Golden Globes 2026 : இரண்டு விருதுகளை வென்ற அடோலசென்ஸ்.. அந்த சான்விட்ச் சீனுக்காகவே கொடுக்கலாம்!
அமெரிக்கா: 2026ஆம் ஆண்டுக்கான கோல்டன் குளோப் விருது வழங்கப்பட்டுவிட்டது. ரசிகர்கள் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ள தகவலாக இருப்பது அடோலசென்ஸ் வெப் சீரீஸ்க்கு இரண்டு விருதுகள் கொடுக்கப்பட்டுள்ளது தான். சிறந்த லிமிடேட் சீரீஸ் பிரிவில் சிறந்த சீரீஸ் என்ற விருதும், சீரீஸில் நடத்துள்ள ஓவன் கூப்பர் சிறந்த துணை நடிகருக்கான விருதை வென்றார். மொத்தம் 5 பிரிவுகளுக்கு நாமினேஷன் ஆன அடோலசென்ஸ் இரண்டு விருதுகளை வென்றது ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்களைக் குவித்து வருகிறது. மொத்த சீரீஸின் ஒவ்வொரு எபிசோடும் சிங்கிள் ஷார்ட்டில் எடுத்தது போல படமாக்கியதும் பாராட்டுக்களைப் பெற்றது.

நெட் ஃபிளிக்ஸில் ஸ்ட்ரீம் ஆகி வரும் இந்த வெப் சீரீஸில் ரிலீஸ் ஆன காலகட்டத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றது. கடந்த ஆண்டு மார்ச் மதத்தின் இரண்டாவது வாரத்தில் ரிலீஸ் செய்யப்பட்ட இந்த வெப் சீரீஸை ஒரு மாதத்திற்குள்ளாகவே உலகம் முழுவது சுமார் 96 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்கள் பார்த்துள்ளனர். மொத்தம் நான்கு எபிசோட்களைக் கொண்ட சிறிய லிமிடேட் வெப் சீரீஸ் தான் இது. இப்படி இருக்கையில், இந்த வெப் சீரீஸில் நடித்த அனைவரது நடிப்பும் ரசிகர்களுக்கு பெரும் பதற்றத்தை உருவாக்கியது என்றே கூறலாம். அதுவும் விசாரணை கைதியாக இருக்கும் சிறுவன் ஓவன் கூப்பர் சான்விட்ச் சாப்பிடும் காட்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தையும் வரவேற்பையும் ஏற்படுத்தியது.
பாராட்டு: கோல்டன் குளோப் விருது ஓவன் கூப்பருக்கு வழங்கப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியானதும், ரசிகர்கள் பலரும் அந்த சான்விட்ச் காட்சிக்காகவே அவருக்கு விருது கொடுக்கலாம் என்று பாராட்டி வருகிறார்கள். இது மட்டும் இல்லாமல், 13 வயதில் அந்த வெப் சீரிஸில் நடித்த ஓவன் கூப்பர் தனது 16வது வயதில் தனது முதல் வெப் சீரீஸ்க்காகவே கோல்டன் குளோப் விருது வாங்கி உள்ளார். இது மட்டும் இல்லாமல் இவர் ஏற்கனவே எம்மி விருதை வாங்கி இருந்தார். மிகக் குறைந்த வயதில் எம்மி விருது வென்ற நடிகர் என்ற பெருமையைப் பெற்றார். கோல்டன் குளோப் 2026 குறித்த தகவல்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications











