நூறு நாட்களைத் தாண்டிய கோலி சோடா
சென்னை: விஜய் மில்டன் இயக்கிய கோலி சோடா இன்று நூறு நாட்களைக் கடந்துள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன் வெளியான பசங்க படத்தில் ஸ்ரீராம், கிஷோர், பக்கடா பாண்டி, முருகேஷ் ஆகிய நான்கு சிறுவர்களை வைத்து எடுக்கப்பட்ட படம் கோலி சோடா.

இயக்குநர் பாண்டிராஜ் வசனம் எழுத, விஜய் மில்டன் ஒளிப்பதிவு செய்து இயக்கியிருந்தார்.
ரசிகர்கள், விமர்சகர்கள் என அனைத்துத் தரப்பிலும் இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
2014-ம் ஆண்டு வெளியான படங்களிலேயே தயாரிப்பாளர்களுக்கு நல்ல லாபம் சம்பாதித்துக் கொடுத்த படம் என்ற பெருமை கோலி சோடாவுக்குக் கிடைத்தது. இதனை பல மேடைகளிலும் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளே வெளிப்படையாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

இன்று அந்தப் படம் 100 நாட்களைக் கடந்துள்ளது. அபிராமி, பிவிஆர் திரையரங்குகளில் நூறுநாட்களைக் கடந்து ஓடுகிறது இந்தப் படம்.


Click it and Unblock the Notifications











