Good Bad Ugly Box Office Day 6: செவ்வாய்க்கிழமையும் செம ஸ்ட்ராங்.. குட் பேட் அக்லி 6 நாளில் அள்ளிய வசூல்!

சென்னை: மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் பாலிவுட் நடிகர் சன்னி தியோல் நடிப்பில் வெளியான ஜாட் திரைப்படம் இதுவரை 52 கோடி வசூலை கடந்ததாக மைத்ரி மூவி மேக்கர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஏப்ரல் 10ம் தேதி அஜித் குமாரின் குட் பேட் அக்லி படம் வெளியான அதே நாளில் வெளியான அந்த படம் உலகளவில் இந்த வசூல் சாதனையை நிகழ்த்தியிருக்கிறது.

ஆனால், அஜித் குமாரின் குட் பேட் அக்லி திரைப்படம் அதே 5 நாட்களில் தமிழ்நாட்டிலேயே 100 கோடி வசூலை கடந்துவிட்டதாக மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் பாக்ஸ் ஆபீஸ் அறிவிப்பை வெளியிட்டு இருப்பது அஜித் குமார் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Good Bad Ugly Day 6 Box Office Collection Ajith Kumar OG Sambavam strongs at Tuesday too

கடந்த சில ஆண்டுகளாக முழுக்க முழுக்க கமர்ஷியல் படத்தில் அஜித் குமார் நடிக்காமல் இருந்த நிலையில், தான் பாக்ஸ் ஆபீஸில் அவருக்கான இடம் கிடைக்காமல் சரிந்து போனது என்றும் இந்த ஒரே படத்தின் மூலம் மீண்டும் தான் யார் என்பதை தமிழ்நாட்டுக்கு மட்டுமின்றி உலகத்துக்கே காட்டியுள்ளார் என்றும் கூறுகின்றனர்.

செவ்வாய்க்கிழமையும் செம ஸ்ட்ராங்: குட் பேட் அக்லி ரசிகர்களுக்கான படம் தான் என்றும் முதல் நாளை தாண்டி படம் ஓடுவதே சிரமம் தான் பொதுமக்களுக்கு இந்த படம் எந்தளவுக்கு பிடிக்கும் என்றெல்லாம் தெரியாது என ரசிகர்கள் சொல்லி வந்த நிலையில், குடும்பம் குடும்பமாக தமிழ் சினிமா ரசிகர்கள் தொடர் விடுமுறையை குட் பேட் அக்லி படம் பார்த்து திரையரங்குகளில் கொண்டாட ஆரம்பித்தனர். மத கஜ ராஜா படத்தையே மாஸ் ஹிட்டாக்கிய ரசிகர்கள் குட் பேட் அக்லி படமெல்லாம் கிடைத்தால் சும்மா விடுவார்களா? திங்கட்கிழமையுடன் படம் ஓவராகிவிடும் எனக் கூறப்பட்ட நிலையில், செவ்வாய்க்கிழமையும் குட் பேட் அக்லி வசூல் செம ஸ்ட்ராங்காகவே உள்ளது தான் சினிமா வட்டாரத்தையே ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

6வது நாளில் 6 கோடி வசூல்: 5ம் நாளான திங்கட்கிழமை குட் பேட் அக்லி திரைப்படம் 15 கோடி வரை இந்தியளவில் வசூல் செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், செவ்வாய்க்கிழமையான நேற்று அதிகபட்சமாக 6.50 கோடி வசூலை அஜித் குமாரின் குட் பேட் அக்லி அள்ளியிருக்கிறது. பொதுவாக தமிழ் சினிமாவில் புதிய படங்கள் முதல் நாளில் 4 கோடி ரூபாய் வசூல் எடுத்தாலே நல்ல ஓபனிங் எனக் கூறப்படும் நிலையில், குட் பேட் அக்லி படம் 6வது நாளிலும் 6 கோடிக்கும் மேல் வசூல் செய்திருப்பது சிறப்பான விஷயம் தான்.

இந்த வாரமும் கல்லா கட்டும்: இதுவரை ஒட்டுமொத்தமாக குட் பேட் அக்லி திரைப்படம் இந்தியாவில் மட்டும் 107.80 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக Sacnilk இணையதளம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் மட்டுமே குட் பேட் அக்லி 100 கோடி வசூல் என மைத்ரி மூவி மேக்கர்ஸ் அறிவித்துள்ளது. உலகளவில் குட் பேட் அக்லி 180 கோடி வரை வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால், அது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை. இந்த வாரமும் தமிழ்நாட்டில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய குட் பேட் அக்லி படம் அதிகமாகவே கல்லா கட்டும் என்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X