Good Bad Ugly: AK வரார் வழி விடுடா.. மரண மாஸ் மாமே.. குட் பேட் அக்லி டிரைலர் டிரெண்டிங் லோட்
சென்னை: இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி படத்தின் டிரைலர் சற்று முன் வெளியானது. பட்டாஸ் வெடிக்க மாஸ் என்ட்ரியும், பஞ்ச் வசனங்களும் தெறிக்க விடுகின்றன. அஜித்தின் ரசிகர்களுக்கு புதுமையான விருந்து கன்பார்ம் என்பது உறுதியாகியுள்ளது. இருப்பினும் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில் குட் பேட் அக்லி டிரைலர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா என்பதை இதில் காணலாம்.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித், த்ரிஷா, பிரசன்னா, அர்ஜூன் தாஸ், சுனில் ஆகியோர் நடித்திருக்கும் படம் குட் பேட் அக்லி. இப்படம் வரும் 10ஆம் தேதி வெளியாக இருப்பதால் படத்தின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. படம் குறித்த அப்டேட்டுகளையும் இயக்குநர் ஆதிக் அள்ளித் தெளித்து வருகிறார். இவர் ஒரு பக்கம் எதிர்பார்ப்பை எகிற வைத்தாலும், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தெறிக்க விடுகிறார். இசையும் பாட்டும் வெயிட்டா இருக்கும் என கூறியுள்ளார்.

முன்பு வெளியான படத்தின் டீசரில் வாலி, வேதாளம், அட்டகாசம், காதல் மன்னன், அமர்க்களம் படத்தில் உள்ள கெட்டப்புகளில் வந்து கலக்கியிருந்தார் அஜித். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இப்படம் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகியுள்ளது. குட் பேட் அக்லி படத்தை மனி ஹெய்ஸ்டோடு ஒப்பிட்டு பேசப்பட்டிருந்தது. இதனைத்தொடர்ந்து இன்று இரவு 9.01 மணிக்கு படத்தின் டிரைலர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சர்வர் கோளாறால் குட் பேட் அக்லி டிரைலர் வெளியாக தாமதம் ஆனது. தாமதம் ஆனாலும் அஜித் சம்பவம் செய்திருக்கிறார். அதன்படி டிரைலர் வெளியாகி சரவெடி போல் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
மரண மாஸ் மாமே: குட் பேட் அக்லி டிரைலரில் மரண மாஸாக வெளிவந்திருக்கிறது. இப்போதே அஜித்தின் ரசிகர்கள் டிரெண்டிங் செய்து வருகின்றனர். டீசரை காட்டிலும் தரமான அஜித் தரமான சம்பவம் செய்திருக்கிறார் என்றும் நெட்டிசன்கள் தெரிவிக்கின்றனர். டீசரில் அஜித் மட்டுமே சம்பவம் செய்திருந்தார். டிரைலரில் த்ரிஷாவின் கேரக்டர் என்ன என்பது தெரியவந்திருக்கிறது. வரும் 10ஆம் தேதி படம் ஹிட் என ரசிககர்கள் தெரிவி்ககின்றனர். முன்னதாக துப்பாக்கி தோட்டா பாடல்கள் டிரெண்டிங் ஆனது. ஆதிக் ரவிச்சந்திரன் வழக்கமான கேங்ஸ்டர் கதையில் கொஞ்சம் மசாலாவான வசனங்களை தூவி தரமான செய்கை தொடங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

மங்காத்தாடா: அர்ஜூன் தாஸ் இப்படத்தின் வில்லன் என்பதை படத்தின் டிரைலரை பார்க்கும் போது தெரிகிறது. தீனா, வில்லன், அட்டகாசம், மங்காத்தா பட சீன்கள் என அனல் பறக்கிறது. மங்காத்தா படத்தில் த்ரிஷாவின் அப்பாவை காரில் இருந்து தள்ளிவிடும் காட்சியை ஞாபகப்படுத்துவது போல் இருக்கிறது. அதேபோன்று தீனா பட வசனங்களும் இடம்பெறுகின்றன. மொத்தத்தில் இது ஒரு தரமான செய்கை என்றே கூறலாம். ஏ.கே.சார் வர்றாரு வழி விடு என்ற வசனங்களுக்கேற்ப பன்ச் வசனம் தெறிக்கிறது. தியேட்டரில் அனல் பறக்க ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
பஞ்சுமிட்டாய் பாட்டு: மார்க் ஆண்டனி படத்தின் க்ளைமாக்ஸில் எட்டுப்பட்டி ராசா படத்தில் இடம்பிடித்த பஞ்சுமிட்டாய் சேலை கட்டி பாடல் வைப் மோடில் செட் செய்திருந்தார் இயக்குநர். அதே போன்று டிரைலர் தொடங்கும் போதே பஞ்சுமிட்டாய் சேலை கட்டி பாடலுக்கு அஜித் குமார் நடனமாடுவதுடன் தொடங்குகிறது. இப்பாடல் படத்தின் டிரைலர் முழுக்க வருகிறது. பிரசன்னா, சுனில், ரெடின் கிங்ஸ்லி என நட்சத்திர பட்டாளமே படத்தில் நடித்திருப்பது தெரியவருகிறது. த்ரிஷா அழகில் மிளிர்கிறார். அப்படி ஒரு அழகுனா பார்த்துக்கோங்க. அசல் படத்தில் வரும் கெட்டப்பில் பிரபு இருக்கிறார். கேங்ஸ்டராக இருக்கும் அஜித்திற்கு பிரபு உதவி செய்வது போன்று தெரிகிறது.

மாஸ் காட்டும் அர்ஜூன் தாஸ்: மாஸ்டர் படத்திற்கு பிறகு அர்ஜூன் தாஸிற்கு இப்படம் மிகப்பெரிய பிரேக் கொடுக்கும் என கூறலாம். அஜித்திற்கு இணையான கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஏ.கே. உன் வரலாறை மொத்தமும் தெரிஞ்சு வச்சிருக்கேன் கூறும் வசனங்கள் மாஸ் கிளாசிக்காக இருக்கிறது. டிரைலர் முழுக்க வெடி வெடிப்பது போல் துப்பாக்கி சத்தமும் தோட்டா தெறிக்கும் வசனங்களுமே இருக்கின்றன. குறிப்பாக இது ஒரு ஃபேன் பாய் படம் தான். ரஜினிக்கு எப்படி கார்த்திக் சுப்பராஜ் பேட்ட படத்தில் மரண மாஸ் காட்டியிருந்தாரோ அதே போன்று குட் பேட் அக்லி படத்தையும் ஆதிக் அஜித்தை மாஸாக காட்ட முயற்சித்திருப்பது டிரைலரை பார்க்கும் போது தெரிகிறது.
யோகி பாபு மாஸ்: யோகி பாபு வரும் ஒரு பிரேமில் டேய் ஏகே வர்றார் வழிவிடு என பஞ்ச் வசனம் பேசுகிறார். இப்படி டிரைலர் முழுக்க சர்ப்ரைஸ் காத்திருக்கிறது. சர்வர் கோளாறால் டிரைலர் வர தாமதம் ஆனாலும் ரசிகர்கள் டிரைலரை டிரெண்டிங் செய்து வருகின்றனர். மேலும், இது ஒரு வழக்கமான கேங்ஸ்டர் படம் என்பது போல் டிரைலரில் தெரிந்தாலும் அட்டகாசம், தீனா, மங்காத்தா, வரலாறு, வாலி படங்களின் ரெபரன்ஸ் இருப்பதால் பார்க்க சுவாரஸ்யமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரசிகர்கள் கொண்டாட்டம்: இவ்வளவு நேரம் காத்திருப்பிற்கு அஜித்தின் வருகை எங்களுக்கு கொண்டாட்டம் தான். இந்த அஜித்தை திரையில் பார்க்க ஆவலோடு காத்திருப்பதாகவும் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். ரொம்ப காத்திருக்கோம் மாமே சீக்கிரம் வந்து ஆட்டத்தை ஆரம்பி எனவும் போஸ்ட் போட்டுள்ளனர். இப்போதே படத்தின் டிரைலரை பார்த்து அஜித்தின் ரசிகர்கள் டிகோடிங் செய்ய தொடங்கிவிட்டனர். இருங்க பாய் என்ற வசனம் தீ பறக்குது தல என்றும் தெரிவிக்கின்றனர். டிரைலரை பார்க்க பார்க்க பத்திக்குதாம். டிரைலரில் வரும் ஒவ்வொரு சீனும் கூஸ்பம்ப்ஸ் ஆக இருப்பதாகவும் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
குட் பேட் அக்லி டிரைலர் கவர்ந்ததா?: படத்தின் டிரைலரில் வரும் காட்சிகள் இரண்டு கேங்ஸ்டர்களுக்கும் நடக்கும் சண்டையை மையப்படுத்தி கதை உருவாகியிருப்பது போல் தெரிகிறது. இதில், அஜித்தின் முந்தைய படங்களின் புகைப்படங்களும் இடம்பிடித்திருக்கின்றன. குறிப்பாக ஜி.வி.பிரகாஷ் பிரமாதப்படுத்தியுள்ளார். படத்தின் கதைக்கேற்ப அவரது இசையும் படு ஸ்பீடாக இருக்கிறது. டிரைலர் எங்கே ஆரம்பித்து எங்கே முடிகிறது என்பதை கா்டடிலும், இதுதான் கதை என்பதை அளக்காமல் மீடியமாக இயக்குநர் ஆதிக் தெரிவித்திருக்கிறார். குறிப்பாக அஜித் ரசிகர்களுக்கு பிடித்த படமாக இது இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. முன்பு வந்த விடாமுயற்சியை விட சிறப்பான கமர்ஷியல் படமாக இது இருக்கும் என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











