Good Bad Ugly Box Office: தமிழ்நாட்டில் தொடர்ந்து தாக்குப் பிடிக்கும் குட் பேட் அக்லி.. 7வது நாள் வசூல்?
சென்னை: அஜித் குமாருக்கு தமிழ்நாட்டில் எந்தளவுக்கு ரசிகர்கள் பலம் உள்ளது என்பதை குட் பேட் அக்லி திரைப்படம் பல ஆண்டுகள் கழித்து மீண்டும் நிரூபித்துள்ளது. பல ரசிகர்கள் 10 முறை குட் பேட் அக்லி பார்த்தேன், 15 முறை என்றும் சிலர் 20 முறையை தாண்டியும் படத்தை பார்த்துக் கொண்டாடி வருகின்றனர்.
நடிகர் அஜித் குமார் கார் ரேஸிங்கில் கவனம் செலுத்தி வரும் நிலையில், இந்த வாய்ப்பை தவறவிட்டால் அடுத்த 2 ஆண்டுகளுக்கு அவருடைய படம் வருமா? என்கிற சந்தேகம் உள்ள நிலையில், தியேட்டர்களை திருவிழாவாக மாற்றி வருகின்றனர்.

செவ்வாய்க்கிழமை எல்லாம் படம் ஓடாது அவ்வளவு தான் என பேச்சுக்கள் அடிபட்ட நிலையில், இருங்க பாய் என செவ்வாய்க்கிழமை 6 கோடி ரூபாய் வசூலையும் புதன் கிழமையான நேற்று 5.13 கோடி ரூபாய் வசூலையும் இந்தியளவில் குட் பேட் அக்லி அள்ளி அசால்ட் காட்டி வருகிறது.
நன்றி சொன்ன குட் பேட் அக்லி டீம்: நேற்று சென்னையில் குட் பேட் அக்லி படக்குழுவினர் தேங்ஸ் கிவ்விங் மீட் நடத்தி ரசிகர்களுக்கும் படத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தனர். தனது மனைவியை விட அஜித் குமாரை அதிகம் நேசிப்பதாக ஆதிக் ரவிச்சந்திரன் பேசியுள்ளார். அடுத்த படமும் அஜித் குமாரை வைத்து அவர் தான் இயக்குவார் என தெரிகிறது. ரசிகர்களின் விருப்பமும் அதுதான். பிரியா வாரியரும் அடுத்த படத்துக்கு இப்போதே மேடையிலேயே கர்ச்சிப் போட்டுவிட்டார். தமிழ்நாட்டில் அதி வேகமாக 100 கோடி வசூலை குட் பேட் அக்லி கடந்த நிலையில், இங்கேயே 200 கோடி வரை வசூல் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குட் பேட் அக்லி 7வது நாள் வசூல்: தமிழ்நாட்டில் மட்டும் குட் பேட் அக்லி 7வது நாளில் 4.81 கோடி ரூபாய் வசூலை நேற்று அள்ளியிருப்பதாக Sacnilk இணையதளம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், தெலுங்கு வெர்ஷன் உடன் சேர்ந்து ஒட்டுமொத்தமாக 5.13 கோடி ரூபாயை இந்தியாவில் மட்டும் நேற்று குட் பேட் அக்லி பெற்றுள்ளது. உலகளவிலும் பல நாடுகளில் அஜித் ரசிகர்கள் தொடர்ந்து குட் பேட் அக்லி படத்துக்கு பேராதரவு கொடுத்து வரும் நிலையில், பாக்ஸ் ஆபீஸில் அதிரடி காட்டி வருகிறது.
200 கோடி வசூல்: ஆதிக் ரவிச்சந்திரனின் ஃபேன் பாய் சம்பவத்தை ரசிகர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் கொண்டாடி வருகின்றனர். தியேட்டருக்குச் சென்று பார்க்கும் ரசிகர்கள் சமீப காலமாக தங்களை படங்கள் என்டர்டெயின் செய்ய வேண்டும் என்றும் ஆடிப்பாடி கொண்டாடிவிட்டு வர வேண்டும் என்றும் நினைத்து வருவதால் அந்த பல்ஸை புரிந்துக் கொண்ட ஆதிக் ரவிச்சந்திரன் எதெல்லாம் வொர்க்கவுட் ஆகும் என நினைத்து வைத்தாரோ அதெல்லாம் பக்காவாக விமர்சனங்களை கடந்து வொர்க்கவுட் ஆகியுள்ளன. இதுவரை உலகளவில் குட் பேட் அக்லி திரைப்படம் 200 கோடி வசூலை நெருங்கி விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தமிழ்நாட்டு அளவிலேயே பாக்ஸ் ஆபீஸ் விவரங்களை இதுவரை அறிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் தொடர் விடுமுறை: நாளை வெள்ளிக்கிழமை புனித வெள்ளி விடுமுறை என்பதால் குட் பேட் அக்லி படத்தின் டிக்கெட் புக்கிங் மீண்டும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு என இந்த வாரமும் கல்லா கட்டினால் 300 கோடி வசூலை தொட அதிக வாய்ப்புகள் இருப்பதாகவே தெரிகிறது.


Click it and Unblock the Notifications











