விஜய் போல ஆங்கில தலைப்புக்கு தாவிய அஜித்!.. நல்லா இருந்தவரையும் கெடுத்துட்டாரே ஆதிக் ரவிச்சந்திரன்!
சென்னை: அஜித்தின் விடாமுயற்சி படத்தின் மாஸான அப்டேட் இன்று வெளியாகப் போவதாக தகவல்கள் வெளியான நிலையில், கடைசியாக அந்த தேரை இழுக்க ஆரம்பித்து விட்டார்களா என நேற்று முதல் அஜித் ரசிகர்கள் சந்தோஷமடைந்தனர். மேலும், விடாமுயற்சி ஹாஷ்டேக்கையும் புதிய புதிய ஏஐ போட்டோக்களை எடிட் செய்து ரசிகர்கள் போட்டு டிரெண்ட் செய்தனர்.
ஆனால், இன்று காலை முதல் விடாமுயற்சி அப்டேட் இல்லை என்றும் ஏகே 63 படத்தின் அப்டேட் தான் என தகவல்கள் கசிந்த நிலையில், விடாமுயற்சியை விட்டு விட்டு ரசிகர்கள் ஏகே 63 படம் பக்கம் தாவி விட்டனர்.

அதற்கு ஈடு கொடுக்கும் விதமாக ஏகே 63 துப்பாக்கி போஸ்டர் ஒன்று வெளியாகி வேறலெவலில் டிரெண்டானது. ஏற்கனவே இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் தான் இயக்கப் போகிறார் என தகவல்கள் லீக்கானதை போலவே அதிகாரப்பூர்வ அறிவிப்பிலும் மார்க் ஆண்டனி இயக்குநர் பெயர் இடம்பெற்றது.
தமிழ் தலைப்புகள்: நடிகர் அஜித் குமார் தனது படங்களுக்கு வீரம், வேதாளம், விவேகம், துணிவு, விடாமுயற்சி என தமிழிலேயே தலைப்புகளை வைத்து வருகிறார். ஆரம்பத்தில் சிட்டிசன், ரெட் என சில ஆங்கில பட தலைப்புகளில் நடித்தாலும் அதிகளவு அஜித் படங்களில் தமிழ் தலைப்புகள் தான் நிறைந்து காணப்படுகின்றன.
விஜய் போல மாறிட்டாரு: பான் இந்தியா மோகன் காரணமாக நடிகர் விஜய் பீஸ்ட், லியோ, கோட் என தலைப்புகளை ஆங்கிலத்தில் தொடர்ந்து வைத்துக் கொண்டு வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கே புள்ளி வைக்க வேண்டுமா? வேண்டாமா? என தெரியாமல் குழம்பிப் போய் விட்டார். இந்நிலையில், நடிகர் அஜித்தும் நண்பர் விஜய் வழியில் மாறி விட்டாரே என ரசிகர்கள் கிண்டல் செய்ய ஆரம்பித்து விட்டனர்.

கிளிண்ட் ஈஸ்ட்வுட் பாதிப்பு: கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் கிளிண்ட் ஈஸ்ட்வுட் காட்சிகளையே வைத்திருந்தனர். இந்நிலையில், அவரது பாதிப்பில் ஆதிக் ரவிச்சந்திரனும் அஜித்தின் 63வது படத்துக்கு "குட் பேட் அக்லி" என அவரது ஹாலிவுட் படத்தின் டைட்டிலையே வைத்திருக்கிறார். மார்க் ஆண்டனி படத்தை போல இந்த படமும் பிளாக்பஸ்டர் ஹிட் அடிக்குமா? அல்லது சிம்புவின் AAA படத்தை போல சொதப்புமா என்பதை வெயிட் பண்ணித்தான் பார்க்க வேண்டும். பொங்கல் 2025 என ரிலீஸ் தேதியுடன் அறிவிப்பு வெளியானது செம ஹேப்பி.
கலாய்க்கும் விஜய் ரசிகர்கள்: நடிகர் விஜய் படங்களுக்கு தொடர்ந்து ஆங்கிலத்தில் தலைப்பு வைக்கப்பட்டு வந்த போதெல்லாம் அஜித் ரசிகர்கள் அவருக்கு தமிழ் மீது பற்றே கிடையாது என கலாய்த்து வந்த அஜித் ரசிகர்கள் எல்லாம் இப்போ லைன்ல வாங்க என விஜய் ரசிகர்கள் பதிலுக்கு ட்ரோல் செய்து பங்கம் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











