GBU: அஜித்தின் அடுத்த அறிக்கை தயார்? தனுஷின் இட்லி கடையை மூடிட்டு ஓடுனு ரகளை செய்யும் ரசிகர்கள்!

சென்னை: மற்ற நடிகர்கள் எல்லாம் தங்களது நடிகர்களை படங்களின் ரிலீஸ், படங்களின் இசை வெளியீட்டு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சந்திப்பார்கள். ஆனால் ரசிகர்களை அறிக்கைகள் மூலம் மட்டும் அப்ரோச் செய்யும் நடிகர் என்றால் அது அஜித் மட்டும்தான். அப்படி ரசிகர்களுக்கு வேண்டுகோள்களை விடுத்து வருகிறார். அதாவது, தன்னை அஜித் என்று அழையுங்கள், ரசிகர் மன்றங்கள் வேண்டாம், என்னை அஜித்தே கடவுளே என அழைக்க வேண்டாம் என்று எல்லாம் தெரிவித்து இருந்தார். இப்போது அஜித் அடுத்த அறிக்கை விடும் அளவிற்கு அஜித் ரசிகர்களின் செயல்பாடுகள் அமைந்துவிட்டது எனக் கூறலாம்.

அஜித் குமார் நடிப்பில் கடைசியாக வெளியான விடாமுயற்சி படம், எதிர்பார்த்த அளவிற்கு பெரும் வெற்றிப் படமாக அமையவில்லை. இதனால் குட் பேட் அக்லி படத்தின் ரிலீஸ் தேதி மாறிப்போகும் என சிலர் புரளியைக் கிளப்ப, அதனை தனுஷ் ரசிகர்கள் மேலும் இணையத்தில் வேகமாக பரப்பினார்கள். இது மட்டும் இல்லாமல், அஜித்துடன் ஃபயரிங் வைத்துக் கொள்ளலாம், வாங்க மோதிப் பார்க்கலாம் , இட்லி கடையுடன் மோதினால், குட் பேட் அக்லி படம் மட்டும் இல்லை அஜித்தின் சினிமா வாழ்க்கையே முடிந்து விடும் என்றெல்லாம், சமூக வலைதளங்களில் பதிவிட்டார்கள். இது உண்மையாகவே தனுஷ் ரசிகர்களா இல்லை, தனுஷ் ரசிகர்கள் என்ற போர்வையில் வேறு யாராவது இப்படி நடந்து கொள்கிறார்களா என்ற கேள்வி பலருக்கும் இருந்தது.

Ajithkumar Good Bad Ugly Dhanush

ரசிகர்கள் சண்டை: சமூக வலைதளங்களில் பேச்சுகள் இப்படி அடிபட்டுக் கொண்டு இருக்கும் போது, குட் பேட் அக்லி படம் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி ரிலீஸ் ஆவதில் எந்த மாற்றமும் இல்லை என்பதை உறுதி செய்தது படக்குழு. இந்த அறிவிப்புக்காக தான் நாங்கள் காத்துக் கொண்டு இருந்தோம் என அஜித் ரசிகர்கள் இருந்ததைப் போல், அவர்களின் செயல்பாடு சமூக வலைதளங்களில் இருந்தது. அதாவது யாரெல்லாம் அதாவது எந்தெந்த சமூல வலைதளப் பக்கங்களில் இருந்து எல்லாம் அஜித் குறித்தும் குட் பேட் அக்லி படம் குறித்தும் மிகவும் மோசமாக விமர்சனங்களை முன் வைத்தார்களோ, அந்த பக்கங்களை எல்லாம் டேக் செய்து பதிலடி கொடுத்தார்கள்.

அஜித் வருத்தம்: இவர்களின் பதிலடி ஒரு அளவுக்கு மேல், ரொம்பவும் ஓவராக போனது. அதாவது தனுஷ் ரசிகர்களை மட்டும் இல்லாமல், தனுஷ் மற்றும் இட்லி கடை படத்தை மிகவும் கடுமையான சொற்கள் கொண்டு விமர்சித்து வருகிறார்கள். சமூக வலைதளங்களில் அஜித் ரசிகர்களின் இந்த செயல்பாடு குறித்து அஜித்தும் கவனித்ததாக கூறப்படுகிறது. இது அஜித்தை கவலையடையச் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக அஜித்தே விரைவில் கடிதம் எழுதி, ரசிகர்களை கட்டுப்படுத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.

தியேட்டர்கள்: குட் பேட் அக்லி படத்தின் மீது ரசிகர்களுக்கு மட்டும் இல்லாமல் திரையரங்க உரிமையாளர்களுக்கு பெரும் நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் இருப்பதால், பெரும்பாலும் குட் பேட் அக்லி படத்தைத்தான் திரையிட முனைப்பு காட்டி வருகிறார்களாம். இதனிடையே தனுஷ் இட்லி கடை படத்தையும் ரிலீஸ் செய்வாரா என்ற கேள்வியும் இப்போது, எழுகிறது. அப்படியே இட்லி கடை படம் ரிலீஸ் ஆனாலும், இந்தப் படத்திற்கு தியேட்டர்களின் எண்ணிக்கை என்பது அந்த அளவுக்கு கிடைக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X