ஒரு மாதம் தள்ளிப்போகும் 'கோலிசோடா 2' ரிலீஸ்.. என்ன காரணம்?
சென்னை : விஜய் மில்டன் இயக்கத்தில், ஒளிப்பதிவில் உருவாகியிருக்கும் 'கோலிசோடா 2' திரைப்படம் வரும் மே 18-ம் தேதி ரிலீஸ் ஆகவிருந்தது. ஆனால், தற்போது ஜூன் 14-ம் தேதிக்கு வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
விஜய் மில்டனே தயாரித்திருக்கும் இப்படத்தின் ரிலீஸை தயாரிப்பாளர் சங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க தள்ளிவைத்திருக்கிறார் விஜய் மில்டன். இந்தத் தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் விஜய் மில்டன்.

முற்றிலும் புதுமுகங்கள் நடித்துள்ள 'கோலிசோடா 2' படத்தில் சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இயக்குநரும் தயாரிப்பாளருமான கௌதம் வாசுதேவ் மேனன் இப்படத்தில் வில்லனாக சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கிறார்.
அடுத்த வாரம் மே 18-ம் தேதி சில படங்கள் ரிலீஸுக்கு தயாராக இருப்பதால், இப்படத்தை அடுத்த வாரம் வெளியிட முடியாத நிலை இருக்கிறது. ரஜினியின் 'காலா' படம் வெளியாகும் வரை பல படங்கள் வரிசைகட்டி நிற்பதால் 'காலா' ரிலீஸுக்கு அடுத்த வாரம் ஜூன் 14-ம் தேதி 'கோலிசோடா 2' படத்தை ரிலீஸ் செய்யுமாறு தயாரிப்பாளர் சங்கம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.
இதனையடுத்து படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளிவைத்துள்ளார் விஜய் மில்டன். ஜூன் 14-ம் தேதி திரைக்கு வர இருக்கிறது 'கோலிசோடா' இரண்டாம் பாகம்.


Click it and Unblock the Notifications











