இது கெட்ட கனவாக இருக்கக் கூடாதா, போகும் வயசா இது ரித்தீஷ்?: பிரபலங்கள் வேதனை
Recommended Video

சென்னை: அதற்குள் சென்றுவிட்டீர்களே, இன்னும் நம்ப முடியவில்லை என்று ஜே.கே. ரித்தீஷ் மரணம் குறித்து திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் தெரிவித்துள்ளனர்.
நடிகரும், முன்னாள் எம்.பி.யுமான ஜே.கே. ரித்தீஷ் நேற்று மாரடைப்பால் மரணம் அடைந்தார். தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்ற அவர் சாப்பிட வீட்டிற்கு வந்த நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.
அவரின் திடீர் மரண செய்தி திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள், அரசியல் தலைவர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
வரலட்சுமி
நான் சந்தித்த நல்ல மனிதர்களில் ஒருவர் ஜே.கே. ரித்தீஷ். இது போன்ற திடீர் மரணங்கள் குடும்பத்தாருக்கு பேரதிர்ச்சி அளிக்கும். அவரின் ஆத்மா சாந்தியடையட்டும். நீங்கள் எங்கிருந்தாலும் உங்களை கடவுள் ஆசிர்வதிக்கட்டும் சார். நீங்கள் அருமையான மனிதர் என்று வரலட்சுமி ட்வீட் செய்துள்ளார்.
வெங்கட் பிரபு
அருமையான மனிதர். அதற்குள் சென்றுவிட்டாரே. மனமுடைந்துள்ளேன்...அவரின் ஆத்மா சாந்தியடையட்டும். அவரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார் இயக்குநர் வெங்கட் பிரபு.
சீனு ராமசாமி
ஏழை மக்களுக்கு உதவியவர் ஜே.கே. ரித்தீஷ். அவரின் மரண செய்தி அறிந்து கவலை அடைந்துள்ளேன். அவரின் ஆத்மா சாந்தியடையட்டும் என்று இயக்குநர் சீனு ராமசாமி ட்வீட் செய்துள்ளார்.
ஆர்த்தி
நம்ப முடியவில்லை...இது கெட்ட கனவாக இருக்கக் கூடாதா?? இத்தனை கனவுகள், ஆசைகளுடன் அவரின் ஆத்மா எப்படி சாந்தியடையும். ஜே.கே. ரித்தீஷ் அண்ணா நான் கண்ட வள்ளல்களில் ஒருவர் என்கிறார் நடிகை ஆர்த்தி.
நம்ப முடியவில்லை
ஜே.கே. ரித்தீஷ் நல்ல மனிதர். அவர் இறந்துவிட்டார் என்பதை நம்ப முடியவில்லை என்கிறார் திலீபன்.


Click it and Unblock the Notifications











