twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கோலி சோடாவும் கோயம்பேடு மார்க்கெட்டும்..!

    By Shankar
    |

    கோயம்பேடு மார்க்கெட்டில் உழைக்கும் இளைஞர்களை மையப்படுத்தி உருவாகி வருகிறது கோலி சோடா எனும் படம்.

    இந்தப் படத்தை இயக்குநர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் மற்றும் ரஃப் நோட் இணைந்து தயாரிக்கின்றனர்.

    ப்ரியமுடன், ஆட்டோகிராப், காதல், வழக்கு எண் 18/9 படங்களின் ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன்தான் இந்தப் படத்தின் இயக்குநர்.

    கடைகளின் பரண்களில்...

    கடைகளின் பரண்களில்...

    கோலி சோடா பற்றி அவர் கூறுகையில், "ஒரு காலை நேரத்தில் கோயம்பேடு மார்கெட் போயிருந்தேன். யத்தேச்சையா கடைகளுக்கு மேலே இருந்த பரணைப் பார்த்தேன். அதில் வரிசையாக நூத்துக்கணக்கான இளைஞர்கள் தூங்கிட்டு இருந்தாங்க. அந்த ஃப்ரேம் எனக்கு ஆயிரம் கதைகள் சொல்லுச்சு.

    நாலு பசங்க

    நாலு பசங்க

    அவங்க யாரு, என்னன்னு விசாரிச்சப்போ கிடைச்ச லைன்தான் "கோலி சோடா". அவங்களுக்கு இந்த மார்க்கெட்டை தாண்டி வேறு எதுவும் தெரியாது. அவங்களுக்குன்னு எந்த அடையாளமும் கிடையாது. வயசாயிருச்சுனா வாழ்க்கை அவ்வளவுதான். வயசானாலும் மார்க்கெட்டை விட்டு போக மாட்டாங்க. கஞ்சா விக்கிறது, டீக்கடை போடுறதுன்னு அங்கேயேதான் சுத்தி வருவாங்க. இப்படிப்பட்ட நாலு பசங்க, நம்ம வாழ்க்கையும் இப்படியே போயிடுமோ, நமக்கான அடையாளம் என்ன?னு யோசிக்கும் போது கதை ஆரம்பிக்குது.

    கோலி சோடா

    கோலி சோடா

    இதனால நம்ம அடையாளத்துக்கு ஏதாவது பிரச்சனை வந்துடுமோ?னு ஏற்கனவே அடையாளத்தோட இருக்கிற கடை முதலாளிங்க யோசிக்கும் போது பிரச்சனை ஆரம்பிக்குது. இப்படி ரெண்டு வெவ்வேற எண்ணங்களோட மோதல் தான் "கோலி சோடா".

    பசங்க ஹீரோக்கள்

    பசங்க ஹீரோக்கள்

    பசங்க படத்துல நடிச்ச பசங்க இப்ப வளர்ந்திருப்பாங்க. அவங்களையே நடிக்க வெச்சேன். அந்த நாலு பேரையும் ஊர்ல இருந்து வரவழைச்சி டெஸ்ட் ஷூட் எடுத்தோம். சனி, ஞாயிறுகள்ல கோயம்பேடு மார்க்கெட்ல காலையில் இருந்து மாலை வரை சுத்த விட்டு அதையும் ஷூட் பண்ணினோம். மார்க்கெட்ல சுத்தின அழுக்கு, நாற்றம் அத்தனையும் அவங்களுக்கு அத்துப்படி ஆகிருச்சு. மூட்டை தூக்கி உடம்பு இறுகணுமே... அதுக்காக ஷூட்டிங்கைத் தள்ளி வெச்சு நாலு பேரையும் ஜிம்முக்கு அனுப்பினோம். அரும்பு மீசைக்காக ஏகப்பட்ட ட்ரீட்மென்ட். நான் நினைச்ச மாதிரி அவங்க உருமாறி வந்த பின்னாடி தான் ஷூட்டிங்க்கு கிளம்பினோம்," என்றார்.

    பாண்டிராஜ்

    பாண்டிராஜ்

    இந்தப் படத்துக்கான வசனங்களை இயக்குநர் பாண்டிராஜ் எழுதியுள்ளார். ஆன்டனி எடிட்டிங்கை கவனிக்க, அருண கிரி இசையமைக்கிறார். கானா பாலா பாடல்களை எழுதியுள்ளார்.

    English summary
    Goli Soda is a new movie directed by cinematographer Vijay Milton based on Koyambedu market life.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X