கோல்டன் குளோப்ஸ் 2026: சிறந்த படம் “அடோலசென்ஸ்”.. சிறந்த நடிகர், சிறந்த நடிகை யார்?

பெவர்லி ஹில்ஸ்: திரைப்படங்கள், தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் இந்த ஆண்டு முதன்முறையாக பாட்காஸ்ட்களையும் கௌரவிக்கும் வகையில் நடைபெற்ற 83வது கோல்டன் குளோப் விருது விழா ஜனவரி 11, ஞாயிற்றுக்கிழமை, கலிபோர்னியாவின் பெவர்லி ஹில்ஸிலிருந்து நடைபெற்றது.

நடிகர் டிமொத்தி சலமே தனது "மார்டி சூப்ரீம்" திரைப்படத்துக்கான விருதை பெற்றபோது, அதை தனது பெற்றோர்களுக்கும் காதலி கைலி ஜென்னருக்கும் அர்ப்பணித்து ரசிகர்களை உருக வைத்தார். அதேபோல், "ஹாக்ஸ்" தொடருக்காக மீண்டும் விருது பெற்றார் ஜீன் ஸ்மார்ட். இந்த விழாவை நகைச்சுவை நடிகை நிக்கி கிளேசர் தொகுத்து வழங்கினார்.

லியனார்டோ டிகாப்ரியோ நடித்த "ஒன் பேட்டில் ஆப்டர் அனதர்" திரைப்படம் இந்த ஆண்டு கோல்டன் குளோப்ஸில் 9 பரிந்துரைகளுடன் முன்னணியில் இருந்தது. அதே படத்தில் நடித்த டெயானா டெய்லர், சிறந்த துணை நடிகை விருதை பெற்று அனைவரின் கவனம் ஈர்த்தார். தொலைக்காட்சி பிரிவில், நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட "அடோலசென்ஸ்" தொடர் நான்கு விருதுகளை கைப்பற்றி சாதனை படைத்தது.

golden globes 2026 winners award 2026
Photo Credit:

கோல்டன் குளோப் 2026:

2026 ஆம் ஆண்டின் கோல்டன் குளோப் விருதை பெற்ற வெற்றியாளர்களின் விவரம்'

ஓவன் கூப்பர் - சிறந்த துணை நடிகர்

ஸ்டீபன் கிரஹாம் - லிமிடெட் சீரிஸ் சிறந்த நடிகர்

எரின் டோஹெர்டி - சிறந்த துணை நடிகை

"தி சீக்ரெட் ஏஜெண்ட்" : சிறந்த பிறமொழி திரைப்படம்

"KPop டீமன் ஹண்டர்ஸ்": சிறந்த அனிமேஷன் திரைப்படம்

சிறந்த இயக்குநர்
பால் தாமஸ் ஆண்டர்சன்: (ஒன் பேட்டில் ஆப்டர் அனதர்)

சிறந்த நகைச்சுவை திரைப்பட நடிகர்
டிமொத்தி சலமே: "மார்டி சூப்ரீம்"

சினிமாட்டிக் & பாக்ஸ் ஆபிஸ் சாதனை
"சின்னர்ஸ்"

சிறந்த திரைக்கதை
பால் தாமஸ் ஆண்டர்சன்: (ஒன் பேட்டில் ஆப்டர் அனதர்)

சிறந்த துணை நடிகை
டெயானா டெய்லர் : (ஒன் பேட்டில் ஆப்டர் அனதர்)

சிறந்த துணை நடிகர்
ஓவன் கூப்பர்

மொத்தத்தில், 2026 கோல்டன் குளோப் விருது விழா ஹாலிவுட் கலைஞர்களின் திறமைக்கு மட்டுமல்ல, மனித உணர்வுகளுக்கும் சமூக விழிப்புணர்வுக்கும் மேடையாக அமைந்தது. உணர்ச்சியும் நகைச்சுவையும் கலந்த இந்த இரவு, ரசிகர்களின் நினைவில் நீண்ட நாள் நிற்கும் வகையில் அமைந்தது.

More from Filmibeat

Read more about: winners award
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X