Good Bad Ugly Box Office Day 2 Prediction: டல்லடிக்குதே.. குட் பேட் அக்லி 2ம் நாள் வசூல் கணிப்பு!

சென்னை: இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார், த்ரிஷா, அர்ஜுன் தாஸ் நடிப்பில் ஏப்ரல் 10ம் தேதி வெளியான குட் பேட் அக்லி திரைப்படம் முதல் நாளில் ஏகப்பட்ட காட்சிகள் ஹவுஸ் ஃபுல்லாக மாற பாக்ஸ் ஆபிஸில் சிறப்பான ஓபனிங்கை தரமாக செய்தது. ஆனால், வெள்ளிக்கிழமையான இன்று பல தியேட்டர்கள் பச்சை நிறத்தில் காணப்படுவது அஜித் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

முன்னணி நடிகர்கள் படங்களுக்கு முதல் மூன்று நாட்களுக்கு டிக்கெட்டுகளை கிடைக்காத நிலை உருவாகும். ஆனால், அஜித் குமார் நடித்த குட் பேட் அக்லி படத்துக்கு முதல் ஷோவுக்கு மட்டும்தான் அப்படி ஒரு நிலைமை நேற்று பல்வேறு இடங்களில் இருந்தது. மதியம் 12 மணி காட்சிகளும் ஹவுஸ்ஃபுல் ஆகின. ஆனால் அதற்கு பின்னர் பல காட்சிகளுக்கான டிக்கெட்டுகள் ரசிகர்களுக்கு கிடைக்கும் அளவுக்கு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Good Bad Ugly Box Office Day 2 Prediction in Tamil

இந்நிலையில், வெள்ளிக்கிழமையான இன்று புக் மை ஷோ தளத்தில் பல தியேட்டர்களில் அஜித்குமார் நடித்துள்ள குட் பேட் அக்லி படத்துக்கு ஆரஞ்சு நிறத்திலும் சில தியேட்டர்கள் பெரிதாக டிக்கெட் புக்கிங் ஆகாமல் பச்சை நிறத்திலும் காணப்படுகின்றன. இதன் காரணமாக இரண்டாம் நாள் வசூல் அதிக அளவில் அடிப்படும் என்று கூறுகின்றனர்.

கலவையான விமர்சனங்கள்: அஜித் ரசிகர்கள் திரையரங்குகளில் குட் பேட் அக்லி படத்தை முதல் நாளில் கொண்டாடியதை பார்த்த ரசிகர்கள் ஒட்டுமொத்தமாக குடும்பம் குடும்பமாக தியேட்டருக்கு வந்து பார்ப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், விமர்சனங்கள் கலவையாக இருந்த நிலையில், பெரிதாக மக்கள் கூட்டம் இரண்டாவது நாளில் படத்தை பார்க்க ஆர்வம் காட்டவில்லை என்பதுதான் ஆன்லைன் புக்கிங் வெப்சைட்கள் மூலம் தெரிய வருகிறது.

Good Bad Ugly Box Office Day 2 Prediction in Tamil

60 ரூபாய் டிக்கெட் கூட இருக்கிறது: பிவிஆர் உள்ளிட்ட மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் முன் வரிசையில் அமர்ந்து பார்க்கக்கூடிய 60 ரூபாய் டிக்கெட்டுகள் விற்பனையாகின்றன. பல இடங்களில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளுக்கான 60 டிக்கெட்டுகள் கூட இன்னமும் ரசிகர்களால் புக் செய்யப்படாமல் அப்படியே இருக்கின்றன.

2ம் நாள் வசூல் கணிப்பு: முதல் நாள் இந்திய அளவில் குட் பேட் அக்லி திரைப்படம் அதிகபட்சமாக 28.5 கோடி ரூபாய் வசூல் ஈட்டியதாக Sacnilk இணையதளம் தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இரண்டாம் நாளான இன்று அதிகபட்சமாக 10 கோடி ரூபாய் வரை குட் பேட் அக்லி திரைப்படம் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டை தாண்டி மற்ற மாநிலங்களில் பல படங்கள் போட்டியாக வெளியான நிலையில், வசூலில் பலத்த அடி விழும் என்றும் கூறுகின்றனர்.

பொதுமக்கள் ஆர்வம் காட்டுவார்களா?: அஜித்குமார், த்ரிஷா, அர்ஜுன் தாஸ், சிம்ரன், பிரியா வாரியர், பிரபு, பிரசன்னா, சுனில், யோகி பாபு மற்றும் ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ள குட்பேக் அக்லி படத்தை அஜித் ரசிகர்களை தாண்டி பொதுமக்களும் ஆர்வம் காட்டி படம் பார்த்தால் மட்டுமே மிகப் பெரிய பாக்ஸ் ஆபிஸ் வேட்டையை அந்த படம் நிகழ்த்தும் என்கின்றனர். வரும் திங்கட்கிழமை வரை தொடர் விடுமுறை உள்ள நிலையில், இதுவரை இல்லாத அளவுக்கு குட் பேட் அக்லி திரைப்படம் அஜித் குமார் கரியரில் அதிக வசூல் ஈட்டும் படமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X