Ajithkumar: அஜித்குமார் பெயரில் விபூதி அடிக்க முயற்சி! யாருடா இந்த வேலைய பார்த்தது? அத்தனையும் பொய்!
சென்னை: நடிகர் அஜித் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐரோப்பா ஜிடி3 ரக கார் பந்தையத்தில் கலந்து கொள்ளப்போகின்றார் என்ற தகவல் அனைவரும் அறிந்ததே. அஜித்குமார் தற்போது நடித்து வரும் படங்களின் அப்டேட்டுகள் வருகின்றதோ இல்லையோ, அவர் கலந்து கொள்ளும் ரேஸ் தொடர்பாக அப்டேட்கள் தொடர்ந்து வந்தவண்ணம் உள்ளது. இந்நிலையில் அஜித்குமார் தொடங்கியுள்ள கார் ரேஸ் அணியின் அதிகாரப்பூர்வ வெப் சைட் அதாவது வலைதளம் அறிமுகப்படுத்தப்பட்டதாக நேற்று தகவல்கள் வெளியான நிலையில், அதனை பொய் என அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா மறுத்துள்ளார்.
நடிகர் அஜித்குமாருக்கு நடிப்பு எந்த அளவுக்கு விருப்பமோ அதே அளவுக்கு கார் மற்றும் பைக் ரேஸ்கள் மீதும் ஆர்வம் அதிகம். தான் சினிமா வாழ்க்கையைத் தொடங்குவதற்கு முன்னரே ரேஸ் பந்தையங்களில் பங்கேற்றவர் இவர். இதனால் ஏற்பட்ட விபத்துகளினால் இவருக்கு பலமுறை அடிப்பட்டு அறுவைச் சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளது.

நடிகர் அஜித்குமார், தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படத்தில் நடித்து வருகின்றார். இதில் விடாமுயற்சி அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஏற்கனவே குட் பேட் அக்லி படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விடாமுயற்சி படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுவதால், குட் பேட் அக்லி அஜித்தின் பிறந்த நாளான மே 1ஆம் தேதி ரிலீஸ் செய்ய அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகின்றது.
கார் ரேஸ்: மேலும் அஜித் கார் ரேஸ்க்கும் தயாராகி வருவதால், குட் பேட் அக்லி படத்தின் டப்பிங் பணிகளை பொறுமையாக செய்து கொள்ளலாம் என படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. துபாயில் உள்ள ஆர்டோம் கார் ரேஸ் மைய்யத்தில் ஃபெராரி 488 இ.வி.ஒ சேலஞ் காரை அஜித் குமார் டெஸ்ட் செய்து கொண்டு இருந்த வீடியோவை சில மாதங்களுக்கு முன்னர் பகிர்ந்திருந்தார், அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா. அதில் நடைபெறவுள்ள ஐரோப்பிய ரேஸிங் சீசனுக்கு தயாராகி வருகிறார் என தெரிவித்திருந்தார்.

போலி வெப்சைட்: இந்தத் தகவல் அஜித் ரசிகர்களை குஷிப்படுத்தியது. இதுமட்டும் இல்லாமல், இது தொடர்பாக அவ்வப்போது வீடியோக்களையும் புகைப்படங்களையும் சுரேஷ் சந்திரா பகிர்ந்து வருகின்றார். தற்போது அஜித்குமார் ரேஸிங் என்ற போலியான வலைதளம் உருவாக்கப்பட்டு, அதனை அஜித்குமார் ரேஸிங் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதளம் எனவும் இணையத்தில் வேகமாக பரப்பினர். இதில் அஜித்துடன் சேர்த்து மொத்தம் நான்கு டிரைவர்கள் அணியில் இருப்பதாக வலைதளத்தில் தெரிவித்தும் இருந்தனர். அதாவது, அஜித்குமார், பெல்ஜியமைச் சேர்ந்த கார் ரேஸர் ஃபேபியன் டஃபியக்ஸ், மாத்யூ டெட்ரி மற்றும் கேம் மெக்லியோட் ஆகியோர் உள்ளனர் என அந்த போலி வலைதளத்தில் குறிப்பிடவே, பார்த்தவர்கள் அதனை உணமை எனவும் நினைத்துக் கொண்டனர். இந்தத் தகவல் வேகமாகப் பரவியதும் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா, தற்போது அஜித்குமார் ரேஸிங் என்ற பெயரில் பரவும் வலைதளம் அவர்களின் அதிகாரப்பூர்வ வலைதளம் இல்லை எனவும், தங்களது அதிகாரப்பூர்வ வலைதளம் குறித்த அறிவிப்புகள் முறைப்படி அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

ட்ரிபிள் ட்ரீட்: அடுத்த ஆண்டு அஜித் கார் பந்தையத்தில் கலந்து கொள்வது, அவரது இரண்டு படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ் ஆவது என அஜித் ரசிகர்களுக்கு ட்ரிபிள் ட்ரீட் இருப்பதால் மகிழ்ச்சி மேல் மகிழ்ச்சியான தகவல்கள் வந்தவண்ணம் உள்ளது. இவையெல்லாம் ஒருபுறம் இருக்க, அஜித் ரசிகர்கள் தாங்கள் ஒன்று கூடும் இடங்களில் அஜித்தே.. கடவுளே என முழக்கமிட்டு தங்களது உற்சாகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். தற்போது அஜித்தே கடவுளே என்பது ஒரு ட்ரெண்டாகவே மாறிவிட்டது.சில யூடூயூப் சேனல்களும் இந்த அஜித்தே கடவுளே என்பதை ஒரு தீமாகக் கொண்டு வீடியோக்கள் வெளியிட்டு வருகின்றது.


Click it and Unblock the Notifications











