக்க விரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

பிரமோஷன் குறித்து அல்போன்ஸ் புத்ரன்

பிரமோஷன் குறித்து அல்போன்ஸ் புத்ரன்


இந்நிலையில் டிசம்பர் 1ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ள கோல்ட் படத்திற்கான பிரமோஷன் குறித்த கேள்விக்கு அல்போன்ஸ் புத்ரன் சமூக வலைதளங்களில் பதிலளித்துள்ளார். அதில் நல்ல படத்திற்கு பிரமோஷன் தேவையில்லை என்றும் அது தனக்கு தானே பிரமோஷன் செய்துக் கொள்ளும் என்றும் தெரிவித்துள்ளார். அவரது இந்தப் பதிவு படத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

8 ஆண்டுகள் கழித்து கோல்ட் படம்

8 ஆண்டுகள் கழித்து கோல்ட் படம்


நேரம், பிரேமம் என இரண்டு ப்ளாக்பஸ்டர் ஹிட்களை கொடுத்திருந்த அல்போன்ஸ் புத்ரன், தொடர்ந்து 5 ஆண்டுகள் படங்களை இயக்காமல் இருந்த நிலையில் பகத் பாசில் மற்றும் நயன்தாராவை வைத்து பாட்டு என்ற படத்தை கடந்த 2020ல் அறிவித்தார். ஆனால் சில காரணங்களால் அந்தப் படத்தை தள்ளிவைத்துவிட்டு தற்போது கோல்ட் படத்தை இயக்கி முடித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X