குட் பேட் அக்லிக்காக ரிஸ்க் எடுக்கும் ஏ.கே; மனம் திறந்த ஆதிக் ரவிச்சந்திரன்; கொண்டாடும் ரசிகர்கள்!
சென்னை: தமிழ் சினிமாவில் நடிப்பது என் வேலை, படம் புடுச்சா மட்டும் வந்து பாருங்க, என்னை கொண்டாடாதீங்க, போய் உங்க குடும்பத்த பாருங்க என தனது ரசிகர்களை உச்ச நட்சத்திரமாக வளர்ந்த பின்னர் ஒருவர் வழிநடித்தினார் என்றால் அவரது பெயர் அஜித்குமார். தமிழ் சினிமாவிற்குள் தனக்கான எந்த சினிமா பின்னணியும் இல்லாமல் நுழைந்து தற்போது கோடிக்கணக்கில் ரசிகர்களைக் கொண்ட நடிகர்களில் அஜித் குமாரின் பெயர் எப்போதும் இருக்கும். தொடக்கத்தில் காதல் மன்னனாக வலம் வந்து கொண்டு இருந்த அஜித் ஒரு கட்டத்திற்கு மேல் நெகடிவ் ரோல்களைத் தேர்வு செய்து அதில் ஹீரோயிசம் காட்டும் கதாநாயகனாக மட்டும் இல்லாமல் அவ்வப்போது தனக்குள்ம் இருக்கும் லவ்வர் பாய் கேரக்ட்டரை வெளிப்படுத்தியும் வருகின்றார். தமிழ் சினிமாவில் ஹாலிவுட் தரத்திற்கு ஒரு கேங்ஸ்டர் படம் எடுக்கவேண்டும் என ஒரு இயக்குநர் நினைக்கின்றார் என்றால் அவரது முதல் தேர்வு அஜித்குமாராகத்தான் இருக்கும்.

ஒரே நேரத்தில் இரண்டு படங்கள்
வழக்கமாக ஒரு படத்தில் நடித்து முடித்துவிட்டு அதன் பின்னர் அடுத்த படத்திற்கு கமிட்டாகும் ஒரு சில நடிகர்களில் அஜித்தும் ஒருவர். மேலும் படத்தில் நடிப்பது மட்டும்தான் எனது வேலை, எனது படத்தின் பாடல் வெளியீட்டு விழா, வெற்றி விழா கொண்டாட்டங்கள் என எதிலும் தன்னை ஈடுபடுத்திக்க ஆர்வம் இல்லாத நடிகர் அஜித். இசை வெளியீட்டு விழா என ஒன்றை ஏற்பாடு செய்தால் அது தயாரிப்பாளருக்கு கூடுதல் செலவு ஆகும் என இசை வெளியீட்டு விழா நடத்தும் அஜித் விடுவதில்லை என கூறப்படுகின்றது. ஆனால் தற்போது அவர் இரண்டு படங்களில் நடித்து வருகிறார். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்திலும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்திலும் நடித்து வருகிறார்.

குட் பேட் அக்லி முதற்கட்ட படப்பிடிப்பு
இதில் குட் பேட் அக்லி படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நேற்றுடன் அதாவது ஜூன் மாதம் 8ஆம் தேதியுடன் முடிவுக்கு வந்துள்ளது. இதனால் குட் பேட் அக்லி படக்குழுவினர் புகைப்படம் வெளியிட்டுள்ளனர். முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்து விட்டதால் அஜித் குமாரும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுடனும் டெக்னீசியர்களுடனும் புகைப்படம் எடுத்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. ஹைதராபாத்தில் இருந்து சென்னை வரும் அஜித் குமார் வரும் 16ஆம் தேதி வரை ஓய்வில் இருக்கப் போகின்றார். சென்னை வந்த பின்னர் விடாமுயற்சி படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக அஜர்பைஜான் செல்ல உள்ளார் அஜித்குமார்.
எமோஷ்னல் போஸ்ட்
இந்நிலையில் குட் பேட் அக்லி படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் தனது சமூக வலைதளப்பக்கத்தில், முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்த பின்னர் அஜித்குமாருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து, அதில், " குட் பேட் அக்லி படத்திற்காக உங்களது அற்பணிப்பும் ஈடுபாடும் எங்களை மிகவும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது சார். உங்களுக்கு நான் என்றைக்கும் நன்றியுள்ளவன் சார். உங்களுக்கு எனது அன்புகள் சார்" எனக் குறிப்பிட்டுள்ளார். ஆதிக் ரவிச்சந்திரனின் இந்த பதிவு அஜித் ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி வருவதுடன், குட் பேட் அக்லி படம் ஹாலிவுட் தரத்திற்கு உருவாகி வருகின்றது என்ற பேச்சும் அடிபடுகின்றது.

குட் பேட் அக்லி படத்தின் அடுத்த சூட்டிங் எப்போது?
விடாமுயற்சி படப்பிடிப்பு அஜர்பைஜானில் வரும் 20ஆம் தேதியில் இருந்து 45 நாட்கள் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. படத்தை மிக விரைவில் முடித்து தீபாவளிக்கு ரிலீஸ் செய்யவும் படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அஜர்பைஜானில் அதிரடி சண்டைக் காட்சிகளும் பாடல் காட்சிகளும் படமாக்கப்படவுள்ளது. விடாமுயற்சி படப்பிடிப்பை முடித்துவிட்டு அஜித் குமார் ஜப்பான் சென்று குட் பேட் அக்லி படக்குழுவினருடன் இணைய உள்ளார்.
பொங்கல் குட் பேட் அக்லி ரிலீஸ்
விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படத்தில் ஓய்வில்லாமல் நடித்து வரும் அஜித்குமார் வரும் தீபாவளிக்கும் அடுத்த ஆண்டு பொங்கலுக்கும் ரசிகர்களுக்கு விருந்து வைக்க தயாராகவே இருக்கின்றார். தீபாவளிக்கு விடாமுயற்சியும் பொங்கலுக்கு குட் பேட் அக்லியும் ரிலீசாகவுள்ளதால், அஜித் குமாரின் ரசிகர்கள், தீபாவளியும் எங்களதுதான் பொங்கலும் எங்களதுதான் என்ற உற்சாகத்தில் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











