குட் பை மாஸ்டர்.. கொரோனாவால் மறைந்த இயக்குநர் கேவி ஆனந்த்.. வீடியோ வெளியிட்டு அசிஸ்டன்ட்ஸ் அஞ்சலி!

சென்னை: மறைந்த இயக்குநர் கேவி ஆனந்துக்கு அவரது உதவியாளர்கள் வீடியோ வெளியிட்டு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

ஒளிப்பதிவாளர், இயக்குநர், போட்டோ ஜர்னலிஸ்ட் என தொட்ட துறையில் எல்லாம் வெற்றி தடம் பதித்தவர் இயக்குநர் கேவி ஆனந்த்.

தமிழ் சினிமாவில் சிறந்த ஒளிப்பதிவாளராகவும் இயக்குநராகவும் திகழ்ந்தவர் கேவி ஆனந்த். தமிழ் மட்டுமின்றி மலையாளம் தெலுங்கு, இந்தி என மற்ற மொழிகளிலும் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.

ஏராளமான விருதுகள்

ஏராளமான விருதுகள்

மீரா, சிவாஜி, மாற்றான், கவண் உள்ளிட்ட படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துள்ளார் கேவி ஆனந்த். தேசிய விருது மட்டுமின்றி, பிலிம் பேர் விருது, சைமா விருது, சிக்கா விருது என ஏராளமான விருதுகளையும் குவித்துள்ளார் கேவி ஆனந்த்.

Recommended Video

KV Anand -திற்கு நடந்தது என்ன? முழு விவரம் | #RIPKVAnand
இரண்டு வாரங்களுக்கு முன்பு

இரண்டு வாரங்களுக்கு முன்பு

இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் இயக்குநர் கேவி ஆனந்துக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து சென்னை மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் கேவி ஆனந்த்.

பெரும் சோகம்

பெரும் சோகம்

ஆனால் சிகிச்சைப் பலனின்றி கடந்த மாதம் 30ஆம் தேதி காலை இயக்குநர் கேவி ஆனந்த் மரணமடைந்தார். அவரது திடீர் மறைவு திரைத்துறையினர் மத்தியிலும் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

அழகான தருணங்கள்

இந்நிலையில் அவருடைய உதவியாளர்களும் உதவி இயக்குநர்களும் இணைந்து அவருக்கு அஞ்சலி செலுத்தும் வீடியோவை வெளியிட்டுள்ளனர். மாற்றான் படத்தில் இடம்பெற்ற யாரோ யாரோ பாடல் பின்னணியில் ஒலிக்க கேவி ஆனந்த் படப்பிடிப்பு தளத்தில் இருந்தப்போது பதிவு செய்யப்பட்ட அவரது அழகான தருணங்கள் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன.

குட் பை மாஸ்டர்

குட் பை மாஸ்டர்

ஷூட்டிங் ஸ்பாட்டில் தனது குழுவினருடன் சந்தோஷமாக கேவி ஆனந்த் பணியாற்றிய தருணங்கள் மற்றும் வயல் வெளியில் நடப்பது என அவருடைய நினைவுகள் அனைத்தும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது. கேவி ஆனந்தின் உதவியாளர்கள் 25 பேர் சேர்ந்து குட் பை மாஸ்டர் என்ற இந்த வீடியோவை வெளியிட்டு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

Read more about: kv anand
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X