Ajith: சினிமாவில் காதல் கோட்டை கட்டிய அஜித்.. கோட்டை விட்ட படங்கள் லிஸ்ட்.. இப்படி சொதப்பிட்டாரே!

சென்னை: நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவர். இவரது நடிப்பில் கடந்த 6ஆம் தேதி ரிலீஸ் ஆன விடாமுயற்சி படம், ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பில் ரிலீஸ் ஆனது. ஆனால் படத்தில் மாஸான காட்சிகள் இல்லை எனக் கூறி ரசிகர்கள் படம் குறித்து மிகவும் கலவையான விமர்சனங்களை தெரிவித்தனர். அஜித் தனது திரை வாழ்க்கையைத் தொடங்கி சுமார் 33 ஆண்டுகள் ஆகிறது. இவர் இந்த 33 ஆண்டுகளில் நடிக்க ஒப்பந்தம், பின்னர் விலகிய 10 படங்கள் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

வாலி படத்திற்கு பின்னர் அஜித் நடிக்க ஒப்பந்தம் ஆகி பின்னர் விலகிய படம் நியூ. எஸ்.ஜே. சூர்யா இயக்கத்தில் உருவாகவிருந்த இந்த படத்தில் இருந்து அஜித் விலகியதால், எஸ்.ஜே சூர்யாவே நடித்தார். படம் வெளியாகி பெரும் ஹிட் அடித்தது. அதேபோல் பாலா இயக்கத்தில் சூர்யா நடித்து வெளியாகி பெரும் வெற்றிப் படமாக மாறிய நந்தா படத்தில் முதலில் நடிக்க கமிட் ஆனது அஜித் தான் என கூறப்படுகிறது. சிட்டிசன் படத்தின் இமாலய வெற்றிக்கு பின்னர், அஜித் நடிக்க ஒப்புக் கொண்ட படம் இதிகாசம். இந்தப் படத்தின் அறிவிப்புகள் எல்லாம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை கிளப்பியது. ஆனால் சில காரணங்களால் படம் டிராப் செய்யப்பட்டது.

Ajithkumar Good Bad Ugly Vidaamuyarchi

காதல் மன்னன், அமர்க்களம் போன்ற சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து அஜித்தின் மார்க்கெட்டையே உயர்த்தியவர், சரண். இவர்கள் கூட்டணி மீண்டும் இணைய கமிட் ஆன படம் தான் ஏறுமுகம். படப்பிடிப்பு சில நாட்கள் நடைபெற்றது. இந்நிலையில், சில காரணங்களால் படம் டிராப் ஆக. அதன் பின், அதே கதையில் சில மாற்றங்கள் செய்து, விக்ரம் நடிப்பில் ஜெமினி என்ற பெயரில் உருவானது. படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தார். அஜித் முதன் முதலாக காவல்துறை அதிகாரியாக நடிக்க கமிட் ஆன படம் மஹா. இந்தப் படத்தை நந்தா பெரியசாமி இயக்க இருந்ததாக பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். படம் ஆனால் படம் சில காரணங்களால் டிராப் செய்யப்பட்டது.

கே.எஸ். ரவிக்குமார்: இயக்குநர் ஷாஜி கைலாஷ் உடன் அஜித் நடிக்க முதலில் கமிட் ஆன படம்தான் திருடா. ஆனால் இந்த படம் சில காரணங்களால் டிராப் செய்யப்பட்டது, அதன் பின்னர் இருவரும் ஜனா படத்தில் கமிட் ஆனார்கள். திருடா படத்தின் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இயக்குநர் கே.எஸ். ரவிக்குமாருடன் இணைந்து அஜித் நடித்த இரண்டு படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. அதாவது வில்லன் மற்றும் வரலாறு படங்கள் செம ஹிட் அடிக்க, அதன் பின்னர் அவர்கள் இணைந்த படம் காங்கேயன். படத்தின் போஸ்டர் ஆங்கிலப் பட ரேஞ்க்கு இருந்ததால், படம் மீது மொத்த திரையுலகமே பெரும் எதிர்பார்ப்போடு இருந்தது. ஆனால் இந்தப் படமும் டிராப் செய்யப்பட்டது.

பாலா- ஏ.அர். முருகதாஸ்: பாலா இயக்கத்தில் அஜித் நடிக்க கமிட் ஆகி, போஸ்டர்கள் எல்லாம் வெளியாகி, பெரும் எதிர்பார்ப்பை கிளப்பிய படம் நான் கடவுள். இறுதியில் பாலாவுக்கும் அஜித்துக்கும் சில பிரச்னைகள் ஏற்பட்டதால் படத்தில் இருந்து அஜித் விலகினார். அதன் பின்னர் இந்தப் படத்தில் ஆர்யா நடித்தார். படம் மாபெரும் வெற்றிப் படமாக மாறியது. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் அஜித் நடிக்க வேண்டிய படம் தான் கஜினி. இந்தப் படத்திற்கு அஜித் கமிட் ஆன போது மிரட்டல் என பெயர் வைக்கப்பட்டது. சில காரணங்களால் படத்தில் இருந்து அஜித் வெளியேற, அதன் பின்னர் சூர்யா கமிட் ஆனார்.

சூர்யா: அதேபோல் அஜித் நடிக்க வேண்டிய மற்றொரு படத்தில் சூர்யா நடித்த படம் நேருக்கு நேர். இந்த படத்தில் விஜய் மற்றும் அஜித் நடிக்க கமிட் ஆனார்கள். சில காரணங்களால் அஜித் விலக, அதன் பின்னர்தான் இந்தப் படத்தில் சூர்யா, விஜய்யுடன் நடித்தார். முருகதாஸ் இயக்கத்தில் அஜித் நடிக்க பேச்சுவார்த்தை எல்லாம் நடைபெற்றது. அஜித்துக்கு கதை மிகவும் பிடித்துப் போனது. ஆனால் படப்பிடிப்பு தொடங்காததால், படம் டிராப் செய்யப்பட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X