Good Bad Ugly Box Office Day 1: அஜித்தால் அதிர்ந்த திரையரங்கம்.. வசூலை அள்ளிய பாக்ஸ் ஆபீஸ்!

சென்னை: அஜித் குமார் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி படம் நேற்று அதாவது ஏப்ரல் 10ஆம் தேதி ரிலீஸ் ஆனது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இந்த படத்தை மைத்ரி மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆன இந்த படத்தைப் பார்த்த ரசிகர்களுக்கு படம் மிகவும் பிடித்துப் போனதால் படத்தைக் கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில் படத்தின் வசூல் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

அஜித் குமார் நடிப்பில் வெளியாகியுள்ள அவரது 63வது படம் குட் பேட் அக்லி. இந்த படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் அஜித் குமாரின் தீவிர ரசிகர் என்பதாலே, இந்த படத்தின் ஒவ்வொரு காட்சியையும் அஜித் ரசிகர்களுக்காக செதுக்கி உள்ளார். அஜித்தின் இண்ட்ரோ காட் தொடங்கி, படத்தின் கிளைமாக்ஸில் அஜித் வரும் காட்சி வரை ரசிகர்களுக்கு ட்ரீட் தான். படத்தின் பெரும்பான்மை பகுதியில் அஜித் வருவதால், மொத்த படத்தையும் அவரும் அவருக்கான பில்டப் காட்சிகளும் தாங்கி நிற்கிறது.

Ajithkumar Good Bad Ugly Box Office Collection Day 1 Rs 28 5 Cores in India more Than 100 Crores In World Wide

படத்தின் மற்றொரு நாயகன் என்றால், டைட்டில் கார்டில் இருந்து எண்ட் கார்ட் வரை இறங்கி வேலை பார்த்திருக்கும் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் தான். 17 ஆண்டுகளுக்குப் பின்னர் அஜித் நடிக்கும் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைப்பதால், இந்த வாய்ப்பை பயன்படுத்தி அஜித்தின் மாஸ்க்கு ஏற்ற வாரு பின்னணி இசை அமைத்துக் கொடுத்துள்ளார். படம் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா மற்றும் வட இந்தியா என இந்தியா முழுவதும் ரிலீஸ் ஆனது.

Ajithkumar Good Bad Ugly Box Office Collection Day 1 Rs 28 5 Cores in India more Than 100 Crores In World Wide

மாஸ் ஓப்பனிங்: இது மட்டும் இல்லாமல் வெளிநாடுகளிலும் படம் ரிலீஸ் ஆனது. படத்தின் டீசர், டிரைலர், படக்குழு வெளியிட்ட பாடல்கள் என அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் தமிழ் சினிமாவில் வெளியான டீசர் மற்றும் டிரைலர், அதிக பார்வையாளர்களை கடந்த படம் என்ற சாதனையையும் குட் பேட் அக்லி படத்தின் டீசர் மற்றும் டிரைலர் படைத்தது.

Ajithkumar Good Bad Ugly Box Office Collection Day 1 Rs 28 5 Cores in India more Than 100 Crores In World Wide

திரையரங்குகள்: இப்படியான நிலையில் படம் நேற்று அதாவது ஏப்ரல் 10ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது, இலங்கை மற்றும் மலேசியாவில் மட்டும் காலை 6 மணி காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டது.தமிழ்நாட்டில் சுமார் 1000 திரையரங்குகளில் குட் பேட் அக்லி படம் ரிலீஸ் செய்யப்பட்டது. இதில் மிகவும் முக்கியமான விஷயம் என்றால், பெரும்பான்மையான தியேட்டர்கள் ஹவுஸ் ஃபுல் காட்சிகளாகத்தான் எல்லா காட்சிகளும் திரையிடப்பட்டது.

வசூல்: படத்தைப் பொறுத்தவரையில் முதல் நாளில் இந்தியா முழுவதும் சுமார் ரூபாய் 28.5 கோடிகள் வசூல் செய்துள்ளதாக பாக்ஸ் ஆஃபிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக சாக்நிக் வலைதளத்திலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு வெளியேயும் படத்திற்கு நல்ல ஓப்பனிங் கிடைத்துள்ளது. இதனால் இந்தியாவுக்கு வெளியேயும் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது பாக்ஸ் ஆபிஸிலும் எதிரொலித்துள்ளது. அதாவது படம் உலகம் முழுவதும், முதல் நாளில் சுமார் 100 கோடிகளுக்கு மேல் வசூல் குவித்திருக்கும் என கூறப்படுகிறது. படத்தின் பாக்ஸ் ஆபீஸ் வசூல் குறித்து படக்குழு இன்னும் அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியிடவில்லை.

Ajithkumar Good Bad Ugly Box Office Collection Day 1 Rs 28 5 Cores in India more Than 100 Crores In World Wide

பொறுப்பு துறப்பு: படங்களின் வசூல் குறித்த தகவல்கள் பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்களில் பெறப்பட்ட தகவலே தவிர, படக்குழு சார்பில் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ வசூல் விபரம் அல்ல.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X