Good Bad Ugly Box Office: தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடியா.. அஜித் யாருன்னு காட்டிட்டாரு மாமே
சென்னை: அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள குட் பேட் அக்லி படத்திற்கு மிகப்பெரிய ஓபனிங் கிடைத்திருப்பது புது உற்சாகத்தை அளித்திருக்கிறது. அஜித் கரியரில் இதுவரை இல்லாத அளவிற்கு புது வசூல் சாதனையையும் குட் பேட் அக்லி படைத்திருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. இதையறிந்த ரசிகர்கள் பாட்டாசு போட்டு வெடிக்காத அளவிற்கு சமூகவலைதளங்களில் டிரெண்டிங் செய்து வருகின்றனர். துணிவு, விடாமுயற்சியை தாண்டிய வசூல் என கூறப்படுகிறது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லி படத்தினை அவரது ரசிகர்கள் வெறித்தனமாக திரையரங்கில் கொண்டாடி வருகின்றனர். இப்படத்திற்கு அஜித் படங்களிலேயே இதுதான் ரொம்ப ஸ்பெஷலான படம் என்றும் கூறப்படுகிறது. அஜித்தின் தீவிர ரசிகரான ஆதிக் சிறப்பாக இயக்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது. படம் குறித்த விமர்சகர்கள் சிலர் கதை, லாஜிக் எதையும் எதிர்பார்க்காமல் தியேட்டருக்குள் சென்று ஜாலியாக படத்தை ரசித்து விட்டு வரலாம். அஜித் ரசிகர்கள் இப்படத்தை 2 மாதத்திற்கு காெண்டாடுவார்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.

சிம்ரன் உருக்கம்: குட் பேட் அக்லி படத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு அஜித்துடன் இணைந்து நடித்திருக்கிறார். இதில், வாலி படத்தில் நடித்திருந்த சிம்ரன் பிரியா கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார். இதே கதாப்பாத்திரத்தை நினைவுகூறும் வகையில் சிம்ரன் கேமியோ ரோலில் நடித்திருக்கிறார். இந்நிலையில், இதனை ரசிகர்கள் கொண்டாடுவதையும், அவரது கதாப்பாத்திரத்திற்கு கொடுத்த வரவேற்பையும் பார்த்து மெய்சிலிர்த்து போன சிம்ரன் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். குட் பேட் அக்லி கொடுத்த வரவேற்பு மறக்க முடியாத நினைவுகளால் மலர்ந்திருக்கிறது. ரசிகர்கள் கொடுத்த பேரன்பை பார்த்து வாயடைத்து போனேன். அஜித்திற்கு நன்றி என தெரிவித்தார்.
பிளாக் பஸ்டர் ஹிட்: படம் வெளியான முதல் நாளின் வசூல் விவரத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டும் இதுவரை ரூ.30.9 கோடி வசூல் செய்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக சமூகவலைதளத்தில் அறிவித்துள்ளது. மேலும், பிளாக்பஸ்டர் சம்பவம் செய்திருப்பதாகவும் தெரிவித்துள்ளது. அஜித் நடித்த விடாமுயற்சி, துணிவு படங்கள் 28 கோடி என கூறப்படுகிறது. ஆனால், அஜித் சினிமா கரியரிலேயே மிகப்பெரிய பிரேக் இதுதானாம். இதுவரை இப்படியொரு சம்பவம் செய்ததில்லையாம். இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் மட்டும் 30 கோடி என்றால் உலகளவில் வசூலான விவரத்தை தயாரிப்பு நிறுவனம் தரப்பில் முழுமையாக வெளியிடவில்லை. குட் பேட் அக்லி படத்திற்கு கிடைத்திருக்கும் வரவேற்பால் படக்குழு திருப்தி அடைந்திருக்கிறதாம். ஆதிக் ரவிச்சந்திரனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ஜி.வி.பிரகாஷ் பாராட்டு மழையில் நனைந்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











