குட் பேட் அக்லி கண்டிப்பா பாக்ஸ் ஆபீஸ் ஹிட் அடிக்கும்.. இந்த ஆண்டு அதற்கு சாட்சியாக மாறிய 3 படங்கள்!

சென்னை: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார், த்ரிஷா, பிரசன்னா, அர்ஜுன் தாஸ், சுனில் நடிப்பில் உருவாகி வரும் குட் பேட் அக்லி படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். வரும் ஏப்ரல் 10ம் தேதி வெளியாகும் அந்த படம் கண்டிப்பாக விடாமுயற்சி படம் போல மண்ணை கவ்வாது என்றும் மிகப்பெரிய வெற்றியை பெறும் எனக் கூறுகின்றனர். அதற்கு சாட்சியாக இந்த ஆண்டு இதுவரை வெளியாகி ஹிட் அடித்த 3 படங்களையே சுட்டிக் காட்டுகின்றனர்.

தியேட்டருக்கு ரசிகர்களை வரவழைக்க வேண்டுமென்றால் அவர்கள் எதிர்பார்க்கும் ஒரே விஷயம் அந்த 2.30 மணி நேரம் மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் இருக்க வேண்டும் என்பது தான். ஆனால், அப்படி வரும் ரசிகர்களை உருக வைக்கிறேன், அட்வைஸ் பண்றேன், கிளாஸ் எடுக்கிறேன், புதுமையான படைப்பை காட்டுகிறேன் என இயக்குநர்கள் மொக்கைப் போட்டால் நிச்சயம் ரசிகர்கள் அந்த பக்கமே தலை வைத்து படுக்கமாட்டார்கள் என்பதற்கும் இந்த ஆண்டு வெளியான பல படங்கள் சாட்சியாக உள்ளன.

Good Bad Ugly will turn massive blockbuster if fun elements perfectly blended like these 3 movies

இந்த ஆண்டு தமிழில் மிகப்பெரிய வெற்றிப் படங்களாக மாறிய படங்களின் லிஸ்ட்டும் அதனால் குட் பேட் அக்லி படத்துக்கு அடிக்கப்போகும் ஜாக்பாட் குறித்தும் இங்கே விரிவாக பார்க்கலாம் வாங்க..

மத கஜ ராஜா: பொங்கலுக்கு புதிதாக வெளியான வணங்கான், காதலிக்க நேரமில்லை, நேசிப்பாயா உள்ளிட்ட புதிய படங்கள் பெரிதாக வசூல் வேட்டை நடத்தாத நிலையில், 12 ஆண்டுகளுக்கு முன்பாக சுந்தர். சி இயக்கத்தில் விஷால், வரலட்சுமி சரத்குமார், அஞ்சலி, சந்தானம் நடிப்பில் வெளியான மத கஜ ராஜா திரைப்படம் 50 கோடி வசூல் வேட்டை நடத்தியது. படத்தில் ரசிகர்களுக்குத் தேவையான எண்டர்டெயின்மெண்ட் சரியாக இருந்தது தான் வெற்றிக்கு காரணம். நல்லதா நாலு சீன் இருந்தால் கூட ஒரு படத்தை காப்பாற்றி விடலாம் என்றும் ரசிகர்கள் படம் பார்க்க தியேட்டருக்கு வருவார்கள் என்பதையும் நிரூபித்தது.

Good Bad Ugly will turn massive blockbuster if fun elements perfectly blended like these 3 movies

குடும்பஸ்தன்: பிரம்மாண்ட பட்ஜெட்டில் வெளியான ஷங்கரின் கேம் சேஞ்சர் படத்தைக் கூட ரசிகர்கள் பெரிதாக கண்டுக்கொள்ளவில்லை. ஆனால், மணிகண்டன் நடிப்பில் நக்கலைட்ஸ் டீமை சேர்ந்த இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி கலக்கலாக இயக்கியிருந்தார். குடும்பத்தில் ஏற்படும் பணக் கஷ்டத்தையே படு ஜாலியாக கொடுத்து ரசிகர்களை கடைசி வரை சிரிக்க வைத்ததில் தான் அந்த படம் வெற்றியை கண்டது. கேம் சேஞ்சர் பாடலுக்கு செலவு செய்த பணத்தில் குடும்பஸ்தன் போல 10 நல்ல படங்களை எடுத்து லாபம் பார்த்திருக்கலாம்.

டிராகன்: விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் ரிலீஸ் தள்ளிப்போனதால் தான் வசூல் வரவில்லை என்றும் பிப்ரவரி மாதம் வறட்சி மாதம் என்றும் முட்டுக் கொடுத்தனர். ஆனால், விடாமுயற்சி படமே அஜர்பைஜான் ரோடு போல வறட்சியாக இருந்தது தான் பெரிய மைனஸ். அதே மாத இறுதியில் வெளியாகி ரசிகர்களை ஜாலியாக சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த பிரதீப் ரங்கநாதனின் டிராகன் திரைப்படம் 120 கோடி வசூலை நோக்கி நகர்ந்துக் கொண்டிருப்பதே நல்ல உதாரணம்.

Good Bad Ugly will turn massive blockbuster if fun elements perfectly blended like these 3 movies

குட் பேட் அக்லிக்கு பெரிய வாய்ப்பு: அஜித் குமார் ரசிகர்கள் மற்றும் தியேட்டருக்குச் செல்லும் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் விஷயமாக இருக்கும் எண்டர்டெயின்மெண்ட் கன்டென்ட் குட் பேட் அக்லி படத்தில் நிறையவே ஆதிக் ரவிச்சந்திரன் வைத்திருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. விஷால் நடித்த மார்க் ஆண்டனி படமும் 100 கோடி வசூல் ஈட்ட அந்த மாயாஜாலம் தான் காரணம். எந்த ஜானர் படம் வேண்டுமானால் எடுக்கலாம். என்ன கருத்து வேண்டுமானால் சொல்லலாம். ஆனால், ரசிகர்கள் ரசிக்கும் படியும் மனக்கவலை மறந்து சிரிக்கும்படியும் இயக்குநர் சொன்னால் வெற்றி கிடைக்கும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X