Ajithkumar: ஹாலிவுட் வில்லனாக காட்சி அளிக்கும் அஜித்குமார்.. படக்குழு இறக்கிய புதிய ஃபோட்டோ!

ஸ்பெயின்: அஜித்குமார் நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள படம் விடாமுயற்சி. இந்தப் படத்தின் படப்பிடிப்பு 95 சதவீதம் முடிவடைந்துவிட்டது. படத்தில் இன்னும் ஒரு பாடல் மட்டுமே படப்பிடிப்பு செய்யவேண்டி உள்ளது என கூறப்படுகின்றது. மீதம் உள்ள பாடலையும் படமாக்கிவிட்டால் படத்தின் ரிலீஸ் வேலைகளை தொடங்கிவிடலாம் என்ற எண்ணத்தில் லைகா நிறுவனம் உள்ளது. அதேபோல் அஜித் தற்போது குட் பேட் அக்லி படத்திலும் நடித்து வருகின்றார். குட் பேட் அக்லி படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவுள்ளது என ஏற்கனவே படக்குழு திட்டமிட்டு வேகமாக செயல்பட்டு வருகின்றது. படத்தினை மார்க் ஆண்டனி படத்தினை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகின்றார். தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைக்கின்றார். ஏற்கனவே படக்குழு இரண்டுக்கும் மேற்பட்ட போஸ்டர்களை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் அஜித்தின் புதிய லுக் புகைப்படத்தை படக்குழு வெளியிட்டுள்ளது.

தமிழ் சினிமாவிலேயே தனக்கென தனி சினிமா பாணியைக் கொண்டுள்ள நடிகர் என்றால் அது அஜித்குமார்தான். அவர் கடந்த சில வருடங்களாகவே அதிகப்படியான நெகடிவ் கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். அந்த வகையில் குட் பேட் அக்லி படத்திலும் நெகடிவ் கதாபாத்திரத்தில் நடிக்கின்றார் என போஸ்டரைப் பார்த்ததும் ரசிகர்கள் கமெண்ட் செய்துவருகின்றனர். படத்தின் படப்பிடிப்பு தற்போது ஸ்பெயினில் நடைபெற்று வருகின்றது.

good bad ugly aadik ravichanran ajithkumar

மிகவும் தீவிரமாக படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் குட் பேட் அக்லி படத்தில் இருந்து அஜித்தின் புதிய லுக்கினை படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தனது எக்ஸ் பக்கத்தில், " அசத்தலாக தோற்றம் அளிக்கும் அஜித்குமாரின் இந்த புகைப்படம் ஸ்பெயின் உள்ள மார்ட்ரிட்டில் படப்பிடிப்பு நடைபெற்றபோது எடுக்கப்பட்டது. படம் கட்டாயம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும்" என தெரிவித்துள்ளார். இவரது இந்த பதிவு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

புது லுக்: குட் பேட் அக்லி படத்தின் அறிவிப்பு வந்ததுமே படத்தின் பெயருக்காக இந்த படத்தின் மீது தனி எதிர்பார்ப்பே ஏற்பட்டது. அதன் பின்னர் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி பிரமாண்டமான வரவேற்பைப் பெற்றது. அதேபோல் படம் வெளியிட்ட இரண்டாவது போஸ்டர் வெளியிடப்பட்டு 24 மணி நேரத்தில் உலகம் முழுவதும் இருந்து எக்ஸ் தளத்தில் அதிகமானோர் பார்த்த மூவி போஸ்டர் என்ற சாதனையைப் படைத்தது. அதாவது குட் பேட் அக்லி படத்தின் இரண்டாவது போஸ்டரை 62 மில்லியனுக்கும் அதிகமானோர் 24 மணி நேரத்தில் பார்த்துள்ளனர் என படக்குழு தெரிவித்தது. மேலும் ரசிகர்களுக்கு நன்றி கூறும் விதமாக தேங்க்ஸ் மாமே எனவும் படக்குழு அப்போது தெரிவித்திருந்தது.

good bad ugly aadik ravichanran ajithkumar

ஹாலிவுட் வில்லன்: இந்நிலையில் படக்குழு தற்போது வெளியிட்டுள்ள நியூ லுக்கில் அஜித்குமார் பக்காவான ஹாலிவுட் படத்தின் வில்லைனைப் போல் காட்சி அளிக்கின்றார் என அவரது ரசிகர்கள் அந்த புகைப்படத்தை இணையத்தில் வேகமாக பகிர்ந்து வருகின்றனர். மேலும் படம் கட்டாயம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என்பதால், விடாமுயற்சி படம் நவம்பர் மாதத்தின் இறுதியிலோ அல்லது டிசம்பர் மாதத்தின் தொடக்கத்திலே ரிலீஸ் ஆக அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகின்றது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X