நாட்டு நாட்டு பாடல்.. விருதை பெற்றுக்கொண்டார் பாடலாசிரியர் போஸ்.. குவியும் வாழ்த்து
லாஸ் ஏஞ்சல்ஸ்: நாட்டு நாட்டு பாடலை எழுதிய பாடலாசிரியர் சந்திரபோஸ் கோல்டன் குளோப் விருதை இன்று பெற்றுக்கொண்டார். அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.
பாகுபலி படங்களின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானவர் இயக்குநர் ராஜமௌலி. இவர் கடந்த ஆண்டு ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரணை வைத்து ஆர்.ஆர்.ஆர் என்ற படத்தை இயக்கினார். படத்தில் அஜய் தேவ்கன், சமுத்திரகனி, ஆலியா பட் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருந்தனர். படம் ரசிகர்களிடையே வரவேற்பையும் பெற்றது.

1000 கோடி ரூபாய் வசூலை ஆர்.ஆர்.ஆர் திரைப்படம்
சுதந்திர போராட்ட காலத்தை அடிப்படையாக வைத்து ஆர்.ஆர்.ஆர் படம் உருவாகியிருந்தது. உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் 1000 கோடி ரூபாய்வரை வசூல் செய்து சாதனை படைத்தது. மேலும் அமெரிக்காவில் ஒரு திரையரங்கில் இந்தப் படம் திரையிட்டபோது படத்தை பார்த்தவர்களும் வெகுவாக பாராட்டினர்.

கோல்டன் குளோப் விருது வென்ற நாட்டு நாட்டு பாடல்
இந்தச் சூழலில் ஆர்.ஆர். ஆர் படத்த்ல் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் கோல்ட குளோப் விருதுக்கு நாமினேஷன் ஆனது. அதன்படி, பாடலுக்கு இசையமைத்த கீரவாணி கோல்டன் குளோப் விருதை வென்றார். அதேபோல் பாடலை எழுதிய பாடலாசிரியர் சந்திரபோஸும் கோல்டன் குளோப் விருது வென்றதாக அறிவிக்கப்பட்டார்.

கோல்டன் குளோப் விருதை பெற்றுக்கொண்ட சந்திரபோஸ்
இந்நிலையில் கோல்டன் குளோப் விருது வென்ற பாடலாசிரியர் சந்திரபோஸ் விருது வழங்கும் விழாவில் கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. இதனையடுத்து, இன்று அவர் அந்த விருதை கோல்டன் குளோப் அலுவலகத்தில் பெற்றுக்கொண்டார்.
இதுகுறித்து கோல்டன் குளோப் விருதுகளின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "கோல்டன் குளோப் விருது வென்ற நாட்டு நாட்டு பாடலின் பாடலசிரியர் சந்திரபோஸ் இன்று எங்ள் அலுவலகத்தில் விருதினை பெற்றுக்கொண்டார். அவருக்கு மீண்டும் வாழ்த்துகள்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆஸ்கர் ரேஸில் நாட்டு நாட்டு பாடல்
கோல்டன் குளோப் விருது மட்டுமின்றி ஆஸ்கர் ரேஸிலும் நாட்டு நாட்டு பாடல் இருக்கிறது. சிறந்த ஒரிஜினல் பாடல் என்ற பிரிவில் நாமினேஷன் ஆகியிருக்கும் நாட்டு நாட்டு பாடல் நிச்சயம் விருதை வெல்லும் என்ற எதிர்பார்ப்பில் இந்திய திரை ரசிகர்கள் இருக்கின்றனர். முன்னதாக, நாமினேஷனில் இருப்பவர்களுக்கு ஆஸ்கர் அகாடமி விருதுகள் சார்பில் அளிக்கப்பட்ட விருந்தில் சந்திரபோஸும், கீரவாணியும் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications