Good Bad Ugly Day 3 Box Office Prediction: 2ம் நாளில் வசூல் சரிவு.. 3ம் நாளில் பிக்கப் ஆகுமா குட் பேட் அக்லி?
சென்னை: அஜித் குமார், த்ரிஷா, அர்ஜுன் தாஸ், சிம்ரன், பிரசன்னா, சுனில், யோகி பாபு, பிரியா வாரியர் நடிப்பில் கடந்த ஏப்ரல் 10ம் தேதி வெளியான குட் பேட் அக்லி திரைப்படம் முதல் நாளில் தமிழ்நாட்டில் மிகபெரிய வசூல் வேட்டையை நடத்தியதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. உலகளவில் எந்தளவுக்கு வசூல் செய்தது என்பது குறித்த எந்தவொரு அறிவிப்பையும் படக்குழு வெளியிடவில்லை.
அஜித் குமார் நடிப்பில் கடைசியாக வெளியான விடாமுயற்சி படத்துக்கு எல்லாம் வசூல் அறிவிப்பை வெளியிடவில்லை. குட் பேட் அக்லி திரைப்படம் 2ம் நாளான நேற்று தமிழ்நாட்டிலேயே அதிகளவில் வசூல் சரியத் தொடங்கியது அஜித் ரசிகர்களையும் படக்குழுவையும் ஷாக் ஆக்கியது.

இந்நிலையில், சனிக்கிழமையான இன்றும் ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கட்கிழமை உள்ளிட்ட விடுமுறை நாட்களில் படத்தின் வசூல் எப்படி இருக்கும் என்பது குறித்த கணிப்புகளை இங்கே காணலாம்.
குட் பேட் அக்லி 2 நாள் வசூல்: முதல் நாளில் குட் பேட் அக்லி தமிழ்நாட்டில் அதிகபட்சமாக 30.9 கோடி ரூபாய் வசூலை ஈட்டியதாக மைத்ரி மூவி மேக்கர்ஸ் அறிவித்துள்ளது. இதற்கு முன் அஜித் நடிப்பில் வெளியான படங்களுக்கான முதல் நாள் வசூலை விட இந்த படம் தான் அதிக வசூல் என்றும் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ள நிலையில், வலிமை, துணிவு, விடாமுயற்சி உள்ளிட்ட படங்களின் முதல் நாள் வசூல் குறைவு தானா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

3ம் நாள் டிக்கெட் புக்கிங் எப்படி இருக்கு?: புக் மை ஷோ உள்ளிட்ட டிக்கெட் புக்கிங் தளத்தில் சனிக்கிழமைக்கான டிக்கெட் புக்கிங் பல தியேட்டர்களில் ஆரஞ்சு நிறத்தில் அதிகளவில் நிரம்பி காணப்படுகின்றன. ஒரு சில தியேட்டர்கள் மட்டுமே ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடுகிறது. இன்று மாலை காட்சிகள் எல்லாம் ஹவுஸ்ஃபுல் ஆகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஞாயிறு மற்றும் திங்கள்: அஜித் குமார் ரசிகர்களை தாண்டி பொதுமக்களும் குட் பேட் அக்லி படத்துக்கு வரவேற்பு கொடுக்கத் தொடங்கியுள்ளனர். வார இறுதி நாட்களில் மக்கள் நிச்சயம் அதிகளவில் குட் பேட் அக்லி படத்தை தியேட்டர்களில் பார்ப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எம்புரான் படத்தை போல ஒட்டுமொத்தமாக 200 கோடிக்கும் அதிகமான வசூலை முதல் வார இறுதியில் குட் பேட் அக்லி அள்ளுமா என்பதை வெயிட் பண்ணித்தான் பார்க்க வேண்டும்.
டிராகன் வசூலுக்கு வேட்டு: ஆனால், கண்டிப்பாக பிரதீப் ரங்கநாதனின் டிராகன் படத்தின் வசூலை அஜித் குமாரின் குட் பேட் அக்லி திரைப்படம் முதல் வார இறுதிக்குள் முறியடித்துவிடும் என்கின்றனர். ஆனால், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் படத்தின் வசூல் சாதனையை குட் பேட் அக்லி ஒட்டுமொத்த ஓட்டத்தில் முறியடிக்குமா என்பது சந்தேகம் தான் என்றும் பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் கருத்து தெரிவித்துள்ளன. அஜித் குமார் நடித்த படங்களில் இந்த படம் அதிக வசூலை ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து புகழும் ஆதிக் ரவிச்சந்திரனை தான் சேரும் என்றும் அடுத்த படமும் அவருடன் தான் அஜித் குமார் செய்வார் என்றும் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











