twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ‘ஜிஎஸ்டி வண்டி’... கோலிசோடா 2 வை வித்தியாசமாக விளம்பரப்படுத்தும் படக்குழு!

    கோலிசோடா 2 படம் தொடர்பாக விஜய் மில்டன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    |

    Recommended Video

    கோலிசோடா 2 வை வித்தியாசமாக விளம்பரப்படுத்தும் படக்குழு!-வீடியோ

    சென்னை: ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் இயக்கியுள்ள கோலிசோடா 2 படத்தினை வித்தியாசமான முறையில் விளம்பரப்படுத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.

    2014-ஆம் ஆண்டு ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் 'கோலி சோடா'. தற்போது, அதன் இரண்டாம் பாகத்தை விஜய் மில்டனே ஒளிப்பதிவு செய்து, இயக்கியுள்ளார். முற்றிலும் புதுமுகங்கள் நடித்துள்ள இப்படத்தில், இயக்குநர் சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரத்திலும், இயக்குநர் கெளதம் மேனன் போலீஸாகவும் நடித்துள்ளனர்.

    முதல் பாகம் தங்களுக்கென ஒரு முகவரி தேடும் சிறுவர்களின் கதை என்றால், இரண்டாம் பாகத்தில் தங்களுக்கென கிடைத்த முகவரியை தக்க வைத்துக் கொள்ள இளைஞர்கள் சிலர் நடத்தும் போராட்டமே கதைக்களம்.

    விளம்பர யுக்தி:

    விளம்பர யுக்தி:

    இப்படம் அடுத்தமாதம் 14ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. சென்சாரில் இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.இந்நிலையில், கோலிசோடா 2வை வித்தியாசமான முறையில் விளம்பரப் படுத்த படக்குழு முடிவு செய்துள்ளது.

    ஊர் ஊராக சுற்றும்:

    ஊர் ஊராக சுற்றும்:

    அதன்படி, ஜிஎஸ்டி என்ற வண்டியை படக்குழு ஏற்பாடு செய்துள்ளது. இந்த வண்டியானது மக்களுக்கு பயன்படும் வகையில் தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் சென்று வர இருக்கிறது.

    மாற்றுவழி:

    மாற்றுவழி:

    வழக்கம்போல, படத்தின் விளம்பரங்களை ஊடகங்களில் வெளியிடுவதற்கு மாற்றாக, வித்தியாசமாக நேரடியாகவே மக்களை சென்றடையும் வகையில் இந்த வண்டி பயணம் செய்ய உள்ளது. இதில் பொதுநலத்துடன் தங்களது சுயநலமும் கலந்துள்ளது என்கிறது படக்குழு.

    விஜய் மில்டன்:

    இது தொடர்பாக இப்படத்தின் இயக்குநர் விஜய் மில்டன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு:

    English summary
    The Goli Soda 2 movie team has come up with a new concept of #GSTVANDI for its promotion.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X