குட் பேட் அக்லி பீவர் குறையலை.. 9 நாளில் இத்தனை கோடியா?.. முழு விவரம் உள்ளே இருக்கு

சென்னை: அஜித், த்ரிஷா, பிரபு ஆகியோர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான குட் பேட் அக்லி திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது. விடாமுயற்சியின் படத்தை தாண்டி இப்படம் மிகுந்த வரவேற்பை பெற்றிருப்பதால் படக்குழுவினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஆனால், இதுவரை இல்லாத அளவிற்கு முந்தைய படங்களை காட்டிலும் அஜித் கரியரில் வசூல் சாதனையில் துவம்சம் செய்திருக்கிறது குட் பேட் அக்லி. வசூல் விவரத்தை கேட்டு அஜித்தின் ரசிகர்கள் கொண்டாட்ட மன நிலைக்கு சென்றுள்ளனர்.

அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படம் பில்லா, அட்டகாசம், வேதாளம், வாலி என அஜித் நடித்த அனைத்து படங்களின் ரெபரன்ஸாக இருப்பதாக விமர்சகர்கள் தெரிவித்தனர். இருப்பினும் அஜித் ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடி வருகின்றனர். படம் ரிலீஸ் ஆன இரண்டாவது நாளே 100 கோடி கிளப்பில் இணைந்தது குட் பேட் அக்லி. மேலும், இப்படத்தில் கேமியோ ரோலில் வந்து கலக்கிய சிம்ரன் மனதிற்கு நெருக்கமான படமாக இருப்பதாகவும் தெரிவி்ததார். வாலி படத்திற்கு பிறகு அஜித்துடன் சிம்ரன் இணைந்து நடித்திருக்கிறார். 90ஸ் கிட்ஸ்களை கவர்ந்த தொட்டு தொட்டு பேசும் சுல்தானா பாடல் இணையத்தில் டிரெண்டிங்காகி வருகிறது.

good-bad-ugly-movie-collects-200-crores-in-9-daysgood-bad-ugly-movie-collects-200-crores-in-9-days

நாளுக்கு நாள் குட் பேட் அக்லி திரைப்படம் வசூல் சாதனை படைத்து வருகிறது. ரசிகர்களை தாண்டி இப்படத்தை பார்க்க குடும்பம் குடும்பமாக வந்து செல்வதாக தியேட்டர் உரிமையாளர்களும் தெரிவிக்கின்றனர். மேலும், படத்தின் வெற்றி விழாவில் பேசிய ஆதிக் ரவிச்சந்திரன், படம் வெற்றி அடைந்து விட்டது, அதை தலையில் எடுத்துக்கொள்ளாதே. வெற்றியை பற்றிய எண்ணத்தை மறந்து விடுங்கள், உங்களின் தோல்வியை வீட்டிற்கு எடுத்து செல்ல வேண்டாம். அடுத்த வேலைகளை கவனியுங்கள் என அஜித் தெரிவித்ததாக ஆதிக் கூறினார். மேலும், அஜித்தை வைத்து அடுத்த படத்தை இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால், அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் உலகிலேயே நான்தான் மகிழ்ச்சியான நபராக இருப்பேன் என ஆதிக் ரவிச்சந்திரன் தெரிவித்தார். மேலும், என் மனைவிக்கு கூட இத்தனை முறை ஐ லவ் யூ சொன்னது கிடையாது. அஜித் சார் ஐ லவ் யூ என தெரிவித்தார்.

good-bad-ugly-movie-collects-200-crores-in-9-days

9 நாட்கள் வசூல் நிலவரம்: குட் பேட் அக்லி படத்தின் வெளியாகி வெற்றி விழாவும் கொண்டாடியாச்சு. ஆனால், படத்தின் வைப் மோடு இன்னும் மாறவில்லை. அஜித் ரேஸில் பறப்பதை போன்று குட் பேட் அக்லி படமும் வசூலில் படு வேகத்தில் செல்கிறது. கடந்த 9 நாட்களில் இப்படம் 200 கோடியை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. அஜித் ரசிகர்கள் வெடி வெடித்து கொண்டாடுங்கள் என்றும் தெரிவித்திருக்கிறது. அஜித்தின் சினிமா கரியரில் அதிக வசூலை ஈட்டிய படம் என்றால் குட் பேட் அக்லி. இதற்கு முன்பு வெளியான விடாமுயற்சி திரைப்படம் பாக்ஸ் ஆஃபிஸில் டிசாஸ்டர் படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. இதுவரை எந்த புதுப்படங்களும் இல்லாத நிலையில், குட் பேட் அக்லியை காண அனைத்து தரப்பு மக்களும் திரையரங்கிற்கு செல்கின்றனர். மேலும், முழுக்க முழுக்க அஜித் படமாக கமர்ஷியல் ஹிட் அடைந்திருப்பது மிகப்பெரிய பிளஸ் ஆக உள்ளது என ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X