GBU: கற்பகம் தியேட்டரை கதறவிட்ட தல ரசிகர்கள்.. ஜி.வி. பிரகாஷ் குமார் பகிர்ந்த மாஸ் வீடியோ!

கோவை: எங்கு திரும்பினாலும் அஜித் குமாரின் குட் பேட் அக்லி படம் குறித்த தகவல்களும், ரசிகர்களின் கொண்டாட்டங்கள் தான் கண்ணில் அகப்படுகிறது என்பது போல, கடந்த மூன்று நாட்களாக அஜித் குமாரின் ரசிகர்கள் செய்யும் அலப்பறை அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் குட் பேட் அக்லி படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் பகிர்ந்துள்ள வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

அஜித் குமாரின் 63வது படம் குட் பேட் அக்லி. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இந்த படத்தில், அஜித்துடன் த்ரிஷா, அர்ஜுன் தாஸ், சிம்ரன், பிரசன்னா, பிரபு, சுனில், ரெடின் கிங்ஸ்லி, யோகி பாபு, பிரியா வாரியர் என பலர் நடித்துள்ளார்கள். மைத்ரி மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் கடந்த 10ஆம் தேதி ரிலீஸ் ஆனது. படம் ரிலீஸ்க்கு முன்னர் படக்குழு சார்பில் வெளியிடப்பட்ட டீசர், டிரைலர் மற்றும் மூன்று பாடல்கள் என அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

Good Bad Ugly Music Director GV Praksha Kumar Shares Ajithkumar Fans Reactions At Theatre

ஹவுஸ் ஃபுல்: படம் தமிழ்நாடு முழுவதும் சுமார் 1000 திரையரங்குகளுக்கு மேல் ரிலீஸ் செய்யப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் திரையிடப்பட்ட பெரும்பாலான தியேட்டர்களில் இந்த வார இறுதி வரையிலுமே ஹவுஸ் ஃபுல் காட்சிகளாகத்தான் உள்ளது. அஜித்தின் வெறித்தனமான ரசிகர்கள் படத்தை பலமுறை பார்த்து வருகிறார்கள். படத்தின் வசூல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அஜித் திரைவாழ்க்கையில் அதிக வசூல் குவித்த படமாக இது மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் நாளில் தமிழ்நாட்டில் மட்டும் படம் ரூபாய் 30.9 கோடிகள் வசூல் செய்ததாக படக்குழு தெரிவித்துள்ளது.

Good Bad Ugly Music Director GV Praksha Kumar Shares Ajithkumar Fans Reactions At Theatre

வசூல் மழை: மேலும் இந்த வார இறுதிக்குள் படம் தமிழ் நாட்டில் மட்டும் ரூபாய் 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வெளிநாடு வசூல், அண்டை மாநில வசூல் கணக்கை எல்லாம் சேர்த்தால் படத்தின் மொத்த வசூல் மிகப்பெரிய பட்ஜெட்டாக இருக்கும் என கூறப்படுகிறது. எங்கு திரும்பினாலும் படத்திற்கு பாசிடிவான விமர்சனங்களே அதிகம் வந்து கொண்டே இருப்பதால் ரசிகர்கள் படக்குழுவை விட கொண்டாட்டமாக இருக்கிறார்கள். அதற்கு காரணம் முந்தைய படமான விடாமுயற்சி சந்தித்த மிகப்பெரிய தோல்விதான்.

Good Bad Ugly Music Director GV Praksha Kumar Shares Ajithkumar Fans Reactions At Theatre

வீடியோ: இந்நிலையில் படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் தனது எக்ஸ் பக்கத்தில் குட் பேட் அக்லி படம் திரையிடப்பட்ட கோவை கற்பகம் சினிமாஸ் திரையரங்கத்திற்குள் எடுக்கப்பட்ட வீடியோவை பகிர்ந்துள்ளார். அவர் பகிர்ந்துள்ள வீடியோ, படத்தின் எண்ட் டைட்டில் கார்ட் போட்ட பின்னர் ரசிகர்களின் ஆரவாரத்தால் மொத்த திரையரங்கமுமே அதிர்கிறது. அந்த வீடியோவைப் பகிர்ந்துள்ள ஜி.வி. பிரகாஷ் குமார் , " GBU மாமே... காட் பிளஸ் யூ பிளாஸ்ட்டே.. தியேட்டர்ஸ் ஆன் ஃபையர்" என பதிவிட்டுள்ளார். கோவையில் உள்ள கற்பகம் சினிமாஸ் என்பது கோவை மாநகரில் மட்டும் இல்லாமல், கோவை மாவட்டத்தில் இருக்கும் மிகப்பெரிய தியேட்டர்களில் ஒன்று. இந்த தியேட்டரில் ஒரே நேரத்தில் சுமார் 1000 நபர்கள் அமர்ந்து படம் பார்க்கும் அளவுக்கு மிகப்பெரிய தியேட்டர் ஆகும்.

Good Bad Ugly Music Director GV Praksha Kumar Shares Ajithkumar Fans Reactions At Theatre

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X