Golden Globes 2025: All We Imagine As Light படத்துக்கு அடுத்த அங்கீகாரம்.. தட்டித் தூக்க குவியும் வாழ்த்து!
கொச்சி: உலகம் முழுவதும் உள்ள திரைத்துறையினரின் அதிகபட்ச ஆசையே ஆஸ்கார் விருது, கோல்டன் க்ளோப் விருது போன்ற சர்வதேச அளவில் கவனிக்கப்படும் விருதுகளை வெல்வதாகத்தான் இருக்கும். அதேநேரத்தில் பணம், புகழ் சம்பாதிக்கவும் சினிமா துறையை தேர்ந்தெடுப்பவர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள். இப்படியான நிலையில் வளர்ந்து வருகின்ற, இந்தியா போன்ற நாட்டில் இருந்து ஒரு படம் சர்வதேச அங்கீகாரத்தினை வழங்கும் விருதுகளை வெல்லக் கூட வேண்டாம், குறிப்பிட்ட விருதுக்கு ஒரு படம் நாமினேட் செய்யப்பட்டுள்ளது என்றாலே படக்குழுவினருக்கு பெரும் மகிழ்ச்சி வந்துவிடுகின்றது. அப்படியான ஒரு சம்பவம்தான் இப்போது நடைபெற்றுள்ளது. அது குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.
இயக்குநர் பாயல் கபாடியா இயக்கத்தில் வெளியாகி பெரும் பாராட்டுக்களைப் பெற்ற படம் All We Imagine As Light. இந்தப் படத்தில் கனி குருஸ்தி, சாயா கதம், திவ்ய பிரபா மற்றும் ஹிருது ஹாரூன் ஆகியோரது நடித்தனர். படம் பார்த்த இந்திய ரசிகர்கள் மட்டும் இல்லாமல், சர்வதேச அளவிலான ரசிகர்களும் படக்குழுவினருக்கு வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்தனர். All We Imagine As Light என்ற படத்தைப் பொறுத்தவரையில் கேரளாவில் இருந்து மும்பைக்கு, நர்ஸ் வேலைக்காகச் செல்லும் இரண்டு பெண்களை மைய்யப்படுத்தி உருவாக்கப்பட்ட படம். இதில் ஒருவர் மிகவும் அமைதியானவர், அதேநேரத்தில் தனது வாழ்க்கை குறித்து எப்போதும் பயத்துடனே வாழ்பவர். மற்றொரு பெண் எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லாமல், தனது வாழ்க்கையினை மிகவும் அனுபவித்து வாழவேண்டும் என்ற மனநிலையில் இருக்ககூடியவர். இவர்களின் வாழ்க்கை மைய்யப்படுத்திய கதைதான் All We Imagine As Light.

All We Imagine As Light படத்தில் நடிகை திவ்ய பிரபா பல ஆண்களுடன் படுக்கையைப் பகிர்ந்து கொள்வதைப் போன்ற காட்சிகளில் நடித்தார். சில காட்சிகளில் நிர்வாணமாகவும் நடித்திருந்தார். இவரது நடிப்பும் அந்த நடிப்புக்கான தைரியத்தையும் பலரும் வியந்து பாராட்டினர். இந்தப் படம் பிரான்ஸில் நடைபெற்ற 77வது கான்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு, திரைப்படத்துறையில் உயரிய விருதான 'கிராண்ட் பிரிக்ஸ்' விருதை வென்று அசத்தியது. இதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்தனர். உண்மைச் சம்பவத்தை மைய்யப்படுத்தி எடுக்கப்படம் என்பதால் படத்திற்கு சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைத்து வருகின்றது.

கோல்டன் க்ளோப்: அந்த வகையில் All We Imagine As Light படம் கோல்டன் க்ளோப் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதாவது, ஆங்கிலம் அல்லாத சிறந்த படம் மற்றும் சிறந்த இயக்குநர் ஆகிய பிரிவுகளில் கோல்டன் க்ளோப் விருதுகளுக்கு இந்தப் படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளாதால், பலதரப்பட்ட சினிமா ரசிகர்கள் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இது மட்டும் இல்லாமல், படக்குழுவினர் மகிழ்ச்சியாகவும் உள்ளனர்.

முதல் முறை: ஏற்கனவே கான்ஸ் திரைப்பட விழாவில் விருதினை வென்றிருந்தது. மேலும் கோல்டன் க்ளோப் விருதுக்கு சிறந்த இயக்குநர் பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த இயக்குநர் ஒருவர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறை ஆகும். படம் கட்டாயம் விருதினை வெல்லும் என ரசிகர்களும் படக்குழுவினரும் ஆவலுடன் காத்துக் கொண்டு உள்ளனர்.
இசைப்புயல்: ஏற்கனவே ஆஸ்கார் வென்ற இசைப் புயல் ஏ.ஆர். ரகுமானின் ஆடு ஜீவிதம் படம் பின்னணி இசைக்கான ஆஸ்கார் விருதுக்கு நாமினேட் செய்யப்பட்டுள்ளது. இதுவும் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரணம் All We Imagine As Light படமும் ஆடு ஜீவிதம் படமும் நேரடியான மலையாளப் படங்கள் ஆகும். எனவே இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைக்கும் அளவிற்கான படங்களை மட்டும் இல்லாமல், உலகமே மெச்சத்தகுந்த படங்களை மலையாளத் திரையுலகம் கொடுத்து வருகின்றது.



Click it and Unblock the Notifications











