அஜித்துடன் சமரசமாகப் போன தனுஷ்?.. அது மட்டும் நடந்தால் ஸ்க்ரீன் கிழியும்.. காப்பாற்றப்பட்ட இட்லி கடை

சென்னை: நடிகர் அஜித் குமார் நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள படம் குட் பேட் அக்லி. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் வரும் ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இதற்கான வேலைகள் முழு மூச்சாக நடைபெற்று வருகிறது. படத்தின் டீசர் அண்மையில் வெளியானது. இதுவரை டீசரை கிட்டத்தட்ட 35 மில்லியன் பேர் பார்த்துள்ளார்கள். ஏப்ரல் 10ஆம் தேதி தனுஷின் இட்லி கடை படமும் ரிலீஸ் ஆகவுள்ளது என தெரிவிக்கப்பட்ட நிலையில், அஜித் மற்றும் தனுஷ் என இருவரும் சந்தித்து பேசியுள்ளார்கள் என்ற தகவல் திரைத்துறையில் உலா வருகிறது.

இந்த ஆண்டில் இதுவரை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட படங்களில் பலரது கவனமும் உள்ள தேதி என்றால் அது, ஏப்ரல் 10ஆம் தேதி தான். காரணம் இந்த தேதியில், அஜித் குமாரின் குட் பேட் அக்லி படம் ரிலீஸ் ஆகிறது. இது மட்டும் இல்லாமல், அதே தேதியில் தனுஷின் இட்லி கடை படமும் ரிலீஸ் ஆக உள்ளதாக படக்குழு தெரிவித்தது. குட் பேட் அக்லி படம் வருகிறது எனத் தெரிந்தும், இட்லி கடை படத்தை தனுஷ் ரிலீஸ் செய்யக் காரணம், தனுஷ் போடும் மனக்கணக்கு என பேச்சுகளும் வந்தது.

Ajithkumar Good Bad ugly Dhanush

அதாவது, அஜித் குமாரின் கடைசி படமான விடாமுயற்சி படு தோல்வியைச் சந்தித்தது. மேலும் விஜய் அரசியலுக்கு சென்றுவிட்டார். அஜித்துக்கு எதிராக தனது படத்தை இறக்கி, வென்று காட்டி விட்டால், அதன் பின்னர், அஜித் - விஜய் என இருப்பது, அஜித் - தனுஷ் என மாறும் என தனுஷ் யோசிக்கிறார் என்றெல்லாம் பேச்சுகள் வேகமாக பரவியது. இந்த விஷயம் அஜித் ரசிகர்களுக்கும் போக, அவர்கள் இணையத்தில் தனுஷை விமர்சிக்கத் தொடங்கினர்.

Ajithkumar Good Bad ugly Dhanush

அஜித் - தனுஷ்: மேலும் , குட் பேட் அக்லி படத்தின் டீசர் வந்தபோது, அஜித் ரசிகர்கள் பலரும் தனுஷ் மற்றும் அவரது இட்லி கடை படத்தை தரக்குறைவாக விமர்சனம் செய்தனர். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவியது. இப்போது வரும் தகவல்களை பார்த்தால், தனுஷின் இட்லி கடை படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் இருக்கும் எனக் கூறப்படுகிறது. இந்த முடிவை தனுஷ் எடுத்ததாகவும் கூறப்படுகிறது.

Ajithkumar Good Bad ugly Dhanush

மீட்டிங்: ஆனால் தனுஷ் இந்த முடிவை எடுப்பதற்கு முன்னர், அஜித்தை கடந்த ஜனவரி மாதம் சந்தித்து பேசினாராம். அப்போது, அஜித்திற்காக தான் யோசித்த கதையைக் கூறியுள்ளார். அஜித்திற்கும் தனுஷ் சொன்ன கதை மிகவும் பிடித்துப் போய் உள்ளது. இப்போது இந்த கதையை படத்திற்கான திரைக்கதையாக தனுஷ் தயார் செய்து வைத்துள்ளாராம். வரும் ஏப்ரல் மாதத்தில் அஜித்தை சந்தித்து முழுக்கதையையும் சொல்ல உள்ளார் எனவும் கூறப்படுகிறது.

Ajithkumar Good Bad ugly Dhanush

ஸ்கிரீன் கிழியும்: முழுக்கதையும் அஜித்திற்கு பிடித்துப் போனால், அஜித் தனது 65 வது படத்தில் தனுஷ் உடன் இணைந்து பணியாற்ற அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த விஷயத்தைக் கேள்விப்பட்ட ரசிகர்கள், தனுஷ் இயக்கத்தில் அஜித் நடித்தால் மாஸாக இருக்கும், ஸ்கிரீன் கிழியும் என பேசிவருகிறார்கள். அஜித் தனது 64 வது படத்தில், குட் பேட் அக்லி படத்தை இயக்கியுள்ள ஆதிக் ரவிச்சந்திரன் உடன் இணைந்து பணியாற்ற முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Ajithkumar Good Bad ugly Dhanush

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X