Don't Miss!
- Lifestyle
Shani Asta 2023: சனி அஸ்தமனமாவதால் ஜனவரி 30 முதல் மார்ச் 5 வரை இந்த ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology
மூன்று அதிநவீன ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை கம்மி விலையில் இறக்கிவிட்ட Fire Boltt.!
- News
ஆளே இல்லையாமே? "அந்த" முடிவை எடுக்க போகும் டிடிவி தினகரன்? ஓபிஎஸ்ஸுக்கு லக்.. அப்போது எடப்பாடி?
- Sports
சச்சினாலேயே முடியவில்லை, மற்றவர்களால் எப்படி முடியும்.. கோலி, ரோகித்துக்கு அஸ்வின் ஆதரவு
- Finance
மாதம் ரூ.5000 வருமானம் வேண்டுமா..அஞ்சலகத்தோடு MIS திட்டம் தான் சரியான சாய்ஸ்..!
- Automobiles
ராயல் என்பீல்டு சூப்பர் மீட்டியோர் 650 பைக்கின் முதல் சர்வீசுக்கான செலவு எவ்வளவு தெரியுமா? நம்பவே முடியல இவ்ளோ
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
கோலி சோடா சாந்தினியை ஞாபகம் இருக்கா.. அந்த பெண்ணுக்கு திருமணமாகி.. குழந்தையே பிறந்துடுச்சாம்!
சென்னை: இயக்குநர் விஜய் மில்டன் இயக்கத்தில் வெளியான கோலி சோடா படத்தில் ஸ்கூல் பெண்ணாக நடித்த நடிகை சாந்தினிக்கு திருமணமாகி ஒரு வயதில் குழந்தையே இருப்பது ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளது.
விஜய் மில்டன் இயக்கிய கோலி சோடா படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது.
அந்த படத்தில் ஹீரோயினாகவும் ஸ்கூல் பெண்ணாகவும் சாந்தினி எனும் அறிமுக நடிகை நடித்திருந்தார்.
வாய்ப்பு
கேட்டால்
மிட்நைட்ல
கால்
பண்றாங்க...வேதனையில்
புலம்பிய
நடிகை!

வாய்ப்பு கிடைத்தது எப்படி
கோலி சோடா படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சாந்தினி. சென்னையிலேயே பிறந்து வளர்ந்து படித்து வந்த சாந்தினி ஹெத்திராஜ் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது, அந்த பெண் நம்ம படத்துக்கு கரெக்ட்டா இருப்பா என நினைத்த விஜய் மில்டன் அவரை ஃபாலோ செய்துள்ளார். விஜய் மில்டன் அவரிடம் நெருங்குவதை பார்த்த சாந்தினி இடியட் அறிவில்லை.. இப்படியா ஒரு பொண்ணை ஃபாலோ பண்ணுவ என திட்டி உள்ளார். பின்னர் அவர் வீட்டுக்கே சென்று பெற்றோர்களிடம் பேசி இந்த படத்தில் நடிக்க சம்மதிக்க வைத்துள்ளதாக சுவாரஸ்ய கதை ஒன்று உள்ளது.

சில படங்களில்
கோலி சோடா படத்தில் ஸ்கூல் யூனிஃபார்மில் நடித்து ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொண்ட சாந்தினி அடுத்து சியான் விக்ரம் நடிப்பில் விஜய் மில்டன் இயக்கிய பத்து எண்றதுக்குள்ள படத்தில் தங்கை கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். ஜீவாவின் சீறு படத்திலும் இவருக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. அதன் பின்னர் ஹீரோயினாக இவர் நடித்த குரங்கு கையில பூமாலை சொதப்பி விடவே சினிமா வாய்ப்புகள் கிடைக்காமல் தவித்து வந்தார்.

திருமணம் ஆகிடுச்சு
ஆனால், நீண்ட காலம் சினிமாவுக்கெல்லாம் இவர் காத்திருக்கவில்லை. உடனடியாக திருமணம் செய்து கொண்டு இல்லற வாழ்க்கையில் இணைந்து விட்டார் சாந்தினி. அவரது கணவர் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வந்த சாந்தினி சமீபத்தில் தனது குழந்தையின் போட்டோக்களை போட்டதை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு திருமணம் ஆகி, குழந்தையே பிறந்துடுச்சா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஒரு வயசுல குழந்தை
கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது குழந்தையின் முதலாம் ஆண்டு பிறந்தநாளை கொண்டாடிய நடிகை சாந்தினி குழந்தையை முதன் முதலாக கையில் ஏந்திய போட்டோவையும் சமீபத்திய போட்டோவையும் போட்டு ரசிகர்களுக்கு இன்பதிர்ச்சி கொடுத்துள்ளார்.