ஓரளவுக்கு வசதி வந்ததும்.. ரஜினியே அதை நினைத்து பார்த்திருக்க மாட்டார்.. அஜித் இப்படி சொல்லி இருக்காரே

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்றாலே, தமிழ் சினிமாவில் பலருக்கும் உத்வேகம் அளிக்கக் கூடியவர். உச்ச நட்சத்திரம் என்ற அந்தஸ்தில் அவர் என்றைக்குமே தன்னை அடைத்துக் கொண்டது கிடையாது. மினி பட்ஜெட் படங்கள் வந்தால் கூட, அந்தப் படங்கள் குறித்து தனது கருத்தை எப்போதும் தெரிவித்து வருகிறார். இப்படியாக அஜித் குமார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்து பழைய பேட்டி ஒன்றில் கூறிய விஷயம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இது தொடர்பான வீடியோவை ரசிகர்கள் இணையத்தில் வேகமாக பகிர்ந்து வருகிறார்கள்.

அஜித் குமார் நடிப்பில் கடைசியாக வெளியான படம், விடாமுயற்சி. இந்தப் படத்தில், லைகாவுக்கு கிட்டத்தட்ட ரூபாய் 127.5 கோடிகள் நஷ்டம் ஏற்பட்டதாக திரைத்துறை வட்டாரத்தில் தகவல்கள் வேகமாக பரவி வருகிறது. மேலும் அஜித் குமார் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் குட் பேட் அக்லி. குட் பேட் அக்லி படத்தின் மீது படக்குழுவினருக்கு மட்டும் இல்லாமல், ரசிகர்களுக்கும் பெரும் நம்பிக்கை உள்ளது. படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி, 24 மணி நேரத்தில் 32 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை கடந்தது.

Ajithkumar Rajinikanth Throwback

அஜித் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து தனது கார் ரேஸில் கவனம் செலுத்தி வருகிறார். அதிலும் குறிப்பாக, துபாயில் நடைபெற்ற ரேஸில் மூன்றாவது இடம் பிடித்து இவரது அஜித் குமார் கார் ரேசிங் அணி அசத்தியது. இதனால் அஜித் ரசிகர்களுக்கு மட்டும் இல்லாமல், ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் பெருமை சேர்த்தார்.

அஜித்: இவர் தற்போது தான் ஊடகங்களை தனது படத்தின் விளம்பரங்களுக்காக பயன்படுத்துவதை தவிர்த்து வருகிறார். ஆனால் இவரது ஆரம்ப காலத்தில் செய்தியாளர்களை சந்தித்து வந்தார். அப்போது, அவர் பேசிய பல விஷயங்கள் இப்போதும் அஜித் ரசிகர்களுக்கு உத்வேகமாக உள்ளது. அப்படி ஒரு பழைய பேட்டியில் அஜித் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்து பேசியது பலரது கவனத்தை ஈர்த்து.

குட் பேட் அக்லி: குட் பேட் அக்லி படம் அஜித் குமாரின் 63வது படம். இந்த படத்தை அஜித் குமாரின் தீவிர ரசிகரான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். படத்தை மைத்ரி மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஜி.வி. பிரகாஷ் குமார் படத்திற்கு இசையமைத்துள்ளார். 18 ஆண்டுகளுக்குப் பின்னர் அஜித் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்க கமிட் ஆகியுள்ளார். படத்தில் அஜித் குமாருடன் த்ரிஷா, அர்ஜுன் தாஸ், பிரசன்னா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

ரஜினி: அதாவது, " சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது ஆரம்ப காலத்தில் சினிமாவில் மிகவும் கஷ்டப்பட்டு தான் முன்னேறி வந்துள்ளார். இவரது வளர்ச்சிக்கு காரணம் அவரது கடின உழைப்புதான். மேலும் அவருக்கு ஓரளவுக்கு வசதி வந்த பின்னர், பலருக்கும் உதவி செய்தார். தொடர்ந்து தானம் செய்து வருகிறார். பலருக்கும் நன்மை செய்து வருகிறார். நானும் வளர்ந்த பின்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை போல், பலருக்கும் என்னால் முடிந்த உதவியை செய்வேன். அதற்கு நான் உத்திரவாதம் கொடுக்கிறேன்" எனக் கூறியுள்ளார். இது தொடர்பான வீடியோவை ரஜினிகாந்த் ரசிகர்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X