தாலி வாங்க முடியுமா? தங்கம் விலை உயர்வு.. விஷால் பாட்டை வைத்து ட்ரோல் செய்யும் நெட்டிசன்ஸ்!
சென்னை: தங்கம் விலை நாளுக்கு நாள் அதிரடியாக அதிகரித்து வருகிறது. திருமண வயதில் பெண்களை வைத்து இருக்கும் பெற்றோர்கள். திருமணத்தை எப்படி செய்வது என்ற கவலையில் உள்ளனர். தங்கம் விலை தான் அதிரடியாக உயருகிறது என்றால், வெள்ளிவிலையில் அதிகரித்து வருகிறது. ஜனவரி 29ந் தேதி இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 9,520 உயர்ந்தது. இதையடுத்து நேற்று காலையில் சவரனுக்கு 4,800 ரூபாயும், மாலை 2,800 ரூபாயும் என மொத்தமாக ரூ. 7,600 குறைந்தது. இன்று காலை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 7,600 குறைந்து, ஒரு சவரன் ரூ. 1,19,200க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச முதலீட்டாளர்கள் பல நாடுகளில் தங்கம் மற்றும் வெள்ளியில் முதலீடு செய்து வருவதால், தங்கம், வெள்ளியின் விலை தினமும் அதிகரித்து வருகிறது. இந்த அதிரடியான விலையேற்றம் பலருக்கு கவலையை அளித்தாலும், இணையவாசிகள் இதை ட்ரோல் செய்து வருகின்றனர். விஷால் நடித்த 'தாமிரபரணி' படத்தில் ' தாலியே தேவையில்ல நீ தான் பெஞ்சாதி' என்ற பாடல் அதை வைத்து தங்கம் விலை இப்படியே போன தாலி வாங்க கூட பணம் இருக்காது. அப்புறம் தாலி இல்லாமல் தான் கல்யாணம் செய்ய வேண்டும் என்ற வீடியோவை பதிவிட்டுள்ளனர். அதே போல, கோபி மற்றும் சுதாகர் இருவரும் சேர்ந்து தங்கநகை பாவங்கள் என்று ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளனர். அதில், அதிகரித்து வரும் தங்க நகையை பயங்கரமா கிண்டலடித்து உள்ளனர்.
நோ கல்யாணம்: திருமண வயதில் பெண்களை வைத்து இருக்கும் பெற்றோர் ஒரு பக்கம் கவலையில் இருக்க, பெரும்பாலும் திருமணமாகாமல் இருக்கும் 90ஸ் கிட்ஸ், எங்களுக்கு பொண்ணு கிடைப்பதே கஷ்டம், இதுல தங்கம் விலை இப்படி ஏறினால், நோ கல்யாணம், நோ குடும்பம் என மீம்ஸ் போட்டு புலம்பி உள்ளனர்.

மீம்ஸ்: மற்றொரு மீம்ஸ் கிரியேட்டர், சிக்கன் மூலமாக பறவை காச்சல் பரவுது என்று சொல்லி சிக்கன் விலையை குறைச்ச மாதிரி, தங்கம் மூலமா பரவுகிறது என்று சொல்லி இருந்தால், தங்கம் விலை பாதியா குறைச்சி இருக்கும் ஐடியா இல்லாத பசங்க என்று விவேக் சொல்வது போல போட்ட மீம்ஸ் இப்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது பர்ஸில் இருக்கும் காசு எல்லாத்தையும் புடுங்கிட்டு, ஒரு காலி பர்சை கொடுப்பான் பாரு அவன் தான் நகை கடைக்காரன் என்ற நகைச்சுவையான மீம்ஸ் இணையத்தில் பரவி வருகிறது.



Click it and Unblock the Notifications











