1000 தியேட்டர்களில் குட் பேட் அக்லி.. ரூ.500 கோடி கன்பார்ம்.. பட்டாஸோடு அஜித் வராரு மாமே!
சென்னை: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லி திரைப்படம் ஏப்ரல்10ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. படம் வெளியாவதற்கு முன்பே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஒவ்வொரு நாளும் படத்தின் அப்டேட்டை படக்குழுவினர் அள்ளித் தருவதால் செம குஷியில் உள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளிவந்து படத்தின் மீதான எதிர்பார்ப்பை பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்நிலையில், ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடும் அளவிற்கு டபுள் அப்டேட் வந்துள்ளது. வசூலும் கோடியை மிஞ்சுமாம்.
GBU டீசர்: விடாமுயற்சி திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாததால், அஜித் ரசிகர்கள் குட் பேட் அக்லி படத்தை மலைபோல் நம்பியுள்ளனர். அஜித் கரியரில் மிக முக்கியமான படமாக பார்க்கப்படுகிறது. அஜித்தின் தீவிர ரசிகரான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. இதில் அஜித் வெவ்வேறு தோற்றங்களில் வந்தது செம மாஸாக இருந்தது. கண்டிப்பாக இந்த காட்சிகள் எல்லாம் திரையரங்கில் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. டீசரின் மேக்கிங் வீடியோவை வெளியிட்ட படக்குழு படத்தின் முதல் சிங்கிள் மார்ச் 18ஆம் தேதி வெளியாகும் என அந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டது.

ஜி.வி., தந்த அப்டேட்: படத்தின் முதல் சிங்கிள் குறித்த வீடியோ வெளியான சில நிமிடங்களிலேயே படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் பட்டாசை கொளுத்தி போட்டது போன்ற அப்டேட்டை தந்தார். குட் பேட் அக்லி படத்தின் முதல் சிங்கிள் ஹை வோல்டேஜ் எலிவேஷன் டார்க்காகவும், அது ஒரு தனிப்பட்ட நபரை அக்மார்க் ஒரிஜினல் சம்பவமாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் சீக்கிரம் வரும் மாமே, சுட சுட ரெடி பண்ணிட்டு இருக்கோம் என அவர் தெரிவித்தார். இதுவே ரசிகர்களுக்கு பட்டாசு போட்டு கொண்டாடியது போல் இருந்தது. சீக்கிரம் வெளியிடுங்க என ரசிகர்கள் தெரிவித்தனர்.
250 கோடி பட்ஜெட்: புஷ்பா 2 படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து குட் பேட் அக்லி படத்தை மைத்திரி மூவி மேக்கர்ஸ் பெரிய பட்ஜெட்டில் உருவாக்கியுள்ளது. முதல் முறையாக அஜித்துடன் தயாரிப்பு நிறுவனம் கைகோர்த்துள்ளது. இந்த நிலையில், இப்படத்தின் பட்ஜெட் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, குட் பேட் அக்லி திரைப்படத்தை ரூ. 250 கோடி பட்ஜெட்டில் மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளதாக கூறப்படுகிறது.

யார் அந்த பிரபலம்?: இதனைத்தொடர்ந்து இப்படத்தில் முக்கிய நடிகர் ஒருவர் கேமியோ ரோலில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த நடிகர் அஜித்தின் தீவிர ரசிகர் என்றும் கூறப்படுகிறது. இதனால், படத்திற்கான எதிர்பார்ப்பை காட்டிலும் யாராக இருக்கக் கூடும் என்று நெட்டிசன்கள் தேட தொடங்கிவிட்டனர். இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வெளியாகவில்லை. ஆனால், கேமியோ ரோல் பத்திக்குமாம்.
500 கோடி உறுதி: விடாமுயற்சி படம் அஜித்திற்கும் மட்டும் அல்ல அஜித் ரசிகர்களுக்கும் கைகொடுக்கவில்லை. வசூல் ரீதியாகவும் பெரிய நம்பர்களை தொடவில்லை. இருப்பினும் குட் பேட் அக்லி படத்தில் பில்லா, வேதாளம், வாலி போன்ற படங்களின் ரெபரென்ஸ் ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளதாம். ஏப்ரல் பத்தாம் தேதி வெளியாகும் இப்படம் தமிழகத்தில் மட்டும் 1000 தியேட்டர்களில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. அதையும் தாண்டி உலகளவில் இப்படத்தை அதிக தியேட்டர்களில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாம். படத்தின் பட்ஜெட்டை தாண்டி இப்படம் ரூ.500 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைக்கும் என்பது உறுதியாகிவிட்டதாம். படம் புஷ்வானம் மாதிரி இல்லாமல் ராக்கெட் ரேஞ்சில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











