கோலி சோடா.. வெற்றிகரமான 50 நாள்!
பல பெரிய நடிகர்களின் படங்களே திரையரங்குகளை விட்டு ஓட்டம் பிடித்துக் கொண்டிருக்கும் சூழலில், நான்கு சின்னப் பையன்கள் நடித்த கோலி சோடா நல்ல வசூலுடன் 50வது நாளை எட்டியுள்ளது.
திரையுலக வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் இந்த செய்தி பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோலி சோடா
பெரிய நட்சத்திர நடிகர்களோ, விளம்பரங்களோ இல்லாமல் கடந்த ஜனவரி மாதம் வெளியானது 'கோலி சோடா'.

பொங்கல் படங்கள்
அப்போது விஜய், அஜீத் படங்கள் வெளியாகியிருந்தன. ஆனால் அதையெல்லாம் தாண்டி இந்தப் படம் வெற்றிகரமாக ஓட ஆரம்பித்தது.

விஜய் மில்டன்
ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான எஸ்.டி.விஜய் மில்டனின் இயக்கத்தில் வெளிவந்துள்ள இந்தப் படம் தங்களுடைய சொந்த அடையாளத்தை உருவாக்கப் பாடுபட்ட நான்கு சிறுவர்களைப் பற்றிய கதையாகும்.

வசூல்
வெறும் வாய் விளம்பரங்களே இந்தப் படத்தின் உயர்வுக்குக் காரணமாக இருந்துள்ளது. நல்ல விமர்சனங்களைப் பெற்றதுடன் இந்தப் படம் பாக்ஸ் ஆபிசிலும் நல்ல வசூலைப் பெற்றுள்ளது.

முதல் வெற்றி
2014 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் பெரிய வெற்றி பெற்ற படம் என்ற பெருமை கோலி சோடாவுக்குக் கிடைத்துள்ளது. அதிகபட்சம் ரூ 2 கோடிதான் இந்தப் படத்தின் பட்ஜெட். ஆனால் இதுவரை 12 கோடி வசூலித்துள்ளது.

50 நாட்கள்
இப்போது 50 நாட்களைத் தாண்டிய நிலையிலும் குறிப்பிடத்தக்க வசூலுடன் ஓடிக் கொண்டிருக்கிறது கோலி சோடா.

இரண்டாம் பாகம்
இப்படத்தின் இரண்டாவது பாகத்தை எடுக்கவிருப்பதாகக் குறிப்பிட்ட இயக்குனர் விஜய் மில்டன், தன்னுடைய பத்தாண்டு கால திரையுலக வாழ்க்கையில் இதுவே மிகப்பெரிய வெற்றி என்கிறார்.


Click it and Unblock the Notifications











