Box Office: புனித வெள்ளி விடுமுறை.. சச்சின் ரீ ரிலீஸ்.. குட் பேட் அக்லி வசூல் எப்படி இருக்கும்?

சென்னை: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார், த்ரிஷா, அர்ஜுன் தாஸ், பிரபு, பிரசன்னா, பிரியா வாரியர், சிம்ரன், சுனில் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஏப்ரல் 10ம் தேதி வெளியான குட் பேட் அக்லி திரைப்படம் கடந்த 8 நாட்களில் தமிழ்நாட்டில் தாறுமாறாக வசூலை அள்ளி வருகிறது. இந்நிலையில், புனித வெள்ளியான இன்று முதல் மீண்டும் தொடர் விடுமுறை என்பதால் குட் பேட் அக்லி வசூல் மேலும், அதிகரிக்கும் நிலை உருவாகியுள்ளது.

அதே நேரத்தில் இன்று சத்யராஜின் மகன் சிபிராஜ் நடிப்பில் உருவாகியுள்ள டென் ஹவர்ஸ் திரைப்படம் மற்றும் தளபதி விஜய்யின் சச்சின் ரீ ரிலிஸ் படங்களும் வெளியாக உள்ளன. இதன் காரணமாக குட் பேட் அக்லி படத்தின் வசூல் குறையுமா? அல்லது மற்ற படங்களை தூக்கித் தட்டிவிட்டு தொடர்ந்து வசூலை அள்ளுமா என்கிற கேள்விகள் சினிமா வட்டாரத்தில் எழுந்துள்ளன.

Good Bad Ugly Day 8 Box Office reports Did Sachien Re Release slow down Ajith s movie collection

கடந்த 8 நாட்கள் வரை குட் பேட் அக்லி திரைப்படம் இந்தியளவில் எந்தளவுக்கு வசூல் செய்துள்ளது என்பது குறித்தும் இங்கே பார்க்கலாம் வாங்க..

அஜித்துக்கு வெற்றி மகுடம்: இந்த ஆண்டு முழுவதுமே அஜித் குமாரின் ஆண்டாகவே மாறியுள்ளது. விஜய்யின் ஜன நாயகன் படம் கூட அடுத்த ஆண்டு தான் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விடாமுயற்சி படத்தைத் தொடர்ந்து குட் பேட் அக்லி படமும் வெளியான நிலையில், அஜித் குமார் தான் இதுவரை தமிழ்நாட்டில் திரையரங்குகளை வாழ வைத்து வருகிறார் என்கின்றனர். அதிகபட்சமாக இரண்டு படங்களையும் சேர்த்தால் தமிழ்நாட்டில் மட்டும் 200 கோடி அளவுக்கு பாக்ஸ் ஆபீஸில் அஜித் குமார் சாதனை படைத்திருக்கிறார் என்கின்றனர்.

குட் பேட் அக்லி 8வது நாள் வசூல்: ஆதிக் ரவிச்சந்திரன் அஜித் ரசிகர்களையும் ஜனரஞ்சக ரசிகர்களையும் மனதில் வைத்துக் கொண்டு செம கமர்ஷியல் மசாலா படமாக குட் பேட் அக்லி படத்தை எடுத்துக் கொடுத்த நிலையில், அதை தலையில் வைத்து மக்களும் ரசிகர்களும் தாறுமாறாக கடந்த ஒரு வாரமாக கொண்டாடி வருகின்றனர். குட் பேட் அக்லி முதல் நாள் தமிழ்நாட்டில் 30 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. Sacnilk இணையதளத்தில் திங்கட்கிழமை 15 கோடி வசூலும், செவ்வாய்க்கிழமை 7 கோடி வசூலும், புதன்கிழமை 5.5 கோடி வசூலும் வியாழக்கிழமையான நேற்று அதிகபட்சமாக 5 கோடி ரூபாய் வரை வசூல் ஈட்டியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுவரை இந்தியளவில் குட் பேட் அக்லி திரைப்படம் 118.85 கோடி ரூபாய் வசூலை ஈட்டியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

உலகளவில் எத்தனை கோடி?: தமிழ்நாட்டில் மட்டுமே குட் பேட் அக்லி திரைப்படம் 100 கோடி வசூலை தாண்டியுள்ளதாக மைத்ரி மூவி மேக்கர்ஸ் அறிவித்துள்ளது. ஆனால், இதுவரை உலகளவிலான வசூலை அறிவிக்கவே இல்லை. 200 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியிருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வாரம் புனித வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு விடுமுறைகளில் குட் பேட் அக்லி படம் முதல் வாரம் போலவே ஹவுஸ்ஃபுல்லாக ஓடினால் 300 கோடி வரை கடக்கும் என்கின்றனர்.

Good Bad Ugly Day 8 Box Office reports Did Sachien Re Release slow down Ajith s movie collection

சச்சின் ரீ ரிலீஸ்: ஆனால், அதற்கு முட்டுக்கட்டையாக விஜய்யின் சச்சின் ரீ ரிலீஸ் அமையுமா என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன. அஜித் குமார் படத்தை அவரது ரசிகர்கள் கொண்டாடியதை போலவே இன்று முதல் சச்சின் படத்தை விஜய் ரசிகர்கள் கொண்டாட தியேட்டர்களுக்கு படையெடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கில்லி ரீ ரிலீஸ் போல ஓடுமா? அல்லது ஒரு நாள் கூத்து தானா என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X