கோலி சோடா நடிகை ரேணு மீது தாக்குதல் - போலீசில் புகார்

By Shankar

சென்னை: "கோலி சோடா' திரைப்படம் உள்ளிட்ட படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்த நடிகை ரேணு தன்மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக போலீசில் புகார் செய்துள்ளார்.

Goli Soda Renu lodges complaint

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

திருவல்லிக்கேணி பெரிய தெருவைச் சேர்ந்த சிதம்பரம் மகள் ரேணு (20). இவர் அண்மையில் வெளியான "கோலிசோடா' திரைப்படம் மற்றும் "உதிரிபூக்கள்', "அழகி' உள்ளிட்ட தொலைக்காட்சித் தொடர்களில் நடித்தவர்.

ரேணு குடியிருக்கும் வீட்டின் உரிமையாளர்களுக்கும் மற்றொரு பிரிவினருக்கும் இடையே சொத்து பிரச்னை உள்ளதாம். இந்த பிரச்னையின் விளைவாக எதிர் தரப்பைச் சேர்ந்தவர்கள் ரேணு குடும்பத்தினரை வீட்டை காலி செய்யுமாறு தொடர்ந்து கூறி வந்துள்ளனர்.

ஞாயிற்றுக் கிழமையும் அங்கு வந்த எதிர் தரப்பினர், வீட்டை உடனடியாக காலி செய்ய வலியுறுத்தி ரேணு குடும்பத்தினரிடம் தகராறு செய்ததோடு, ரேணுவையும் அவரது தந்தையையும் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ரேணு புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், வேப்பேரியில் உள்ள சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் செய்வதற்காக ரேணு திங்கள்கிழமை வந்தார்.

அங்கிருந்த அதிகாரிகள், திருவல்லிக்கேணி துணை ஆணையரிடம் புகார் தெரிவிக்குமாறு ரேணுவை அனுப்பி வைத்தனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X