குட் பேட் அக்லி கதை இதுதானாம்.. பிரபலம் ஓபனாக சொல்லிட்டாரே.. சலார், எம்புரான் நடிகர் தான் கருவே!

சென்னை: யாரு இந்த கார்த்திகேயா தேவ் என ரசிகர்கள் இந்நேரம் சோஷியல் மீடியாவில் அலசி ஆராய தொடங்கியிருப்பார்கள். சலார் படத்தில் இளம் வரதராஜ மன்னராக நடித்து மிரட்டியிருப்பார். சமீபத்தில் வெளியான மோகன்லாலின் எம்புரான் படத்திலும் பிருத்விராஜின் இளம் வயது கதாபாத்திரத்தில் இவர் தான் நடித்திருப்பார். இந்நிலையில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் இயக்கத்தில் விரைவில் வெளியாகவுள்ள குட் பேட் அக்லி படத்திலும் இவர் தான் மையக்கரு என்கின்றனர்.

குட் பேட் அக்லி படத்தில் ஆக்‌ஷனை தாண்டிய எமோஷனல் கனெக்ட் ஒன்று இருக்கு என ஆதிக் ரவிச்சந்திரன் சொன்னாரே அந்த எமோஷனல் கனெக்ட்டே இந்த கார்த்திகேயா தேவ் தான். அஜித் குமாரின் மகனாக இந்த படத்தில் அவர் நடித்துள்ளார்.

Good Bad Ugly story

நேற்று வெளியான டிரைலரில் சரக்கு என் வைஃப்க்காக விட்டேன், வயலென்ஸ் என் பையனுக்காக விட்டேன். ஆனால், என் பையனுக்கு ஒன்னுன்னா விட்டதை தொட்டுத்தானே ஆகணும் என அஜித் பேசும் வசனத்துக்கு பின்னால் தான் மொத்த கதையும் ஒளிந்திருக்கிறது.

குட் பேட் அக்லி நடிகர்கள்: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி படத்தில் அஜித் குமார், த்ரிஷா, பிரபு, அர்ஜுன் தாஸ், யோகி பாபு, பிரசன்னா, கார்த்திகேயா தேவ், சிம்ரன், பிரியா பிரகாஷ் வாரியர், ரோடீஸ் ரகு, கிங்ஸ்லி, ஜாக்கி ஷெராஃப், டின்னு ஆனந்த், கேஜிஎஃப் அவினாஷ், சுனில் மற்றும் ஷாயாஜி ஷிண்டே உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். வரும் ஏப்ரல் 10ம் தேதி உலகம் முழுவதும் குட் பேட் அக்லி திரையாங்குகளீல் வெளியாக காத்திருக்கிறது. அதற்கான டிக்கெட் முன்பதிவு நேற்று தொடங்கியுள்ளது.

Good Bad Ugly story

சர்வர் எல்லாம் கிராஷ் ஆகல: விடாமுயற்சி பாதிப்பு இன்னமும் மக்கள் மத்தியில் நீங்கவில்லை என்று தான் தெரிகிறது. பல தியேட்டர்களில் ஆரஞ்சு நிறத்தில் தான் டிக்கெட் புக்கிங் காணப்படுகிறது. நேற்று இரவு 8 மணிக்கு மேல் டிக்கெட் புக்கிங் தொடங்கிய நிலையில், இன்னமும் ரெட் அலர்ட்டாக புக் மை ஷோ உள்ளிட்ட டிக்கெட் புக்கிங் தளங்களில் முதல் நாளுக்கான டிக்கெட் புக்கிங்கே மாறவில்லை. டிரைலர் ரிலீஸுக்குப் பிறகு தான் ஆரஞ்சு நிறத்தில் தியேட்டர்கள் மாறின என்பது குறிப்பிடத்தக்கது. இன்று இரவுக்குள் முதல் நாளுக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிடுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இன்னமும் சிறப்புக் காட்சிக்கான அனுமதி கிடைக்காத நிலையில், 9 மணி காட்சிகள் தொடங்கவில்லை.

மகனை காப்பாற்றுவது தான் கதை: அஜித்தின் மகனாக சலார் மற்றும் எம்புரான் படங்களில் சின்ன வயது பிருத்விராஜாக நடித்த இளம் நடிகர் கார்த்திகேயா தேவ் தான் இந்த படத்தில் அர்ஜுனின் மகனாக நடித்திருக்கிறார். அவரை அர்ஜுன் தாஸ் கேங் கடத்திச் செல்ல அங்கிருந்து தனது மகனை அஜித் குமார் எப்படி போர் செய்து மீட்கிறார் என்பது தான் கதையாக இருக்கும் என தனஞ்செயன் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். விடாமுயற்சி படத்தில் மனைவி த்ரிஷாவை தேடி அலைந்து அஜித் காப்பாற்றிய நிலையில், குட் பேட் அக்லி படத்தில் மகனை காப்பாற்றுவது தான் கதையா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X