Ajithkumar: சினிமாவுக்கு மட்டுமல்ல.. தமிழ்நாட்டுக்கே குட் பை.. வெளிநாட்டில் செட்டில் ஆகும் அஜித்!
சென்னை: நடிகர் அஜித்குமார் தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவர். தற்போது இவர் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய படங்களில் நடித்து வருகின்றார். இதுமட்டும் இல்லாமல் அடுத்த ஆண்டு ஐந்ரோப்பாவில் நடைபெறவுள்ள ஜி.டி.4 ரக கார் பந்தையத்தில் கலந்து கொள்ள அபுதாபியில் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றார். இந்நிலையில் அஜித்குமார் வெளிநாடில் செட்டில் ஆகப்போவதாக பேச்சு அடிபடுகின்றது. அது குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.

பொதுவாக நடிகர் அஜித்குமார் ஒரு படத்தில் முழுவதுமாக நடித்து முடித்த பின்னரே மற்றொரு படத்தில் இணைவார். ஆனால் லைகா தயாரிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்தில் நடித்துக் கொண்டு இருக்கும்போதே, குட் பேட் அக்லி படத்தில் கமிட் ஆனார். இதற்கு பல காரணங்கள் கூறப்பட்டது. அதாவது, விடாமுயற்சி படத்தின் இயக்குநர் மகிழ்திருமேனிக்கும் அஜித்குமாருக்கும் இடையில் பல பிரச்னைகள் ஏற்பட்டது எனக் கூறப்பட்டது. அதேபோல், லைகா நிறுவனத்திற்கும் அஜித்குமாருக்கும் இடையில் பிரச்னைகள் ஏற்பட்டதாக கூறப்பட்டது. ஒரு கட்டத்தில் படத்தின் படப்பிடிப்பு நின்றுவிடுமோ, படம் கைவிடப்பட்டுவிடுமோ என்றெல்லாம் கூட பேச்சுகள் அடிப்பட்டது.

இப்படியான பேச்சுகளுக்கு மத்தியில் குட் பேட் அக்லி படத்தின் அறிவிப்புகள் வந்தது மட்டும் இல்லாமல், அடுத்தடுத்து அப்டேட்கள் வந்து கொண்டே இருந்தது. முதலில் எந்த படம் ரிலீஸ் ஆகும் என்ற கேள்வி ரசிகர்களுக்கு ஏற்பட்டது. வலிமை படத்தினைப் போல் விடமுயற்சி படத்தின் அப்டேட்களை ரசிகர்கள் தொடர்ந்து கேட்கத் தொடங்கிவிட்டனர். ஆனால் குட் பேட் அக்லி படத்தின் அப்டேட்டுகளை படக்குழு வாரி வழங்கியது. குறிப்பாக படத்தில் அஜித்தின் லுக் அனைத்தும் மிரட்டலாக இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்தனர்.

லண்டன்: இந்நிலையில் அஜித்குமார் விரைவில் லண்டனில் செட்டில் ஆகப்போகின்றார் என பிரபல சினிமா பத்திரிகையாளர அந்தணன் மற்றும் பிஸ்மி தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள வீடியோவில், அஜித்குமார் விரைவில் லண்டனில் செட்டில் ஆகப்போகின்றார். அவர் ஏற்கனவே துபாயில் இரண்டு வீடுகள் வாங்கியுள்ளார்.

உலகம் சுற்றும் வாலிபன்: லண்டனில் இப்போதைக்கு ஒரு இடம் வாங்கியுள்ளார். இந்த இடம் வாங்கிய விஷயத்தில் அவருக்கு லைகா நிறுவனம் உதவியாக இருந்திருக்கின்றது எனவும் கூறியுள்ளனர். மேலும் அஜித்தான் உண்மையான உலகம் சுற்றும் வாலிபன். தமிழ்நாட்டில் திருவான்மியூரில் வீடு உள்ளது. துபாயில் இரண்டு வீடுகள் உள்ளது. அதேநேரத்தில் தற்போது லண்டனில் வீடு கட்ட இடம் வாங்கிப்போட்டுள்ளார் என தெரிவித்தனர்.

அதிர்ச்சி: இவர்கள் இவ்வாறு கூறியிருப்பது, அஜித் ரசிகர்களுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே அஜித்குமார் சினிமாவில் இருந்து விலகவுள்ளதாக அவ்வப்போது பேச்சுகள் அடிபட்டு வரும் நிலையில், தற்போது பிஸ்மி மற்றும் அந்தணன் இவ்வாறு கூறியிருப்பது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


Click it and Unblock the Notifications