100 கோடி கிளப்பில் இணைந்த குட் பேட் அக்லி.. அடேங்கப்பா அஜித் ரசிகர்களையும் தாண்டி மக்கள் கொண்டாடுறாங்க!
சென்னை: விடாமுயற்சி திரைப்படமும் உலகளவில் 100 கோடிக்கும் அதிகமான வசூல் செய்தது. ஆனால், மக்கள் அந்த படத்தை பெரிதாக கொண்டாடவில்லை. அஜித் ரசிகர்கள் சிலருக்கு படம் பிடித்திருந்தாலும், பலர் படம் பிடிக்கவில்லை என்றே வெளிப்படையாக பேச ஆரம்பித்தனர். ஆனால், குட் பேட் அக்லி படம் முழுக்க முழுக்க ரசிகர்களுக்கான சம்பவம் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில், அதையெல்லாம் கடந்து தியேட்டரில் கொண்டாட்டமாக பார்க்கக் கூடிய படமாக மக்கள் குட் பேட் அக்லி படத்தை மாற்றி கொண்டாடி வருகின்றனர்.
பெரிய நடிகர்கள் படங்கள் என்றாலே நல்ல கதை இருக்கிறதா என்றெல்லாம் பார்த்து ரசிகர்கள் தியேட்டர்களுக்கு செல்வது இல்லை. ரசிகர்களுக்கான தியேட்டர் மொமண்ட்டுகள் ஒரு சில இருந்தாலே போதும் படத்தை கொண்டாடி விடுவார்கள். ஆனால், குட் பேட் அக்லி படத்தில் மொத்தமே ஓஜி சம்பவம் தான்.

அஜித் ரசிகர்கள் எல்லாம் ஒன்றுக்கு 5 முறை, 10 முறை என தியேட்டரை விட்டு வெளியே மனம் வராமல் தொடர்ந்து பார்த்து படத்தை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், 100 கோடி கிளப்பில் படம் அதிரடியாக இணைந்து விட்டதாக ரமேஷ் பாலா அறிவித்துள்ளார்.
கூஸ்பம்ப்ஸ் கொண்டாட்டம்: மொத்த மலேசியாவும் அவரோடதுதான் என டைம் ஷைன் சாக்கோ சொல்லும் போது பில்லா அஜித்தை காட்டி ஆதிக் ரவிச்சந்திரன் பண்ண தியேட்டர் மொமண்ட் சம்பவம் எல்லாம் ப்யூர் கூஸ்பம்ப்ஸ். அதே போல கடைசியில் ரெட் டிராகனாக ஏகே அஜித் குமார் காரில் இருந்து இறங்கி வந்து அந்த ஒரு கையை தூக்கிக் காட்டி ஹாய் சொல்லும் காட்சிகளையும் படம் முடிந்து இந்த படத்தில் நடிக்கும் போது அஜித் எப்படியெல்லாம் என்ஜாய் பண்ணார் என்கிற ப்லூப்பர்ஸ் கூட ரசிகர்களை கடைசி வரை தியேட்டரை விட்டு வெளியே வரவிடாமல் செய்துவிட்டன. விமர்சனங்களை எல்லாம் பார்க்காமல் போய் படத்தை கொண்டாடுங்க என பிரசாந்த் ரங்கசாமி சொன்ன நிலையில், ரசிகர்கள் இந்த முறை அஜித் படத்தை கொண்டாடியே தீர வேண்டும் என கூட்டம் கூட்டமாக தியேட்டர்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.
100 கோடி வசூல்: 2.5 நாட்களிலேயே குட் பேட் அக்லி திரைப்படம் 100 கோடி வசூலை ஈட்டி விட்டதாக பாக்ஸ் ஆபீஸ் நிபுணர் ரமேஷ் பாலா தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். முதல் நாளில் தமிழ்நாட்டில் 30.9 கோடி ரூபாய் வசூலை குட் பேட் அக்லி வசூல் செய்த நிலையில், உலகளவில் தற்போது 100 கோடி வசூலை படம் கடந்துள்ளதாக ரமேஷ் பாலா கூறியுள்ளார். ஆனால், இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மைத்ரி மூவி மேக்கர்ஸ் இன்னமும் அறிவிக்கவில்லை. நிச்சயம் நாளை அதிகாரப்பூர்வ பாக்ஸ் ஆபீஸ் போஸ்டர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
200 கோடியை கடக்கும்: அஜித் குமாரின் குட் பேட அக்லி திரைப்படம் வரும் திங்கட்கிழமை வரை தொடர்ந்து தியேட்டர்களில் ஓடி 200 கோடி ரூபாய் வசூலை கடக்கும் என்கின்றனர். பொதுமக்களும் அஜித் குமாரை இப்படி இதுவரை பார்த்ததில்லை என்றும் நல்லா இருக்கு என கொண்டாட ஆரம்பித்தது தான் அதிக வசூல் வரக் காரணம் என்கின்றனர். அடுத்த படமும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் நடித்தால் நிச்சயம் இண்டஸ்ட்ரி ஹிட் கன்ஃபார்ம் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











