Ajithkumar: தல டக்கர்டோய்.. தரமான செல்ஃபியை இறக்கிய அஜித்குமார்.. இணையத்தை அலறவிடும் ரசிகர்கள்!

சென்னை: நடிகர் அஜித்குமார் தற்போது குட் பேட் அக்லி படத்தில் நடித்து வருகின்றார். இவரது நடிப்பில் ஏற்கனவே விடாமுயற்சி படம் உருவாகி போஸ்ட் புரடெக்சன் பணிகள் நடைபெற்றுக் கொண்டு உள்ளது. மேலும் இந்தப் படத்தில் ஒரு பாடல் காட்சி மட்டும் எடுக்க வேண்டி இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது. இந்நிலையில் அஜித்குமார் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள GT4 Championship 2025 கார் பந்தயத்தில் கலந்து கொள்ள தீவிர பயிற்சியும் எடுத்து வருகின்றார். இதற்கிடையில் குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பிலும் கலந்து கொண்டு வருகின்றார். இந்நிலையில் அவர் எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டுள்ளது. அவை இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.

பைக் மற்றும் கார் ரேஸில் அதிக ஆர்வம் உடையவர் நடிகர் அஜித்குமார். இதனாலே படப்பிடிப்பு நேரம் மற்றும் குடும்பத்தினருடன் செலவு செய்யும் நேரம் தவிர பிற நேரங்களில் கார் ரேஸ்களுக்கு பயிற்சி செய்வது, கார் ரேஸிற்காக தயாரிக்கப்பட்ட கார்களை ஓட்டிப்பார்ப்பது என பல விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கூட விடாமுயற்சி படத்தில் நடிப்பதற்கு அஜர்பைஜான் செல்வதற்கு முன்னர் ஐக்கிய அமீரகத்திற்குச் சென்று, கார் ரேஸில் கலந்து கொள்ளும் கார் ரேஸ் பந்தயக்காரர்களுடன் கார் ஓட்டினார். இது தொடர்பான வீடியோக்களும் வெளியானது.

ajithkumar ajith good bad ugly

நடிகர் அஜித்குமார் மீண்டும் கார் பந்தயத்தில் ஈடுபட ஆர்வமாக உள்ளார். அவர் 2025 இல் ஐரோப்பிய GT4 சாம்பியன்ஷிப்பில் பங்கேற்க திட்டமிட்டுள்ளார். இங்கிலாந்து , ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அணிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. ஸ்பான்சர்களும் அவர் ஸ்பான்சர் செய்வதில் உற்சாகமாகவும் ஆர்வமாகவும் உள்ளனர் என அதிகாரப்பூர்வமாக தகவல்கள் வெளியானது. இந்தத் தகவல் அஜித் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

ajithkumar ajith good bad ugly

கார் ரேஸ்: அடுத்த ஆண்டு அஜித் கார் பந்தயத்தில் கலந்து கொள்வது, அவரது இரண்டு படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ் ஆவது என அஜித் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி மேல் மகிழ்ச்சியான தகவல்கள் வந்தவண்ணம் உள்ளது. இவையெல்லாம் ஒருபுறம் இருக்க, அஜித் ரசிகர்கள் தாங்கள் ஒன்று கூடும் இடங்களில் அஜித்தே.. கடவுளே என முழக்கமிட்டு தங்களது உற்சாகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். தற்போது அஜித்தே கடவுளே என்பது ஒரு ட்ரெண்டாகவே மாறிவிட்டது.சில யூடூயூப் சேனல்களும் இந்த அஜித்தே கடவுளே என்பதை ஒரு தீமாகக் கொண்டு வீடியோக்கள் வெளியிட்டு வருகின்றது.

ajithkumar ajith good bad ugly

செல்ஃபி: அஜித் நடிக்கும் படங்கள் குறித்த அப்டேட்கள் வருவதைவிடவும் அஜித்தின் நடவடிக்கைகள் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக அவரது புகைப்படங்கள் சமீபகாலமாக அதிகமாக இணையத்தில் வெளிவருகின்றது. இவற்றை அஜித்தின் மேலாளர் அல்லது அஜித்துக்கு நெருக்கமானவர்கள் அல்லது படக்குழுவினர் என யாராவது இணையத்தில் பகிர்ந்து விடுகின்றனர். அப்படியான நிலையில் அஜித் தான் எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. அதில் அஜித்குமார் கருப்பு நிற கூலிங் கிளாஸ் அணிந்து கொண்டு உள்ளர். மேலும் இந்த செல்ஃபி நேற்று அதாவது அக்டோபர் 17ஆம் தேதி மதியம் 12.15க்கு எடுக்கப்பட்டுள்ளது.

ajithkumar ajith good bad ugly

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X