Good Bad Ugly Public Review: அஜித்தை தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் ஆதிக்.. ரசிகர்கள் பாராட்டு!

சென்னை: அஜித் குமார், த்ரிஷா, அர்ஜுன் தாஸ், பிரசன்னா, சுனில், பிரபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் குட் பேட் அக்லி. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இந்த படத்திற்கு விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் படத்திற்கு ரசிகர்களும் பொது மக்களும் என்ன மாதிரியான விமர்சனத்தைக் கொடுத்துள்ளார்கள் என்பது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

ஒரு ரசிகர் கூறும்போது, படத்தில் ரெஃபரன்ஸ் இல்லை. ரெஃபரன்ஸில் தான் படமே உள்ளது. படத்தில் லாஜிக்காக பார்த்தால் படத்தில் ஒன்றும் இருக்காது. ஆனால் ஜாலியாக படம் பார்க்க நினைப்பவர்களுக்கு இந்த படம் நல்ல படமாக இருக்கும். விடாமுயற்சி படத்தில் மாஸ் காட்சிகள் இல்லை எனக் கூறியவர்கள், இந்த படத்தை பார்த்தால் என்ன எல்லாம் ஒரே மசாலாவாக உள்ளது எனக் கூறுவார்கள். அஜித் ரசிகர்களுக்கு இந்த படம் தரமான படம் எனக் கூறியுள்ளார்.

Good Bad Ugly Public Review Ajithkumar Fans Celectates GBU With Possitive Response

குட் பேட் அக்லி தியேட்டரிக்கல் எக்ஸ்பீரியன்ஸ் படமாக உள்ளது. சண்டைக் காட்சிகளுக்கும் பாடலுக்கும் அஜித்தின் நடிப்புக்கும் பக்காவாக பொருந்திப் போகிறது. திருவிழா இல்லாத நாட்களில் படம் வெளியானாலும், அஜித்திற்கு இருக்கும் மாஸ் ஓபனிங் உடன் இந்த படம் அமைந்துள்ளது. ஜி.வி. பிரகாஷ் இந்த படத்திற்காக கடுமையாக உழைத்து உள்ளது தெரிகிறது. இது மட்டும் இல்லாமல், ரீமிக்ஸ் பாடல்கள் இருந்தாலும் ஜி.வி.யின் இசை தனியாக தெரிகிறது. அர்ஜுன் தாஸ் சிறப்பாக நடித்துள்ளார். அஜித்துக்கு வில்லன் எனும்போது மிகவும் சிறப்பாக நடித்துள்ளார், என ஒரு ரசிகர் தெரிவித்துள்ளார்.

Good Bad Ugly Public Review Ajithkumar Fans Celectates GBU With Possitive Response

தளபதி ரசிகன்: மற்றொரு ரசிகர் கூறும்போது, குட் பேட் அக்லி படம் தரமான சம்பவம். படத்தின் முதல் காட்சியில் இருந்து க்ளைமேக்ஸ் வரை படம் முழுவதும் கூஸ்பம்ஸ் காட்சிகளாகவே நிறைந்துள்ளது. நான் தளபதி ரசிகன். ஆனாலும் தலையை மிகவும் ரசித்தேன். 80'ஸ் 90'ஸ் என அனைத்து ரெஃபரன்ஸையும் அரைத்து ஒரு ஜூஸ் மாதிரி கொடுத்துள்ளார் ஆதிக். ஆதிக் ரவிச்சந்திரன் இந்த படத்தின் இயக்குநர் கிடையாது, அவர் அஜித்தை தோளில் வைத்து தான் ஆடவில்லை. மற்றபடி கொண்டாடுகிறார். ஜி.வி. படத்திற்கு மாபெரும் பலமாக இருக்கிறார். பாடல்கள் மட்டும் இல்லாமல் பின்னணி இசையிலும் மாஸ் காட்டியுள்ளார் என தெரிவித்துள்ளார்.

Good Bad Ugly Public Review Ajithkumar Fans Celectates GBU With Possitive Response

முத்தம்: அதேபோல், மற்றொரு ரசிகர் கூறும்போது, ஆதிக் ரவிச்சந்தரனுக்கு முதலில் ஒரு முத்தம் கொடுக்க ஆசைப்படுகிறேன். அந்த அளவுக்கு தரமான படத்தை எடுத்து வைத்துள்ளார். அஜித்தை ரசிகர்கள் எப்படி எல்லாம் பார்க்க வேண்டும் என ஆசைப்பட்டார்களோ அதை எல்லாம் இந்த படத்தில் காட்டியுள்ளார். அஜித் சினிமாவை விட்டு போகிறார் என்றால், அவருக்கு இந்த படத்தை எடுத்து வைக்கலாம் அந்த அளவுக்கு இந்த படத்தில் அஜித்தின் எல்லா ரெஃபரன்ஸும் உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

Good Bad Ugly Public Review Ajithkumar Fans Celectates GBU With Possitive Response

வசூல்: குட் பேட் அக்லி படத்தை பார்த்த விமர்சகர்கள் தொடங்கி, ரசிகர்கள் வரை பலரும் படத்தில் லாஜிக் எல்லாம் இல்லாமல் இந்த படத்தை பார்த்தால், படம் தரமான தியேட்டரிக்கல் சம்பவம் எனத் தெரிவித்து வருகின்றனர். இது படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இது வசூலிலும் எதிரொலிக்கும் என்பதால் குட் பேட் அக்லி படத்தின் வசூல் அஜித் படத்தின் அதிகப்படியான வசூலாக மாறி நிற்க அதிக வாய்ப்பு உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X