GBU Ticket Booking: குட் பேட் அக்லி படத்துக்கு ஸ்பெஷல் ஷோ.. ஹவுஸ்ஃபுல்லான மல்டி பிளக்ஸ் தியேட்டர்கள்!

சென்னை: இந்த வாரம் வியாழக்கிழமை ஏப்ரல் 10ம் தேதி அஜித் குமாரின் குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாகிறது. காலை 9 மணிக்கு சிறப்புக் காட்சிக்கான அனுமதி கிடைக்குமா என ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த நிலையில், பிவிஆர் உள்ளிட்ட மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் 9 மணி காட்சிக்கான டிக்கெட் புக்கிங் தொடங்கப்பட்டு அதிரடியாக ஹவுஸ்ஃபுல் ஆகிவிட்டது.

கடந்த வாரமே குட் பேட் அக்லி படத்தின் டிக்கெட் புக்கிங் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால், 12 மணிக்கு மேலான காட்சிகளுக்கு மட்டுமே தியேட்டர்களில் டிக்கெட் முன்பதிவு தொடங்கப்பட்ட நிலையில், அஜித் ரசிகர்கள் 9 மணி சிறப்புக் காட்சிக்காக காத்திருந்தனர்.

Good Bad Ugly multiplex early morning shows are housefull in Tamil Nadu

இந்நிலையில், நேற்று நள்ளிரவு பிவிஆர், சினிபோலிஸ், ஐநாக்ஸ் உள்ளிட்ட மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் குட் பேட் அக்லி படத்துக்கான டிக்கெட் புக்கிங் தொடங்கப்பட்ட நிலையில், சர்வரை அஜித் ரசிகர்கள் கிராஷ் செய்துவிட்டனர்.

முதல் நாள் வசூல் எப்படி இருக்கும்?: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார், த்ரிஷா, அர்ஜுன் தாஸ், பிரபு, சுனில், சிம்ரன், பிரியா வாரியர், பிரசன்னா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படம் வரும் ஏப்ரல் 10ம் தேதி வெளியாகிறது. ஜி.வி. பிரகாஷ் குமார் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார். சோலோ ரிலீஸாக மஹாவீர் ஜெயந்தி விடுமுறை தினத்தைக் குறிவைத்து இந்த படத்தை ரிலீஸ் செய்யவுள்ள நிலையில், 9 மணிக்கான சிறப்புக் காட்சிக்கும் அனுமதி கிடைத்திருக்கிறது. 950 திரையரங்குகளில் தமிழ்நாட்டில் குட் பேட் அக்லி வெளியாகும் என்கின்றனர். முதல் நாளில் அதிகபட்சமாக குட் பேட் அக்லி வசூல் இந்தியளவில் 40 கோடி வரை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிக்கெட் புக்கிங் ஹவுஸ்ஃபுல்: காலை 9 மணிக்குத்தான் தமிழ்நாட்டில் அஜித் குமாரின் குட் பேட் அக்லி படம் ஆரம்பமாகிறது. பிவிஆர் உள்ளிட்ட மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் டிக்கெட் புக்கிங் தொடங்கப்பட்ட நிலையில், 9 மணி, 10 மணி, 12 மணிக்கான காட்சிகளின் டிக்கெட்டுகள் அதிரடியாக விற்றுத் தீர்ந்து ஹவுஸ்ஃபுல் ஆகிவிட்டது. அனைத்து தியேட்டர்களிலும் இன்று மாலைக்குள் முதல் நாள் காட்சிக்கான அனைத்து ஷோக்களும் ஹவுஸ்ஃபுல் ஆகிவிடும் என்றே தெரிகிறது.

விடாமுயற்சியில் மிஸ் ஆனது: மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார், த்ரிஷா நடிப்பில் கடந்த பிப்ரவரி 6ம் தேதி வெளியான விடாமுயற்சி படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் இப்படியொரு ஓபனிங் மற்றும் டிக்கெட்டுகளை வாங்கி குவித்து படத்தை பார்க்க வேண்டும் என்கிற ஆர்வம் பெரிதாக தென்படவில்லை. மேலும், முதல் காட்சிக்கு பிறகு வெளியான விமர்சனங்கள் காரணமாக அந்த படம் பெரியளவில் வசூல் செய்ய முடியாமல் தோல்வியை தழுவியது. ஆனால், குட் பேட் அக்லி படம் நிச்சயம் அஜித் ரசிகர்களை சந்தோஷப்படுத்தும் என்கிற நம்பிக்கையில் டிக்கெட் புக்கிங் சூடு பிடித்துள்ளது.

இந்த தடவை மிஸ் ஆகாது: அஜித் குமார் நடிப்பில் இதுவரை வெளியான வெற்றிப் படங்களை விட அதிக வசூல் வேட்டை நடத்தி குட் பேட் அக்லி இந்த மார்ச் மாதம் மிகப்பெரிய இண்டஸ்ட்ரி ஹிட்டை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் வாரம் 4 நாட்கள் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக குட் பேட் அக்லி படம் ஓடினால், மிகப்பெரிய வெற்றி உறுதி. இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனும் ரொம்ப ஹைப் ஏற்றாமல் ட்ரை பண்ணியிருக்கோம், படத்தை வந்து பாருங்க என பொறுப்புடன் பேசியுள்ள நிலையில், அவரது படைப்பு பேசும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X