விடாமுயற்சியை விட்டுத்தள்ளு.. ‘குட் பேட் அக்லி’ அப்டேட் சுடச்சுட வருது.. சுரேஷ் சந்திரா ட்வீட்!

சென்னை: நடிகர் அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தற்போது இன்று மாலை 'குட் பேட் அக்லி' படத்தின் அப்டேட் வருகிறது என்கிற அறிவிப்பை வெளியிட்டு அஜித் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் சமீபத்தில் 'குட் பேட் அக்லி' படத்தின் படப்பிடிப்பை ஆரம்பித்து 2 நாட்கள் நடித்து விட்டார் என தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் அந்தப் படத்தின் அப்டேட் இன்று மாலை வெளியாகும் என்கிற சந்தோஷமான செய்தியை சுரேஷ் சந்திரா வெளியிட்டுள்ளார். அதைப் பார்த்த இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனும் தனது ட்விட்டர் பக்கத்தில் அப்டேட் கொடுத்துள்ளார்.

Good Bad Ugly movie exclusive update will arrive on today evening

லைகா தயாரிப்பு அஜித் நடித்த விடாமுயற்சி திரைப்படம் என்ன ஆனது என்கிற கேள்வியை ரசிகர்கள் தொடர்ந்து எழுப்பி வருகின்றனர்.

விடாமுயற்சியை விட்டுத் தள்ளு: அஜித்தின் 62-வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த படத்திலிருந்து அவர் அதிரடியாக வெளியேற்றப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வரிசையாக நல்ல படங்களை கொடுத்து வந்த இயக்குநரை அஜித் நீக்கியது ஏன் என்கிற கேள்விகளும் எழுந்தன. விக்னேஷ் சிவனுக்கு பதிலாக அஜித்தின் 62-வது படமான விடாமுயற்சி படத்தை மகிழ் திருமேனி இயக்க முன்வந்தார். ஆனால், தற்போது அந்த திரைப்படம் என்ன ஆனது என்கிற கேள்வி ரசிகர்கள் மத்தியில் அமைந்துள்ளது.

விடாமுயற்சி விபத்து வீடியோ: கடைசியாக சுரேஷ் சந்திரா விடாமுயற்சி படத்தில் விபத்து வீடியோவை வெளியிட்டு இருந்தார். நடிகர் அஜித் மற்றும் பிக் பாஸ் ஆரவ் இருவரும் அஜர்பைஜானில் காரில் சென்று கொண்டிருந்தபோது அந்த கார் கவிழ்ந்து விபத்தாகும் காட்சி படமாக்கப்பட்டது டூப் போடாமல் நடிகர் அஜித் உயிரைக் கொடுத்து அந்த காட்சியில் நடித்து இருந்தார் என்றும் அந்த படம் எப்படி டிராப் ஆகும் என்கிற கேள்வியை சுரேஷ் சந்திரா எழுப்பி இருந்தார். ஆனால், மீண்டும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு எப்போது துவங்கும் என்பது பற்றி இதுவரை அவர் தெரிவிக்கவில்லை.

குட் பேட் அக்லி அப்டேட்: இன்று மாலை 6:31 மணிக்கு அஜித் குமாரின் குட் பேக் அக்லி படத்தின் அப்டேட் வெளியாகும் என்கிற அறிவிப்பை சற்றுமுன் சுரேஷ் சென்றார் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த ட்வீட்டை ஆதிக் ரவிச்சந்திரனும் ரீட்வீட் செய்துள்ளார். விடாமுயற்சி படத்தின் அப்டேட் கிடைக்கவில்லை என்றாலும் அஜித் ரசிகர்களுக்கு இன்று மாலை குட் பேட் அக்லி படத்தின் அப்டேட்டாவது கிடைக்கிறதே என ரசிகர்கள் சந்தோஷத்துடன் உள்ளனர்.

Good Bad Ugly movie exclusive update will arrive on today evening

பூஜை வீடியோ: 'குட் பேட் அக்லி' படத்தின் பூஜை சமீபத்தில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் சார்பில் ஹைதராபாத்தில் போடப்பட்டது என்றும் அதன் பூஜை வீடியோவை தான் இன்று மாலை வெளியிடப் போவதாக கூறுகின்றனர். அப்படி இல்லை என்றால் கடந்த ஆண்டு மே 1ம் தேதி அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான விடாமுயற்சி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் போல 'குட் பேட் அக்லி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X