லாக்டவுன் நேரத்தில்.. 2 வது திருமணம் செய்துகொண்ட 'கோலிசோடா 2' நடிகர்.. திரைபிரபலங்கள் வாழ்த்து!

By

கொச்சி: லாக்டவுன் நேரத்தில் இரண்டாவது திருமணம் செய்துகொண்ட தகவலை, பிரபல நடிகர் தெரிவித்துள்ளார்.

Recommended Video

Trisha opens up on her marriage | Actress Gibberish Challenge

விஜய் மில்டன் இயக்கிய கோலிசோடா 2 படத்தில் நடித்தவர் செம்பன் வினோத் ஜோஸ். இதில், தில்லை என்ற கேரக்டரில் நடித்திருப்பார்.

அடுத்து தமிழில் வாய்ப்புகள் வரவில்லை. மலையாளத்தில் ஏராளமானப் படங்களில் நடித்துள்ளார்.

அங்கமாலி டைரிஸ்

அங்கமாலி டைரிஸ்

அங்கு நாயகன், 5 சுந்தரிகள், நார்த் 24 காதம், ஹேப்பி ஜர்னி, டபுள் பேரல், சார்லி, பாவாடா, ஜல்லிகட்டு உட்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். கடைசியாக பகத் பாசில், நஸ்ரியா நடித்துள்ள டிரான்ஸ் படத்தில் நடித்திருந்தார். இடி மழா காற்று உட்பட சில படங்களில் நடித்து வருகிறார். சூப்பர் ஹிட்டான அங்கமாலி டைரிஸ் படத்தின் ஸ்கிரிப்ட் ரைட்டர் இவர்தான்.

2வது திருமணம்

2வது திருமணம்

சில படங்களைத் தயாரித்தும் உள்ளார். இவர் நியூயார்கில் பணியாற்றும் சுனிதா என்ற பிசியோதெரபிஸ்டை திருமணம் கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டு இவர்கள் விவாகரத்து செய்தனர். பின்னர் இப்போது இரண்டாவது திருமணம் செய்துள்ளார், செம்பன் வினோத் ஜோஸ். இதை அவரே அறிவித்துள்ளார்.

லாக்டவுன்

லாக்டவுன்

கோட்டயத்தைச் சேர்ந்த மரியம் தாமஸ் என்பவரைத் திருமணம் செய்துகொண்டதாகவும் மரியம், சைக்காலஜிஸ்ட்டாக பணியாற்றுவதாகவும் அவர் கூறியுள்ளார். காரில் இருவரும் அமர்ந்திருக்கும் போட்டோவையும் பதிவிட்டுள்ளார். லாக்டவுன் காரணமாக திருமணத்துக்கு யாரையும் அழைக்க முடியாததால், நெருங்கிய சொந்தங்கள் மட்டுமே இத்திருமணத்தில் கலந்துகொண்டனர்.

வாழ்த்துக்கள்

வாழ்த்துக்கள்

இதையடுத்து, மலையாள சினிமா பிரபலங்கள் ஆஷிக் அபு, விஜய் பாபு, ஆன் அகஸ்டின் அனுமோல், ரஞ்சித் சங்கர் உட்பட பலர் அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர். லாக்டவுன் காரணமாக, பல நடிகர், நடிகைகள் தங்கள் திருமணத் திட்டங்களை மாற்றி அமைத்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன், நடிகர் மணிகண்டன் ஆச்சாரி, தனது திருமணத்தை எளிமையாக நடத்தினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X